பாயசம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாயசம் (பெ)
- பாயாசம் - பால், அரிசி, சர்க்கரை அல்லது வெல்லம் முதலியவற்றோடு சேர்த்துச் செய்யும் நெகிழ்ச்சியான இன்னமுது, கண்ணமுது; கன்னலமுது
- பாற்சொற்றிச் செடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சேமியா பாயசம்- vermicelli pudding
- இலை போட்டுச் சாப்பாடு. ஒரு துவையல், சாதம், ரசம், பாயசம், அப்புறம் தயிர் சாதம், ஊறுகாய். (சிரிப்பே சிறப்பு, இதழ் 3, பாக்கியம் ராமசாமி)
- "பிள்ளை வரான்; பாயசம், பட்சணம்னு விருந்துச் சமையல்லே தீவிரமா இருக்காளோ என்னமோ?" (துளசி மாடம், தீபம் நா. பார்த்தசாரதி)
- "வடை, பாயசத்தோடு சமையல் பண்ணு, உடனே இதைக் கொண்டாடியாகணும்" (ஞானச் செருக்கு, தீபம் நா. பார்த்தசாரதி)
- 'வயிறும் பிள்ளையுமாகக் கர்ப்பிணியாயிருக்கிற இவளைப் போன்ற அநாதைகளுக்கு வயிறு காயும் இந்த வேளையில் இதே தெருவில் பாயசமும் வடையும் சமைத்துச் சாப்பிடுகிறவர்களும் இருப்பார்களே? சமுதாய வாழ்க்கையில் உள்ள சுகதுக்கங்களில் எத்தனை முரண்பாடுகள்! (பொன் விலங்கு, தீபம் நா. பார்த்தசாரதி)
- பொட்டுக்கடலையைப் போட்டு வெல்லம் காய்ச்சி ஊற்றி ஒரு பாயசம் செய்வார்கள் (அத்வைதம் ஒரு விவாதம், ஜெயமோகன்)
- பக்கத்து இலைக்கு பாயசம் (பழமொழி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாயசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +