சொண்டு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சொண்டு, .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- beak, bill
- lip
- blubber lip
- thick brim of a pot or vessel
- baldness of head
- imputation; fault
- mean person
விளக்கம்
பயன்பாடு
- "யாரோ ஒருவருக்காக உங்கள் ஆராய்ச்சியை பாதியில் நிறுத்திவிட்டு போகமுடியுமா?" என்று அவரிடம் கேட்டேன். அவருடைய தாடி துடித்தது. சொண்டுகளைக் கடித்தார். மௌனமாக்கப்பட்ட செல்பேசி உறுமுவதுபோல உறுமினார். (தீயோர் உலகம், அ.முத்துலிங்கம்)
- மாமலிகா என ஒன்று. பார்ப்பதற்கு பாயசம் போலவும் இருந்தது, பால்கஞ்சி போலவும் இருந்தது. ஆனால் ருசி இரண்டுமே அல்ல. விவரிக்க முடியாத ஒரு புதிய ருசி. உலர்ந்த பழங்களில் தேனை ஊற்றி சூடாக்கிய ஓர் உணவு வகை. என்றுமே அனுபவித்திராத அந்த இனிப்புச் சுவையில் என்னுடைய சொண்டுகள் ஒட்டிக் கொண்டதால் உடனே அடுத்த கேள்வியை கேட்க முடியவில்லை. (புளிக்கவைத்த அப்பம், அ.முத்துலிங்கம்)
- சொண்டுப் பானை - thick-brimmed pot
- சொண்டு பேசு - abuse, revile
- சொண்டடி - blubber in speaking (like an old man)
- சொண்டன், சொண்டுக்காரன் - thick, blubber-lipped person
- சொண்டுத்தீன் - delicious food taken frequently
- சொண்டுக்கதை - telling stories to get something to eat; telling tales, exposing secrets in order to please, blabbing
- சொண்டுகூட்டு - protrude the lips--as a child beginning to talk - இதழ் கூட்டு
- சொண்டு விற்க - tell tales, expose
- சொண்டுச்சாடை - telling a person what another has said to his discredit, a kind of tale-bearing
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- சுண்டு - சொண்டன் - சொண்டடி - சொண்டுகூட்டு - சொண்டுச்சாடை - சொண்டுத்தீன் - #
( மொழிகள் ) |
சான்றுகள் ---சொண்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி