நற்சகுனம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நற்சகுனம், .
- நல்ல சகுனம், சுபசகுனம், நன்னிமித்தம்
- நிகழவிருக்கும் நன்மையை முன்கூட்டிச் சொல்லும் எனப் பாவிக்கப்படும் அறிகுறி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- நற்சகுனம் = நல் + சகுனம்
பயன்பாடு
- கிராமங்களில் வீட்டிலிருந்து புறப்படும்போது நிறைகுடம், சுமங்கலி, பசு, கன்று, கழுதை, பிணம் சுமந்த பாடை, வண்டிக் காளைகள் இவற்றை நற்சகுனங்கள் என்று கருதினார்கள். இன்றும் தூரா தொலைக்குப் பயணம் புறப்படும்போது, வீட்டின் படி இறங்கும்போது, சுமங்கலிப் பெண்களை எதிரே வரச் சொல்வார்கள். கல்யாணப் பெண்ணோ, மாப்பிள்ளையோ பயணம் மேற்கொள்-ளும்போது, வாடகை காருக்கு நற்சகுனமாக தண்ணீர்க் குடம் சுமந்த சுமங்கலிப் பெண்ணை எதிரே வரச் சொல்வார்கள். தற்செயலான நிகழ்வுதானே சகுனம் எனப்படுவது? வலிந்து வரச் செய்வது என்ன சகுன இலக்கணம் என்று தெரியவில்லை. பெரும்பாலும் அச்சம் மூல காரணமாக இருக்க வேண்டும். (சகுனம், நாஞ்சில்நாடன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- நற்சகுனம் x துர்ச்சகுனம்
- சகுனம் - நிமித்தம் - சுபசகுனம் - நன்னிமித்தம் - அபசகுனம் - துர்ச்சகுனம் - #
( மொழிகள் ) |
சான்றுகள் ---நற்சகுனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற