காய்ச்சு
பொருள்
காய்ச்சு(வி)
- காயச் செய்
- சமை
- தீயால் சூடாக்கு
- வெயிலில் அல்லது தீயருகில் உலர்த்து
- திட்டு, கடி
- நையப்புடை
- துணி முதலியவற்றுக்குச் சாயமிடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- boil
- cook
- heat by fire
- dry, warm, as in the sun or by putting near the fire
- scold, reprove, take to task
- beat, belabour
- dye, tinge, as a cloth
விளக்கம்
பயன்பாடு
- வெண்ணெயைக் காய்ச்சி உருக்கி நெய் செய்தாள்.
- அரிசிக் கஞ்சி காய்ச்சினாள்.
- அலுவலகத்தில் 40 சதவீதம் பேர் காலதாமதமாக வேலைக்கு வருவதைக் கண்டு எரிச்சலடைந்த லாலு, அவர்களை காய்ச்சி எடுத்தார் ([1])
- தோட்டத்தில் கரும்பு வெட்டி வெல்லம் காய்ச்சி முடிவதற்குப் பதினைந்து நாள் ஆகும் (சோலைமலை இளவரசி, கல்கி)
- கொல்லன் அந்த மீன் உருவம் உள்ள இடத்தை மறுபடியும் தீயில் காட்டிக் காய்ச்சி அதன் பேரில் சுத்தியால் அடித்தான் (பொன்னியின் செல்வன், கல்கி)
- ஆனால் ஐயோ! இது என்ன மேலே இவர் சொல்லும் செய்தி? செவியில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போலிருக்கிறதே! (பொன்னியின் செல்வன், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே! (பாரதியார்)
- காய்ச்சு (சொற்பிறப்பியல்)
ஆதாரங்கள் ---காய்ச்சு--- DDSA பதிப்பு + வின்சுலோ +