பத்தி
தமிழ்
தொகுபொருள்
தொகு- பத்தி, பெயர்ச்சொல்.
- வரிசையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- பத்தியிற் குயிற்றிய... (சீவகசிந்தாமணி-83)
- வகுப்பைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- செய்தித்தாள் முதலியவற்றின் நீளவாட்டுப்பகுதியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- செய்தித்தாளில் இரண்டு பத்திகளில் உரை அச்சிடப்பட்டுள்ளது.
- பாத்தியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- முறைமையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- அலங்கார வேலைப்பாட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- பத்திப் பல்வினை... (பெருங்கதை-இலாவாண காண்டம், 6, 55)
- வீட்டிறப்பைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- வீட்டில் பத்தியிறக்கினார்கள்.
- தூண்களின் இடைவெளியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- யானையின் நடை வகையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- வினைதகு வட் டமும் வீதியும் பத்தியும்... (சீவகசிந்தாமணி-1839)
- கடவுள் முதலியோரிடத்திலுள்ள பற்றைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப் பவன்... (திருவாசகம்-2, 119)
- வழிபாட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- ஒழுக்கத்தைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- ஒரு தேரையும் ஒரு யானையையும் மூன்று குதிரைகளையும் ஐந்து காலாட்களையும் கொண்ட சிறிய படைப் பிரிவைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- நம்பிக்கையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- அன்பைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு
|
இலக்கிய மேற்கோள்கள்
தொகு- கம்பராமாயணம்: பல்பெரும் பதாகைப் பத்தி
- திருவாசகம்: பத்திநெறி அறிவித்துப் பழவினைகள்
- தேவாரம்: பத்தி தருவது நீறு
- நீலகேசி: பத்தி யினா னென்னா லுரைக்கப் படுகின்றதொன் றீங்குளதே
- மணிமேகலை: பத்தி வேதிகைப் பசும்பொற் றூணத்து
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +