குளிர்ச்சி
பொருள்
குளிர்ச்சி(உ)
- குளிர்தன்மை; குளுமை; சீதளம்
- சைத்தியோபசாரம்
- இனிமையானது
- மரத்துப்போய்ச் சில்லிடுகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- chillness, coolness, cold, coldness
- the act of cooling, refreshing with cordials, fans, etc
- that which is sweet, gratifying or pleasing
- numbness, frigidity, as in death
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- இக்கென்ப கரும்பு கள்ளாம் ஈரமே குளிர்ச்சி (சூடாமணி நிகண்டு, மதுரைத்திட்டம்)
- கொட்டிய நீரில் குளிர்ச்சி உண்டோ -- இந்தக் கோடை படுத்திடும் நாளில்? (இசை அமுது, பாரதிதாசன், மதுரைத்திட்டம்)
- கோதறுங் குளிர்ச்சி யெய்தி நடுங்கின கொடிக ளெல்லாம் (சீறாப்புராணம், மதுரைத்திட்டம்)
- ஏதோ ஏதோர் உணர்ச்சி எரி தழலில் மழையின் குளிர்ச்சி (திரைப்பாடல்)
- நீர் நிலையின் நெளிவினிலே என்னைக் கண்டாராம் நெருங்கி அதில் இறங்கினாலோ குளிர்ச்சி இல்லையாம் (திரைப்பாடல்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குளிர்ச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ + s