பத்தை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பத்தை (பெ)
- காய்கறி, பழம் ஆகியவற்றின் சிறு துண்டு; கீற்று
- மூங்கில் முதலியவற்றின் நீளவாக்கில் பிளந்த துண்டு
- மண்ணோடு கூடிய பசும்புல் முதலியவற்றின் துண்டு/கற்றை
- குயவன் மட்பாண்டத்தைச் சக்கரத்தினின்றும் அறுக்குங் கருவி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- slice, as of coconut
- thin piece, split, strip, splint as of bamboo
- turf, patch
- a potter's tool with which the pot is removed from the wheel
விளக்கம்
பயன்பாடு
- கட்டிட வாசல்கaளின் நிழல்க்ளில் புல் பத்தை பத்தையாய்க் கிடக்கும். அதனால் இந்த வளாகத்தில் கால்நடைகளின் புழக்கம் அதிகம். வளாகத்தைச் சுற்றி வீடுள்ளவர்கள் இங்குள்ள புல் படுகைகளை நம்பி மாடு ஆடு வளர்த்து வருகிறார்கள் (தெரியாமலே, கந்தர்வன்)
- தேங்காயை பத்தை பத்தையாக வெட்டி மிளகாய், பொரிகடலையுடன் மிக்ஸியில் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும் ([1])
- குமார் வேலையிலே சேர்ந்து இன்னும் ஒரு மாசம் கூட ஆகலே. அதுக்குள்ளே அவனை நம்பி முள்ளங்கி பத்தை மாதிரி, இருபத்தையாயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பி இருக்கீங்களே ([2])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பத்தை--- DDSA பதிப்பு + வின்சுலோ +