ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நுங்கு(பெ)

நுங்கு
நுங்கு சீவுதல்
படிமம்:A bunch of young palmyra fruit (நுங்கு)jpg
நுங்குக்குலை)
படிமம்:Climbing on Palmyra Tree (பனையேற்றம்)jpg
பனையேற்றம்
  1. இளம் பனங்காயின் உள்ளீடான உணவுப்பண்டம்
  2. நுங்குக்காய்

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. pulpy kernel of a tender palmyra fruit
  2. tender palmyra fruit
  • அதிக இளசான நுங்கைத் தோலுடன் தினம் 4--5 வீதம் மூன்று நாட்கள் சாப்பிடச் சீதபேதி போகும்...அதன் சலத்தைச் சாப்பிட்டால் தேகம் குளிர்ச்சியடையும், விக்கல் நிற்கும்...தேகத்திற்குப் பூச வியர்வைக்குரு நீங்கும்...பசியைத்தரும்...முற்றிய நுங்கு வாயு செய்வதுடன் பசி மந்தமும், வயிற்று வலியுமுண்டாக்கும்...ஆகவே உண்ணாதிருப்பது நலம்...
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நுங்கு சூன்றிட்டகண் (நாலடி. 44)
  • நுங்கின் றடிகண்புரையுங் குறுஞ்சுனை (கலித். 108, 40)

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

நுங்கு(வி)

  1. விழுங்கு
  2. ஆரப் பருகு
  3. கைக்கொள்ளு
  4. கெடு

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. swallow, devour
  2. drink in large draughts
  3. take possession of, capture
  4. perish; be destroyed
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மகரவாய் நுங்கிய சிகழிகை (கலித். 54)
  • நூறுநூறு குடங்களுநுங்கினான் (கம்பரா. கும்ப. 60)
  • பகைவர்முனுங்கி (பு. வெ. 4, 15)
  • வினைக ணுங்கிடாவே (சி. சி. 8, 35)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம் தொகு

பனங்காடி - பனங்காடு - பனங்காய்க்காடி - பனங்காரி - பனங்கிழங்கு - பனங்கிளி - பனங்கீரை - பனங்குட்டி - பனங்குடை - பனங்குத்து - பனங்குந்து - பனங்குருகு - பனங்குருத்து - பனங்குரும்பை - பனங்குற்றி - பனங்கூடல் - பனங்கை - பனங்கொட்டை - பனங்கோந்து - பனங்கோரை - பனசம் - பனசயித்தி - பனசை - பனசை - பனஞ்சக்கை - பனஞ்சட்டம் - பனஞ்சலாகை - பனஞ்சாணர் - பனஞ்சாத்து - பனஞ்சாறு - பனம்பழம் - பனைமரம் - பனங்கொட்டை - நுங்கு - பனையோலை - பனங்காய் - பதநீர் - பனைமரம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நுங்கு&oldid=1242736" இலிருந்து மீள்விக்கப்பட்டது