பதமை
பொருள்
பதமை(பெ)
- மென்மை, பதம், மிருது
- பதமையான ஓலை
- மந்த குணம்
- மெல்லோசை
- அமைதி, மெத்தனவு
- பதமையாகக் காரியம் பார்க்கிறவன்.
- இணக்கம்
- தாழ்மை
ஆங்கிலம் (பெ)
- softness, tenderness, mellowness, as of ripe fruits, of well-boiled food
- slowness, dullness
- lowness, softness of voice
- gentleness; mildness; deliberateness; calmness
- pliancy, smoothness
- submission; resignation
விளக்கம்
பயன்பாடு
- பதமையான குணம் - mild, gentle disposition
- பதமையான கடுதாசி - soft paper
- பதமையாகக் காரியம் பார்ப்பவன் - one who attends to a thing deliberately
(இலக்கியப் பயன்பாடு)
- பதமைபல படப்பேசி உறுபொருள் கொள் விலைமாதர் (திருப்பு. 121) - விருப்பமானச் சொற்களைப் கூறி பொருளைக் கொள்ளை கொள்ளும் விலைமாதர்
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பதமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +