பயனர் பேச்சு:Pazha.kandasamy/2011
அடாரி
தொகுதவறுதலாக விக்கிபீடியாவிற்கு பதிலாக விக்சனரியில் அடாரி பக்கத்தை செமிதுவிட்டேன். இதை விக்சனரியில் இருந்து எப்படி நீக்குவது? --Ahmasmi (பேச்சு) 17:38, 18 ஏப்ரல் 2012 (UTC)
- உங்கள் பதில் கண்டதும் ஏற்கனவே நீக்கிவிட்டேன். பழ.கந்தசாமி (பேச்சு) 18:09, 18 ஏப்ரல் 2012 (UTC)
தானியங்கி-இயங்குதளம்
தொகுநமது தளத்தினைப் போலவே கட்டற்ற மென்பொருளில் தானியங்கியை இயக்க விரும்புகிறேன். அல்லது நீங்கள் எக்ஸ்பி அல்லாத இயங்குதளத்தினைக் கையாள்வதால், நீங்களே பதிவேற்றத்தினைச் செய்தால் நன்றாக இருக்கும். உங்கள் நேரம் இருக்குமாயின் , உங்களிடமிருந்து அம்முறையைக் கற்க சித்தமாக இருக்கிறேன். எதிர்நோக்கும்,...--த*உழவன் 02:17, 15 அக்டோபர் 2010 (UTC)
- த*உழவனே! அதைப்பற்றி கூகுளில் உரையாட வரும் சனியன்று இந்திய நேரம் காலை 6-7 சரிப்படுமா? நன்றி. பழ.கந்தசாமி 03:20, 15 அக்டோபர் 2010 (UTC)
- அடடா!உங்களுரைய இப்பொழுதே பார்த்தேன். இன்று ஏனோ மின்தடை ஆகவில்லை? அநேகமாக இன்னும் அரைமணிநேரத்தில் மின்தடை வரலாம்? மின்தடைவந்தால் ஒருமணிநேரம் கழித்து இந்திய நேரம் 10-12.30 வரை காத்திருக்கிறேன். முடிந்தால் தொலைபேசியில் அழைக்கவும். நன்றி. நேற்று இரவு ஆயுதபூசைக்காக நண்பனின் பட்டறையில் உதவியாக இருந்தேன். --த*உழவன் 02:59, 16 அக்டோபர் 2010 (UTC)
நாளைக் காலை இந்திய நேரம்5.30மணிமுதல் காத்திருக்கிறேன். உங்கள் நிலை அறிய ஆவல்--த*உழவன் 16:38, 16 அக்டோபர் 2010 (UTC)
புதிய படிவப் பயன்பாடு
தொகுபுதிய சொற்களைச் சேர்க்கவும் என்பதிலிருந்து, புதிய படிவத்தை எடுத்து பயன்படுத்தக் கேட்டுக் கொள்கிறேன்--த*உழவன் 02:30, 7 நவம்பர் 2010 (UTC)
- நன்றி. புதிய படிவம் எங்குள்ளது? புதிய படிவத்துக்கும் எனதுக்கும் என்ன வேறுபாடு? பழ.கந்தசாமி 02:44, 7 நவம்பர் 2010 (UTC)
- மேலுள்ள விக்சனரி:புதிய பக்கத்தை உருவாக்குதல் என்பதில் ஆங்கில பெயர்ச்சொல்லுக்குரியதே புதுப்படிவம் என்று குறிப்பிட்டேன். இது த.இ.க.கழகச்சொற்களில் பயன்படுத்திய படிவம் ஆகும்.
- வேறுபாடுகள் வருமாறு;-
- ஒலிப்பு என்ற வெளிர் நீலநிறப் பட்டை
- {{வரியமை}.} என்பது பயன்படுத்தும் போது, {{பயன்பாடு}.} என்ற வார்ப்புருவும் வருகிறது.பயன்பாடு என்பதனை பயன்படுத்தும் போது, வரியமை என்பது வராது. ஒரு படிவத்தில், ஒரே பயன்பாட்டிற்கு இரண்டு வார்ப்புருக்கள் வரக்கூடாது என்று இரவி உரைத்திருந்தார். எனவே, வரியமை என்பதனை, பயன்பாடு என்ற வார்ப்புருவாக மாற்றியுள்ளோம்.
- {{ஆங்கிலம்-சொற்பிறப்பியல்}.},{{ஆங்கில ஆதாரங்கள்}.} என்ற வார்ப்புருக்கள், அனைவரும் உணரும் படி முழுச்சொல்லும் தெரியுமாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- {.{விளக்கம்}} என்பதில் {.{ஆங்கிலம்-சொற்பிறப்பியல்}} என்ற வார்ப்புரு பயன்படுத்தப்படுவதால், அதற்கு அடுத்துவரும் {.{பயன்பாடு}} என்பதின் நிறப்பட்டை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும்.
- உரிய இடங்களில் :*... ஆகிய குறியீடுகள் எழுதப்பட்டுள்ளன.
- {.{பெயர்ச்சொல்}} என்ற வார்ப்புரு, 2005ஆம் ஆண்டிலேயே தோற்றுவிக்கப்பட்டதால், அதற்கு பின் வந்த அதே பொருளுடைய வார்ப்புரு பயன்பாடு பின்னுக்குத் தள்ளப்பட்டது.--த*உழவன் 17:49, 7 நவம்பர் 2010 (UTC)
கிழமைகள்
தொகு1)பகுப்பு:கிழமைகள் என்பதிலுள்ள சொற்களைக் காணுங்கள். விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதும் நடைமுறையையின் படி, சிறு மாற்றங்கள் செய்துள்ளேன். அனைத்தினையும் மாற்றவில்லை. படங்களில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளேன். தங்கள் கருத்தறிய ஆவல்.--த*உழவன் 05:42, 29 நவம்பர் 2010 (UTC)
- ஒரு சொல்லுக்குப் பல பொருட்கள் வரும்போது அவற்றினிடையே கோடிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். பழ.கந்தசாமி 08
- 28, 30 நவம்பர் 2010 (UTC)
- மிகுந்த பணியடர்விலும் கருத்திட்டமைக்கு நன்றி. உங்களின் கருத்தறிந்தேன். மகிழ்ச்சி. ஒரு (எ. கா.) தர கேட்டுக் கொள்கிறேன். வங்காள(bengali) மொழியில் ஒலிக்கோப்புகளோடு ஒரு 1000 சொற்களை உருவாக்க, வங்காள மருத்துவருடன் இணைய உள்ளேன். அடுத்த மாதம் முதல் அக்கோப்புகளை விக்கி ஊடக நடுவத்தில் பதிவேற்றவேன். அதற்கு முன் உங்களுடன் அ.அ.வில் உரையாட விரும்புகிறேன். இவ்வார இறுதியில் அரைமணி நேரம் ஒதுக்க வேண்டுகிறேன். உங்கள் நிலை குறித்து மின்னஞ்சல் அனுப்பிவிடுங்கள். அதன்படி காத்திருக்கிறேன்.--த*உழவன் 16:52, 30 நவம்பர் 2010 (UTC)
- த*உழவன்! சனி காலை உங்கள் நேரம் 7 ஒத்து வருமா? பழ.கந்தசாமி 17:20, 30 நவம்பர் 2010 (UTC)
காத்திருப்பேன்.வணக்கம்--த*உழவன் 01:14, 2 டிசம்பர் 2010 (UTC)
2) பல மாதங்களுக்கு முன் தட்டச்சு வசதியைப் பற்றி கூறியீருந்தீர்கள். அதனை தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்படுத்தியுள்ளனர். அதனைப் பார்க்கக் கோருகிறேன்.--த*உழவன் 16:03, 29 நவம்பர் 2010 (UTC)
- த*உழவன்! அம்மாதிரி வசதி விக்சனரியில் நன்றாக இருக்கும். பழ.கந்தசாமி 08:28, 30 நவம்பர் 2010 (UTC)
- த.வி.பீடியாவில் சோதனைஓட்டம் நடைபெறுகிறது. விரைவில் அனைத்து தமிழ் விக்கித்திட்டங்களிலும் கொணர்வர் என எண்ணுகிறேன். காத்திருப்போம்.--த*உழவன் 16:52, 30 நவம்பர் 2010 (UTC)
/* பயன்பாடு */
தொகுகந்தசாமி! வணக்கம். நீங்கள் தரும் பயன்பாடுகள் சிறப்பு. அவற்றைத் தேடித்தேடி நீங்கள் சேர்ப்பது அளப்பரிய பணி. தொடருங்கள். --பரிதிமதி 03:30, 15 டிசம்பர் 2010 (UTC)
கனட நண்பர்களின் உதவி
தொகுநற்கீரனும், செல்வாவும் கனட தமிழ் குழாமின் மூலமாக சில ஆயிரம் சொற்களைப் பதிவேற்ற ஈடுபட்டுள்ளனர். இறுதிகட்ட பணிகள் நடைபெறுகிறது. விரைவில் தமிழ்விக்சனரியின் எண்ணிக்கை சில ஆயிரங்கள் கூடும்.
வழமைபோல தகவல் எந்திரன் தன் கடமையைச்செய்வான்.
நாளையோ, நாளை மறுநாளோ, நிழற்படக்கருவிபற்றி உங்களிடம் பேச விரும்புகிறேன். உங்களுக்கு நேரம் இருக்குமா? கிடைக்கவில்லையெனில், மின்னஞ்சல் அனுப்பகிறேன். வணக்கம்.--த*உழவன் 07:15, 7 சனவரி 2011 (UTC)
- தகவலுழவன், சனிக்கிழமை காலை 7.30 மணி (இந்திய நேரம்) சந்திப்போம். பழ.கந்தசாமி 16:06, 7 சனவரி 2011 (UTC)
- எனது இணைய இணைப்பில் ஏதோ இடைஞ்சல். இப்பொழுது முடியவில்லையெனில், மின்னஞ்சல் அனுப்புகிறேன்.--த*உழவன் 01:56, 8 சனவரி 2011 (UTC)
- சில நிமிடங்கள் மின்னஞ்சலைக் காண்க.நன்றி.--த*உழவன் 05:36, 10 சனவரி 2011 (UTC)
நிகழ்படம்
தொகுநண்பனின் நிழற்படக்கருவிமூலம் எடுத்து நிகழ்படத்தை மீன் இங்கு காணலாம்.--த*உழவன் 01:41, 11 சனவரி 2011 (UTC)
- மின்னஞ்சலில் தங்கள் கருத்தறிந்தேன். குறிப்புகளை அனுப்பியுள்ளேன்.அவசரமில்லை. இனி காலை நேரங்களில் மட்டுமே என்னால் பங்களிக்க முடியும். மற்றவை பிறகு.. தங்களின் இதமான ஆதரவுக்கு மிக்க நன்றி. வணக்கம்.--த*உழவன் 17:10, 15 சனவரி 2011 (UTC)
- 2,3 வாரங்களாக சந்திக்க இயலவில்லை. எனவே, தங்களை இன்று அ.அ சந்திக்க இயலுமா?--த*உழவன் 01:38, 22 சனவரி 2011 (UTC)
நீக்கல் வேண்டுகோள்
தொகுசத்தியவாணி முத்து விக்கிப்பீடியாவில் சேமிக்கப்படுவதற்கு பதில் தவறுதலாக இங்கு சேமிக்கப்பட்டுவிட்டது. நீக்க வேண்டுகிறேன்.--Sodabottle 16:41, 23 சனவரி 2011 (UTC)
அடிப்படைச் சீனம்
தொகுஅடிப்படைச் சீனம் குறித்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். இப்பக்கத்தினையும் (零) காணவும்.--த*உழவன் 01:29, 25 சனவரி 2011 (UTC)
sitenotice அறிவிப்பு
தொகுமீடியாவிக்கி:sitenotice இல் புதிய பட்டறைகளுக்கான பின்வரும் அறிவிப்புகளை இணைத்து இற்றைப்படுத்த வேண்டுகிறேன்.
சென்னையில் பெப்ரவரி 6, 2011 அன்று விக்கிப்பீடியா பட்டறை
திருச்சியில் பெப்ரவரி 20, 2011 அன்று விக்கிப்பீடியா பட்டறை
--Sodabottle 09:35, 29 சனவரி 2011 (UTC)
பெப்ரவரி 6, 2011 கார்ட்டே பிலாஞ்சு பட்டறை, சென்னை.
தொகுகந்தசாமி! பெப்ரவரி 6, 2011 சென்னை எம்.ஐ.டீ. யில் நடைபெறவுள்ள கார்ட்டே பிலாஞ்சு பட்டறையில் [1] விக்சனரியைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்று எண்ணுகிறேன். என்னென்ன விசயங்களைப் பற்றி பேசலாம் என்று கூறவும். --பரிதிமதி 10:58, 29 சனவரி 2011 (UTC)
படங்களில் பட்டைகளின் அளவு
தொகுசிறுகரடி, bear, sloth இவற்றில் உள்ள நிறப்பட்டைகளைப் பாருங்கள் வேறுபடுகிறது. அவ்வாறு இல்லாமல், மேலுள்ள தேடு சாளரம் வரை அந்நிறப்பட்டைகள் இருப்பின், ஒரே அளவுடன் அழகாக இருக்குமெனக் கருதுகிறேன். இரண்டிற்கும் மேற்பட்ட படங்கள், சொல்வளம் போன்றைவை வரும் போது, இதன் தேவை இன்னும் புலனாகும். உங்களின் கருத்தறிய ஆவல். --த*உழவன் 02:23, 3 பெப்ரவரி 2011 (UTC)
- த*உழவன், பார்த்தேன். சற்று வேறுபாடாகத்தான் தெரிகிறது. என்ன செய்வது, எப்படி எனச் சிந்திப்போம். பழ.கந்தசாமி 03:11, 3 பெப்ரவரி 2011 (UTC)
செய்திகளில் உள்ள சொற்கள்
தொகுவிக்சனரியில், செய்திகளில் உள்ள சொற்கள் என்றால் என்ன?--Eldiaar 17:16, 12 மார்ச் 2011 (UTC)
- இப்பகுப்பு என்ன நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டதெனச் சரியாகத் தெரியவில்லை. எனினும், தற்போது செய்திகளில் வரும் சொற்கள் என்று நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக "அலைக்கற்றை". பழ.கந்தசாமி 17:22, 12 மார்ச் 2011 (UTC)
நன்றி
தொகுஎனினும் இது குறித்துப் புதிய பக்கங்களை எவ்வாறு ஏற்படுத்தலாம்?--Eldiaar 17:31, 12 மார்ச் 2011 (UTC)
கந்தசாமி என்றொருவர் சற்று முன் என்னுடன் பேசினார் அது நீங்கள்தானா? அப்படியென்றால் என் மின் அஞ்சல், eldiaar@gmail.com --Eldiaar 17:54, 12 மார்ச் 2011 (UTC)
insulin என்ற சொல்லுக்கு ஒரு விளக்கம் அளித்துள்ளேன். சரியாக இருக்கிறதா என்று பார்க்கவும்.---Eldiaar 19:36, 12 மார்ச் 2011 (UTC)
Waiting
தொகுஎனக்கு(மேற் காண் வினாவிற்கு) இன்னும் உங்கள் பதில்(மறுமொழி) வரவில்லை......? ---Eldiaar 17:04, 13 மார்ச் 2011 (UTC)
- Eldiaar, அது நன்றாக உள்ளது. இருப்பினும், என்னைவிட இங்கு பங்களித்துவரும் மருத்துவர் செந்தி (Drsrisenthil) இதற்குப் பொருத்தமானவர் என்பதால், அவரை insulin விளக்கத்தைப் பார்க்குமாறு கேட்டுள்ளேன், அவரும் இசைந்துள்ளார். அவருடைய பேச்சு/உரையாடல் பக்கத்தினைப் பார்க்கவும். நன்றி. பழ.கந்தசாமி 21:42, 13 மார்ச் 2011 (UTC)
- இங்கே பாருங்கள் பேச்சு:insulin, நன்றி.--சி. செந்தி 19:57, 21 மார்ச் 2011 (UTC)
விக்கியன்பு
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது விக்கியன்பு என்றொரு கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை விக்சனரியிலும் நிறுவலாமா? தங்களது கருத்து தேவை. --Surya Prakash.S.A. 10:26, 21 மார்ச் 2011 (UTC)
- நிறுவலாம் என்றே நினைக்கிறேன். பங்களிப்பவர்களைப் பாராட்டிப் பதக்கம் வழங்கி, தக்கவைப்பது அவசியந்தான். நன்றி. பழ.கந்தசாமி 15:18, 21 மார்ச் 2011 (UTC)
AWB பயன்பாடு
தொகுஒரு இருநூற்றைம்பது சொற்களுக்கு மட்டும் AWB பயன்படுத்தி வார்ப்புரு மாற்றியுள்ளேன் (தானியங்கியாக அல்லாமல் பயனர் இயக்க முறையில்). புதிய பயனர் போலிய மொழி சொற்களை உருவாக்கி வருகிறார். அவருக்கு போலிய மொழி வார்ப்புருவை உருவாக்கித் தந்துள்ளேன். அதற்கு முன் அவர் (நேற்று) உருவாக்கிய சொற்களுக்கு மட்டும் ஒரு limited run விட்டுள்ளேன். அண்மைய மாற்றங்களில் மறைப்பதற்கு வசதியாக அவற்றை சிறு தொகுப்புகளாக குறித்துள்ளேன். --Sodabottle 14:23, 3 ஏப்ரல் 2011 (UTC)
தினம் ஒரு சொல் வார்ப்புரு
தொகுதினம் ஒரு சொல்லில் காட்சிப்படுத்தப்படும் பக்கங்களில் பின்வரும் வார்ப்புருவை (தேதிக்கேற்ப மாற்றி) இணைக்க வேண்டுகிறேன்: {{was wotd|2011|ஏப்ரல்|29}} --Sodabottle 14:24, 30 ஏப்ரல் 2011 (UTC)
- நன்றி, செய்கிறேன். பழ.கந்தசாமி 16
- 56, 30 ஏப்ரல் 2011 (UTC)
கனடிய சொற்பதிவேற்றம்
தொகுகனடிய நண்பரின் சொற்கோவைப் பதிவேற்றத்தை துவங்கலாம் என்று எண்ணுகிறேன். இங்கு உங்கள் ஆலோசனையையும் தரக் கோருகிறேன்.--15:38, 22 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- ஒரு இலட்சம் தாண்டும் உங்களுடன் இருந்தேன்.இப்பொழுது இரண்டு இலட்சத்தை தாண்டி வருகிறது. இருக்கிறீர்களா? அ.அ வில் காத்திருக்கிறேன். உங்களுக்கு இரவு துயில் நேரம் என்பதால், முடிந்தால் வரவும். இல்லையெனில், பரவாயில்லை. வணக்கம்--06:04, 25 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
எசுப்பானியப் பகுப்பு
தொகு- எசுப்பானியச் சொற்பதிவுகள் மகிழ்ச்சியைத் தருகிறது. எனினும், அதில் பகுப்புகளை இணைக்க மறந்துவீட்டீர்கள் போலுள்ளது. இனிவரும் சொற்களில், அதனை இணைக்கக் கோருகிறேன். மேலும், ஆலமரத்தடியில், இது பற்றி உங்கள் கருத்தறிய ஆவல்.--06:45, 29 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
எசுப்பானியப் புதுச்சொல்
தொகுபடிவப் பக்கத்திலுள்ள படிவத்திற்கும் , தாங்கள் இப்பொழுது பதிவேற்றும் படிவத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன. அவற்றினை ஒன்றிணைக்க வேண்டும். மற்றொன்று ஏற்கனவே உருவாக்கப்பட்ட வார்ப்புருக்களை அதில் இட வேண்டும். இன்னும் சிறிது நேரத்தில் எனக்கு மின் தடை வர உள்ளதால், இன்று இந்திய நேரம்காலை பத்துமணிக்குபிறகு, அவற்றின் வடிவத்தை அலசி, தங்களின் பார்வைக்கு கொண்டுவருகிறேன். அதுவரை எசுப்பானியப் புதுச்சொல் வேண்டாமென்றே எண்ணுகிறேன். ஒலிக்கோப்பு commons-இல் இருந்து, தற்போது விடுபடுகிறது. --02:46, 30 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- தகவலுழவன், பதிவேற்றத்தை நிறுத்தும் அளவுக்கு அடிப்படைப் பக்கவடிவத்தில் பெரிய மாற்றங்கள் இருப்பதாகத் தோன்றவில்லை. எனினும், வேறுபாடுகளை அலசி மாற்றிக்கொள்ளலாம்.பழ.கந்தசாமி 03:18, 30 மே 2011 (UTC)
இன்றுநெடுநேர மின்தடை.எதிர்பார்க்கவில்லை.வழக்கமாக ஒவ்வொரு மாதத்தின் 3வது புதன் வரும். காலை9மணிக்கு போன மின்சாரம், ஒருமணி நேரத்திற்கு முன்தான் வந்தது. பதிவேற்றத்தினை நிறைவாக செய்யவே, தற்காலிகமாக நிறுத்தக் கேட்டிருந்தேன். தேவையான மாற்றங்களை படிவப்பக்கத்தில் செய்துள்ளேன். இதன் மூலம் பலரின், வார்ப்புருக்களைப் பற்றிய கருத்துகளை, மறவாமல் ஒன்றிணைத்துள்ளேன். இனி, அதிலுள்ள தேவையற்ற வார்ப்புருக்களை சொற்களுக்கு ஏற்ப எடுத்துவிட்டு, பட்டைய கிளப்புங்க:)! இப்பக்கத்தில் ஒலிக்கோப்புகள் உள்ளன. அச்சொற்களை உருவாக்கினால், ஒலியோடு கற்க ஏதுவாகும். நன்றி. சந்திப்போம். வணக்கம்.--13:15, 30 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- த*உழவன், நன்றி. நீங்கள் குறிப்பிட்டபடி மாற்றிவிட்டேன். நன்றாயிருக்கிறது. பழ.கந்தசாமி 19:17, 30 மே 2011 (UTC)
ஜூன் - சூன்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் ஜூன் என்பதனை சூன் என்று பயன்படுத்துகின்றனர்.நாமும் அதனை பின்பற்றலாமென எண்ணுகிறேன். உங்களின் கருத்தறிய ஆவல்.--06:42, 31 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- நாளை மீடியாவிக்கியில் default ஆக பயன்படுத்தப்படுவது சூன் ஆ அல்லது ஜூன் ஆ என்று தெரிந்து விடும். இரு மாதங்கள் முன்பு செல்வா டிரான்ஸ்லேட் விக்கியில் மாற்றியுள்ளார். அது இங்கு வருகிறதா என்பதை உறுதி படுத்திவிட்டோமானால். “சூன்” என்று நகர்த்தி விடலாம். நாளை வரை பொறுத்திருங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 06:52, 31 மே 2011 (UTC)
தங்கள் தகவலுக்கு நன்றி.சோ.பா.! --06:54, 31 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- default ஆக சூன் தான் வருகிறது. அதற்கேற்றார் போல மாற்றிவிட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 03:24, 1 சூன் 2011 (UTC)
- நன்றி, நானும் நீங்களும் ஒரே நேரத்தில் அதை மாற்ற முயற்சி செய்தோம். பழ.கந்தசாமி 03:28, 1 சூன் 2011 (UTC)
முப்புள்ளிகள் இடல்
தொகு:* என்ற இந்த அரைப்புள்ளி, நட்சத்திரக் குறியீட்டிற்கு பிறகு எதுவும் எழுதவில்லையெனில், மூன்று புள்ளிகள் அமைத்தல் நலம்.எடுத்துக்காட்டாக, அத்தகைய மாற்றத்தை விளக்கம், பயன்பாடு வார்ப்புருக்களுக்கு அடுத்து aerobio சொல்லில் அமைத்திருக்கிறேன். இது பற்றி சுந்தர் கூறி உள்ளார். நாம் நினைவில் கொண்டால், இன்னும் சிறப்பாக இருக்கும்.
அப்புள்ளிகள் இடுவதால், இன்னும் நேரம் செலவாகும் என்று எண்ணுகிறீர்களா? பிறகு, புள்ளிகளை நீக்கவும் நேரம் செலவாகும் என்றும் எண்ணுகிறீர்களா? மூன்று புள்ளிகள் இருக்கும் இடத்தில் பங்களிக்கவும் என்ற அறிவிப்பை, படிவப்பக்கத்தில் தரலாம் என்ற நோக்கத்திலேயே, நான் இதனை இட விரும்புகிறேன். மற்றொன்று அழகிற்காக . மற்றவை தங்கள் கருத்துக்கண்டு.--05:38, 1 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- புள்ளிகள் தேவையில்லை என்பது என் கருத்து. வேண்டுமென்றால், 'பயன்பாடு இங்கே இடவும்' என்பதுபோலத் தெரிவிக்கலாம், எப்படியிருப்பினும், படிவம் மூலம் பங்களிப்போருக்கு இரண்டுமே பிரச்சனையில்லை. பழ.கந்தசாமி 14:22, 1 சூன் 2011 (UTC)
- இரண்டு நிறப்பட்டைகள் ஒன்றோடு ஒன்று மோதாமல் இருந்தால், இன்னும் அழகாக இருக்குமென்று கருதுகிறேன்.அதற்காகவே,முப்புள்ளிகள் இட முனைந்தேன். --17:41, 1 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- முப்புள்ளிகளை நானும் தவிர்க்கிறேன். ஏனெனில், பலநேரங்களில் வேகமான செயற்பாடுகளுக்கு அவைகள் இடராக இருக்கிறது.எனினும், இரண்டு வார்ப்புருக்களுக்குமிடையே, போதுமான இடைவெளியை தட்டச்சு செய்யும் போதே, உருவாக்கி பயன்படுத்துகிறேன். அப்பாவின் அறுவைச்சிகிச்சை நல்லபடியாக நேற்று முன்தினம், அரசு மருத்துவமனையில் நடந்தேறியது. இனி நலமடைவார் என சிறப்பு அறுவைச்சிகிச்சை மருத்துவர்கள் கூறினர். --07:33, 8 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- தகவலுழவன், மிக்க மகிழ்ச்சி. அப்பா விரைவில் விரைவில் குணமடைந்து தேற எனது மனமார்ந்த பிரார்த்தனைகள். பல குடும்பப் பணிகளுக்கிடையே விக்சனரிக்குப் பங்களித்துவருவதற்கு நன்றி14:12, 8 சூன் 2011 (UTC)
10,000
தொகுஇன்று 10,000 சொற்கள் அதிகரிக்க வேண்டி சென்னை நோக்கி பயணம். தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களை சந்திக்கச் செல்கிறேன்.வந்தவுடன் சந்திக்கிறேன். இரண்டொரு நாளில் திரும்பி விடுவேன். தங்களின் உதவியே, இதற்கான அடித்தளம். நன்றி.வருகிறேன். வணக்கம்.--07:16, 25 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
விக்சனரி அறிமுகக் கூட்டம் இனிதே நடந்தது. வந்தவருக்கு குறைந்த நேரத்தில் சிறப்பாக பங்களிப்பது எப்படி என்று விளக்கினேன். ஒரு சில மாதங்களில், அநேகமாக பொங்கலுக்குள் தமிழின் சொல்வளம் குறைந்தது ஒரு இலட்சம் அதிகமாகும் என எண்ணுகிறேன். தூங்கச் செல்கிறேன். பயணத்தில் இருந்ததால், நேற்றும் இன்றும் சரியாகத் தூங்க முடியவில்லை. வணக்கம்,--00:15, 27 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- தகவலுழவன், நான் உங்களது முந்தைய செய்தியைப் பார்க்கத்தவறி விட்டேன், மிக அருமையான முயற்சி. உங்களது ஆர்வத்துக்குத் தலைவணங்குகிறேன். நன்றி. பழ.கந்தசாமி 01:35, 27 சூன் 2011 (UTC)
தமிழ்மாநாட்டில் என்னைக் கலந்து கொள்ள வழிவகை செய்த, இரவிக்கு தான் நான் நன்றிகளைச் சொல்ல வேண்டும்.அதனால் பல நண்பர்கள். கிடைத்தனர்.நானும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று, எனக்குள் எழுந்த சிறு வேட்கையே இது. உங்களிடம் உரையாடிய போது, பள்ளிகளில் அறிமுகம் செய்வது பற்றி ஆர்வம் எழுந்தது. அதற்குரியவைகளைப் பற்றி தற்பொழுது எண்ணுகிறேன். ஓங்குக தமிழ் வளம்! வாழ்க தமிழர் நலம்!! --16:54, 27 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- அம்மாநாடு குறித்த விவரங்களை அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். குறிப்பாக, தமிழ் விக்கி, விக்சனரி குறித்தவைகள். நன்றி. பழ.கந்தசாமி 17:15, 27 சூன் 2011 (UTC)
குறிப்பாக தமிழ்விக்கி பற்றிய செயல்பாடுகள் ஒன்றுமில்லை. ஏனெனில், இரவி திட்டமிட்டபடி செயல்பட இயலவில்லை.ஏனெனில், கட்டுக்கடங்காக் கூட்டம் எனினும் பொதுமக்களுக்கு. விக்கிப்பற்றி நாம் அறிமுக செய்தோம். இதுவே, மாநாட்டின் இறுதி வரை நடத்தினோம். குறிப்பாக தமிழ்99 தட்டச்சு பற்றி விவரித்தோம். விக்கி நண்பர்கள் பலர் முதலில் வரும் வரவேற்பறையாக நமக்கான இடம் இருந்தது. நான் அந்த இடத்தை விட்டு எங்கு செல்லாததால், பலரை சந்திக்க இயன்றது. இ'கலப்பையை தோற்றுவித்த முகுந்த், நமது சுந்தர், மாகீர், பேராசிரியர் செல்வா, முனைவர் இளங்கோவன், சோடாபாட்டில், தமிழ் விக்கியில் செயல்படாத ஆங்கில விக்கிகள், பரிதிமதி, அருநாடன்,.. இப்படி பலர். ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களால், தொடர்ந்து அங்கு இருக்க இயலவில்லை. குறிப்பாக கட்டுரை வாசிப்பில் கலந்து கொண்டனர். விக்கிகள் அனைவரும் சந்திக்க வேண்டும் என்று நீங்கள் சொன்ன யோசனை, ஓரளவு இறுதி நாளில் இரவியால் ஈடேறியது. அதுவும் ஒரு சில மணி நேரங்களே. நான் ஒவ்வொருவரிடமும் சில நிமிடங்களே பேச முடிந்தது. அதில் விக்சனரி பற்றி, அறிமுகப் படுத்திக் கொண்டேன். தமிழ் விக்கிகள் ஆண்டுக்கு ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று என் மனதில் தோன்றியது. அது பல முன்னேற்றங்களைத் தருமென எண்ணுகிறேன். இது பற்றி நாம் சிந்திக்கவேண்டும்.--00:49, 28 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
உங்கள் கவனத்திற்கு
தொகுவிக்கிப்பீடியாவின் ஆலமரத்தடியில் 5(விக்கியை உலக பாரம்பரிய களமாக்க, ஓட்டு போடணும்), 16(சனிக்கிழமை (9 சூலை 2011) இந்திய நேரம் மாலை 6 மணி) இணையத்தில் கூட்டம் கவனிக்கவும்.--02:16, 7 சூலை 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- தகவலுழவன், நிச்சயம் வாக்களிக்கிறேன். நன்றி பழ.கந்தசாமி 02:42, 7 சூலை 2011 (UTC)
நமது மகிழ்ச்சி.உங்களுடையதே. நன்றி. என்றென்றும் கடமையே எனது உடமை. முத்தமிழுக்கு மூன்றாம் இடமாவது கிடைக்கும் வரை ஓயமாட்டேன். நண்பர்களிடம் சொற்தரவுகளுக்கு பேச வாய்ப்பு கிடைத்தால் பேசவும். ஆளுக்கு 100 தமிழ் சொற்களை, நன்கொடையாகத் தந்தால் நன்றாக இருக்கும். உங்கள் தம்பியை அழைக்கவும். சொற்தரவுகளை, நன்கொடையாக அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி, wikitamilbot AT gmail COM நன்றி. மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--17:29, 16 சூலை 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
எசுப்பானிய உருவாக்கத்தில் la
தொகுargentino என்ற சொல்லினை பார்த்தேன். அதன் இலக்கணப் பயன்பாட்டில் வரும் la -என்பதற்கு ஓலைப்பாய் என்ற பொருளுடைய ஆங்கிலச்சொல்லுக்குச் செல்கிறது. la என்பதிலேயே எசுப்பானிய பொருளையும் இணைத்தால் நன்றாக இருக்கும்.வணக்கம்--04:53, 22 சூலை 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- தகவலுழவன், எச்சொல் ஓலைப்பாய் எனப் பொருள் தருகிறது? தேடிப்பார்த்தேன், தெரியவில்லையே. நன்றி. பழ.கந்தசாமி 05:26, 22 சூலை 2011 (UTC)
la - தமிழிணையக் கல்விக்கழக அகரமுதலி --05:35, 22 சூலை 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- la என்பதைவிட அது ola என்றிருக்கவேண்டும். அதுவே ஓலை என நான் நினைக்கிறேன். பழ.கந்தசாமி 06:23, 22 சூலை 2011 (UTC)
la என்பதனை, ola என மாற்றிவிட்டேன்.--01:59, 23 சூலை 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
தொகு உள்ள மொழிப்பெயர்ப்புப் பட்டை
தொகுபேச்சு:அசோதை -னைக் காணவும்.அங்கேயே தொடர்ந்து உரையாடுவோம். நன்றி. வணக்கம்.--02:42, 31 சூலை 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
ஒருமித்த பெயரிடல்
தொகுபகுப்பு பேச்சு:தமிழ் உறவுச் சொற்கள் என்பதில் உங்களின் கருத்தறிய ஆவல்--05:07, 4 ஆகத்து 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
முன்னங்கால்
தொகுபடமிடும் முறையில்,சற்று காலை முன் வைத்துள்ளேன். முன்னங்கால் --14:43, 11 ஆகத்து 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- நல்ல படங்கள். முன்வைத்த காலை பின்வைக்க வேண்டாம். ;) பழ.கந்தசாமி 04:15, 12 ஆகத்து 2011 (UTC)
ஒருபடத்தின் தேவையான பகுதிகளை,
{{படப்பகுதியைப்பெரிதாக்கு|image=Tape29.png|float=right| width=190|height=190|image width=500|image-top=-600|image-left=-20 |caption=பாத மேற்புறம்|annotations=}}
இந்த வார்ப்புரு மூலம் பெரிதாக்கிப் பார்க்கலாம். தனித்தனி படங்கள் உருவாக்கும் வேலை இதன் மூலம் தவிர்க்கப்படுகிறது.இரண்டு வருடங்களுக்கு முன், இது போல செய்ய முடியுமா? என்று எண்ணியிருந்தேன்.மண்புழு கட்டுரையை உருவாக்கும் போது, அது இந்த தொல்லியில் ஆராய்ச்சியாளர், இங்கு உருவாக்கப்பட்டு இருந்தது கண்டு, பேருவுகை அடைந்தேன்.தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. வணக்கம்--05:07, 12 ஆகத்து 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
Invite to WikiConference India 2011
தொகு
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் Pazha.kandasamy,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |
தினம் ஒரு சொல்- பரண்
தொகு{{was wotd|2011|ஆகஸ்ட்|16}} அத்தேதியில், ஓரகத்தி என்ற நீங்கள் உருவாக்கியச் சொல் இணைக்கப்பட்டுள்ளது. இக்குறிப்பு தற்பொழுது உருவாக்கிய ஒன்றிற்க்கும் மேற்பட்ட சொற்களில் இருக்கிறது. தானியங்கி பதிவா? மூலக்குறிப்பில் அப்பதிவினை நீக்கக் கோருகிறேன்.--02:51, 18 ஆகத்து 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- தினம் ஒரு சொல்லில் ஒரு சொல்லை இணைக்கும்போது அவ்வாறு சேர்க்குமாறு சோ.பா. கூற, அவ்வாறே சேர்த்துவருகிறோம். பழ.கந்தசாமி 03:56, 18 ஆகத்து 2011 (UTC)
- இந்தச் சொற்களில்(அபயன்,அபயகரம், வெடிமருந்து, வெடிமருந்து, பணியாணை, தாய்நாடு,), ஒரே தேதியில் அக்குறிப்பு இருந்தது. அகற்றி விட்டேன்.--05:02, 18 ஆகத்து 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
பைத்தான் மூலம் செயற்படுதல்
தொகுநானும் பைத்தானின் வழியே , புதிய சொற்களை பதிவு செய்ய எண்ணுகிறேன். அது பற்றி தங்களின் கருத்து வேண்டி, மின்னஞ்சல் செய்துள்ளேன். --03:41, 21 ஆகத்து 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- தகவலுழவன், இன்னும் ஓரிரு வாரங்களில் செய்வோம்.பழ.கந்தசாமி 04:47, 21 ஆகத்து 2011 (UTC)
விக்சனரியில் அடிக்கடி தேடப்படும் சொற்பட்டியல்கள் ஒரு முறைக் காணவும்.ஆங்கிலக் கட்டுரைகளை, தமிழில் மொழிபெயர்த்தே பெரும்பாலோனோர் தமிழ்விக்கிப்பீடியாவில் பங்களிக்கின்றனர். நாம் இதனை விரிவுப்படுத்தினால், அவர்களுக்கு மிக்க உதவியாக இருக்குமென எண்ணுகிறேன். மாகிரும் ஒரு மொழிப்பெயர்ப்புக் கருவிக் கொண்டு, விரைவில் கட்டுரைகளை உருவாக்க செயல்படுகிறார்.எனது தமிழில் மொழிப்பெயர்க்கும் திறன், உங்களுடன் ஒப்பிடும் போது, மிக மிகக் குறைவு.நீங்கள் தொடர்ந்து இவற்றை வளர்த்தெடுக்க வேண்டுகிறேன். எனக்கும் விளக்கங்களை ஒலிக்கோப்பாக கொடுத்தால், நானும் பக்கங்களை உருவாக்குவேன். உங்களின் கருத்தறிய ஆவல்.--05:46, 25 ஆகத்து 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- தகவலுழவன், நிச்சயம் செய்கிறேன்; இணைந்து இயங்குவோம். பழ.கந்தசாமி 06:15, 25 ஆகத்து 2011 (UTC)
புசி
தொகு- எனது பதிவுகள் புசி என்ற அண்மைய மாற்றங்கள் பகுதியில் தெரியும். அங்குள்ள சிறிய தொகுப்புகளை மறை என்பதனைச் சொடுக்கினால், அப்பக்கத்தில் எனது புதிய பதிவுகள் மறையும். பைத்தானுக்காக, பைத்தியமாக காத்து இருக்கிறேன். உங்களுக்கு என்று உகந்த நாள் என அறிய ஆவல்.--05:31, 11 செப்டெம்பர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- 5நிமிடங்கள் அ.அ.வரமுடியுமா?--00:53, 14 செப்டெம்பர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
சென்னை அகர முதலியையும் சேர்க்கலாம்
தொகுசென்னை அகர முதலியில் உள்ள உள்ளடக்கங்களை கதிர்வேல் பிள்ளை அகராதி பதிவிட்டப் பின்பு கூட நாம் தானியங்கி கொண்டே பதிவிடலாம். அதற்கான சொதனையை நான் செய்து பார்த்தேன். ஆகையால் சென்னை அகர முதலியின் உள்ளடக்கத்தை சேர்ப்பதில் எந்த இடர்பாடும் வராது. எனக்கு தேவையானது எல்லாம் இப்பொழுது தானியங்கி அணுக்கம். --இராஜ்குமார் 09:18, 13 செப்டெம்பர் 2011 (UTC)
- நன்றி. கதிர்வேல் பிள்ளை அகராதி பதிவிடும்போது சென்னை அகர முதலியில் உள்ள சொற்களைச் சேர்க்காமல் தவிர்த்தால் பின்னர் அவற்றை சேர்ப்பது எளிதாக இருக்கலாம். நாம் ஒவ்வொருவரும் நீங்கள் கூறியவாறு சென்னை அகர முதலி சொற்களை முதலெழுத்துவாரியாகப் பிரித்து ஆளுக்கொரு பகுதியாகச் சேர்க்க முயன்றால் விரைவாக முடிக்க இயலும். தொடர்ந்து முனைப்புடன் பணியாற்றுவோம். பழ.கந்தசாமி 18:53, 13 செப்டெம்பர் 2011 (UTC)
- கோப்பொன்றின் ஐயம் நீக்க, அதனை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன். இப்பொழுது வேலைக்குச் செல்கிறேன். வணக்கம்--07:45, 16 செப்டெம்பர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
காற்புள்ளிகள் பயன்பாடு
தொகுபேச்சு:sacerdotal என்ற பக்கத்தின் வழிகாட்டுதல் படி கோப்பினை திருத்தியமைத்து, பொருட்களை இலக்கமிட்டு ஒன்றன் கீழ் ஒன்றாக அமைத்துள்ளேன்.அவைகளை மறுபதிவு செய்ய உள்ளேன். இன்னும்5நிமிடங்களில் தகவல் எந்திரன் ஓடும். இனி சோதனை ஓட்டத்தை நடத்தி உங்களிடம் காட்டிய பின்பு, பதிவேற்றுகிறேன். சோபா ஊருக்கு சென்றுள்ளார். வழக்கமாக அவரிடம் கேட்பேன்.தவறுக்கு மன்னிக்கவும்.--17:21, 16 செப்டெம்பர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
நேற்று பதிவனா சொற்களில் தலைப்புகளிலும் எழுத்துக்கூட்டல் பிழைகள் இருந்ததால் மறுபதிவேற்றத்தைத் தானியங்கி வழியாகச்செய்யவில்லை.ஆகவே,மின்னஞ்சலில் அனுப்பிய கோப்புகளை காணவேண்டாம். ஏனெனில், சென்னைப்பல்கலைக்கழக்த்தின் ஆங்கிலம்-தமிழ் அகரமுதலியின் தலைப்புச்சொற்களையும் சரிபார்க்க வேண்டியுள்ளது. முன்னர் பேச்சு:sacerdotal கூறியபடி, இனி lambs tails மாற்றிபடி சொல்லமைப்பை கையாளலாமா? உங்கள் கருத்தறிய ஆவல்.--05:39, 17 செப்டெம்பர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
முதல்இந்திய மாநாடு
தொகுமுதல் இந்திய மாநாட்டிற்கு முழுஉதவித்தொகையுடன் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 7000நபர்கள் விண்ணப்பித்திருந்தனர்.எனது ஆவணங்களை சரிபார்த்து, இவ்வாய்ப்பு கிடைக்க வழி செய்தவர் சோடாபாட்டில் என்ற பயனரான, பாலா.தமிழ் விக்கிசார்பாக 4, 5நபர்கள் கலந்து கொள்வரென்று நினைக்கிறேன். இப்பதான் மின்னஞ்சல் பார்த்தேன். இம்மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். உங்களது ஊக்குவிப்பே என்னை தொடர்ந்து பங்களிக்கத்தூண்டியது. மிக்க நன்றி. மற்றவை விவரம் தெரிந்தவுடன்.--05:13, 23 செப்டெம்பர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- தகவலுழவன், மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள், வாழ்த்துகள். மென்மேலும் வளரவும், தொடர்ந்து பங்களிக்கவும் இது ஊக்குவிப்பாக அமையட்டும். பழ.கந்தசாமி 05:23, 23 செப்டெம்பர் 2011 (UTC)
- நானும் த. உழவனும் மாநாட்டில் தமிழ் விக்சனரி பற்றிய ஒரு அறிக்கை ஒன்றை வாசிக்க உள்ளோம். அதன் சுருக்கம் இங்கு உள்ளது. இது பற்றிய உங்கள் கருத்துகள், இதில் அவசியம் இடம் பெறவேண்டியவை என நீங்கள் கருதுபவை ஆகியவற்றை தெரிவிக்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:19, 23 செப்டெம்பர் 2011 (UTC)
- நீங்களிருவரும் அம்மாநாட்டில் கலந்துகொள்வது குறிந்து மிக்க மகிழ்ச்சி. உங்கள் அறிக்கையின் சுருக்கத்தைப் படித்து எனது கருத்துகளை நிச்சயம் தெரிவிக்கிறேன். பழ.கந்தசாமி 06:42, 5 அக்டோபர் 2011 (UTC)
14.11.2011
தொகு14.11.2011 மும்பைக்குக்கிளம்புகிறேன். ஏறத்தாழ 30மணி நேரப்பயணம். மாநாடு 18,19,20-ந்தேதி வரை மும்பைப் பல்கலைக்கழகத்தில் நடக்கிறது. ஏறத்தாழ10தமிழ் விக்கியர்கள் கலந்து கொள்வரென எதிர்பார்க்கிறேன்.மராத்திய ஒலிப்புகளுடன் கூடிய தமிழ் அகரமுதலியின் சிறு பகுதியொன்றினைத் தொகுக்க முயலுகிறேன்.இதன்படி(வரிசை எண்-30) பேச இருக்கிறேன். பயமும், பதட்டமும் இருக்கிறது. பேச்சுரையை இனிதான் தயாரிக்க வேண்டும்.நீங்கள் உங்களின் குறிப்புகளைத் தந்தால் நன்றாக இருக்கும். மின்னஞ்சலுக்கு நேரம் இல்லையென்றால், உங்களுக்கு நேரம் இருக்கும் போது, அலைப்பேசியில் பேசினாலும், சற்று தெம்பாக இருக்கும். என் பேச்சுரையைப் பற்றி, பிறகு தெரிவிக்கிறேன். வணக்கம்.--06:36, 5 அக்டோபர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- வார இறுதியில் நிச்சயம் அழைக்கிறேன். பழ.கந்தசாமி 06:43, 5 அக்டோபர் 2011 (UTC)
bottle-gourd
தொகுbottle-gourd போன்று hypen உள்ள சொற்கள் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சென்னை பேரகரமுதலியில் உள்ளது. bottle-gourd என்ற தலைப்பு ஆங்கிலவிக்கிப்பீடியாவில் உள்ளது. ஆனால், ஆங்கில விக்சனரியில் இல்லை. இது போன்ற ஆங்கில சொற்களைப் பதிவேற்றுவதில் எனக்கு குழப்பம் உள்ளது. இப்பக்கத்தில், hypen உள்ள சொற்களை நிறைய காணலாம். வழிகாட்டவும்.--07:32, 17 அக்டோபர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- சில "-" சரியாகவும் சில தேவையற்றும் இருப்பதுபோலத் தோன்றுகிறது. சரிபார்ப்பதென்றால் Oxford போன்ற அகராதிகளை வைத்துப் பார்த்தலே சிறந்தது. ஆனால், அமெரிக்க வழக்கும் ஆங்கில வழக்கும் வேறுபடும் சொற்களும் இருக்கின்றன. இப்போது "-" சரிபார்க்கப்படவேண்டியவை எனப் பகுப்பிட்டுப் பதிவேற்றுங்கள் பின்னொருநாளில் சரிசெய்ய வசதியாக. நன்றி. பழ.கந்தசாமி 07:58, 17 அக்டோபர் 2011 (UTC)
- சரி.நன்றி.பகுப்பு:ஆங்கிலம்-சரிபார்க்கப்படவேண்டியவை என்று கோர்க்கிறேன். வணக்கம்.--01:17, 18 அக்டோபர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
பைத்தான் மூலம் செயற்படுதல்
தொகுநானும் பைத்தானின் வழியே , புதிய சொற்களை பதிவு செய்ய எண்ணுகிறேன். ஏனெனில், இந்திய விக்கி மாநாட்டில் அது பற்றி பேசும் நிலை வரலாம். உங்களுக்கு உகந்த நாள் யாது?ஆர்வத்துடன்.. --01:45, 30 அக்டோபர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- தகவலுழவன், வெகுநாட்களுக்கு முன் அதை என் கணினியில் நிறுவினேன். இன்னொரு முறை வேறொரு கணினியில் நிறுவிப் பார்த்துவிட்டு உங்களைத் திங்கள் செவ்வாய் போல அழைக்கிறேன். எப்போது மும்பை பயணம்? பழ.கந்தசாமி 03:42, 30 அக்டோபர் 2011 (UTC)
இங்கு அதுபற்றிய குறிப்புகளைத் தந்தீர்கள். எனக்கு அதுபுரியவில்லை. நவம்பர் மாதம் 15ந்தேதி தொடருந்து முன்பதிவு செய்துள்ளேன். சில மராத்தியருடன் பேசிக் கொண்டுள்ளேன். அவர்கள் இசைந்தால் 10ந்தேதிக்கு பிறகு எப்பொழுது வேண்டுமானாலும், மும்பை கிளம்ப அணியமாக உள்ளேன். மடிக்கணினியொன்று இருந்தால் கொஞ்சம் வசதியாக இருக்கும் என்பதால் அதனை வாடகைக்கு எடுக்க முயற்சிக்கிறேன். மற்றவை உங்களுரைக் கண்டு. எதிர்நோக்கும்.--10:03, 30 அக்டோபர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- தகவலுழவன், எனது குறிப்புகள் ஞாபகம் உள்ளன. அதன்படி ஒருமுறை நிறுவி, இயக்கிப்பார்த்து அழைக்கிறேன்.
- மடிக்கணினி வாடகைக்குக் கிடைக்குமா? வாங்க விலை என்ன ஆகும்? விசாரித்துப் பாருங்களேன். ஆனால், மும்பை செல்வதற்குள் அனுப்பிவிடமுடியாது என நினைக்கிறேன். நாளை அழைககிறேன்.பழ.கந்தசாமி 15:02, 30 அக்டோபர் 2011 (UTC)
அடைமழையின் காரணமாக இணைய வசதி சரிவரி கிடைக்கவில்லை. ஒரிரு நாட்களில் சரியாகும் என எண்ணுகிறேன். சோடாபாட்டில் வாடகைக்கு எடுக்கலாம் எனக் கூறினார். எனினும், நானும் முயற்சிக்கிறேன். உங்கள் அழைப்புக்குக் காத்திருக்கிறேன். அப்பாவுடன் காலை மருத்துவனைமனை செல்கிறேன். அறுவைசிகிச்சை முன்பு செய்தோம். அதனைத் தொடர்ந்து கவனிக்க வேண்டிய நிலை. எனவே, மாலை வேலையில், இந்திய நேரம்7மணிக்கு பிறகு ஒரு வேளையும் இல்லாமல் இருப்பேன்.அல்லது காலை8மணிக்குள் அழைக்க முடிந்தால் அழைக்கவும்.வணக்கம்.--02:19, 1 நவம்பர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
ஊரில் அனைத்து பணிகளையும் முடித்து விட்டேன். அப்பா நலம்.நாளை ஞாயிறு என்பதால் உங்களுக்கு நேரம் கிடைக்குமா? இன்னும் ஒரு வாரத்திற்குள், உங்களை எதிர் நோக்குகிறேன். வணக்கம்.--17:10, 5 நவம்பர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- சில சொந்தவேலை, பணிப்பளு காரணமாக பைத்தான் செயற்பாட்டை இன்னும் செய்துபார்க்க இயலவில்லை. முடிந்தவுடன் நிச்சயம் அழைக்கிறேன். தாமதத்திற்கு வருத்தமே. அப்பா நலம் என்பதறிந்து மகிழ்ச்சி. பழ.கந்தசாமி 01:06, 7 நவம்பர் 2011 (UTC)
காபி பக்கம்
தொகுகந்தசாமி அவர்களே, காபி பக்கத்தில் எனக்கு மிகுந்த சந்தேகங்கள் உள்ளன. வேறு எந்த மொழியிலும் hoof=coffee என்று இருப்பதாகத் தெரியவில்லை. இது தமிழரின் சொந்த சிந்தனையா? எவ்வாறு இந்த = உருவானது? நீங்கள் தெளிவு படுத்த முடியுமா? நன்றி :)
- குளம்பி என்ற மொழிபெயர்ப்புக்கான காரணமாகக் கிடைத்த தகவலை மட்டும் இங்கே சேர்த்தேன். அதுகுறித்து நிச்சயம் ஆராயவேண்டும். பழ.கந்தசாமி 01:08, 7 நவம்பர் 2011 (UTC)
ஊடகப் போட்டி
தொகுவணக்கம் கந்தசாமி,
தமிழ் விக்கி ஊடகப் போட்டி, துவங்கிவிட்டது. போட்டிக்கான வலைவாசல் - w:வலைவாசல்:ஊடகப் போட்டி. இதற்காக தங்கள் ஈடுபட்டு வரும் அமெரிக்கத் தமிழ் அமைப்புகளிலும் தங்கள் பள்ளியிலும் பரப்புரை செய்து உதவ வேண்டுகிறேன். மின்னஞ்சலில் அனுப்பவும் அச்செடுத்து விநியோகிக்கவும் ஏற்ற ஒரு துண்டறிக்கை இங்கு - w:படிமம்:OnePageContestGuideUpdated.jpg - உள்ளது. மேலும் போட்டிக்கான ஃபேஸ்புக் தளம் - இதனைப் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
போட்டியின் ஒரு பகுதியாக, விக்சனரி தமிழ் சொற்களுக்கு ஒலிப்புக் கோப்புகளை தயார் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளேன். சுமார் ஈராயிரம் சொற்களுக்குத் தயார் செய்துள்ளோம். ஒரு 10-15 ஆயிரம் தயார் செய்யத் திட்டமிட்டுள்ளோம். --சோடாபாட்டில்உரையாடுக 08:07, 16 நவம்பர் 2011 (UTC)
- சோபா, மிக அருமையான முயற்சி. இச்செய்தியை நிச்சயம் பரப்புகிறேன். நன்றி. நீங்களும் தகவலுழவனும் எப்போது மும்பை பயணம் செய்கிறீர்கள்? பழ.கந்தசாமி 08:21, 16 நவம்பர் 2011 (UTC)
- நன்றி கந்தசாமி. என் அப்பாவில் உடல்நிலை காரணமாக நான் செல்லவில்லை. த.உழவன் மட்டும் அளிக்கை தரவிருக்கிறார். இப்போது மும்பையில் தான் இருக்கிறார். சனியன்று மதியம் அவரது பேச்சு நடைபெற உள்ளது.--சோடாபாட்டில்உரையாடுக 08:26, 16 நவம்பர் 2011 (UTC)
- தங்கள் தந்தை விரைவில் உடல்நலம் பெறப் பிரார்த்தனைகள். ஊடகப்போட்டி குறித்த ஆங்கிலத் துண்டறிக்கை ஏதேனும் உண்டா? இங்கே அது தேவைப்படலாம். பழ.கந்தசாமி 18:35, 16 நவம்பர் 2011 (UTC)
- நன்றி கந்தசாமி. என் அப்பாவில் உடல்நிலை காரணமாக நான் செல்லவில்லை. த.உழவன் மட்டும் அளிக்கை தரவிருக்கிறார். இப்போது மும்பையில் தான் இருக்கிறார். சனியன்று மதியம் அவரது பேச்சு நடைபெற உள்ளது.--சோடாபாட்டில்உரையாடுக 08:26, 16 நவம்பர் 2011 (UTC)
- இப்போது இல்லை. உடனடியாகத் தயார் செய்து தருகிறேன். (அப்பா நன்றாகவே உள்ளார். ஒரு சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியதாயிற்று. inpatient என்பதால், துணைக்கு ஆள் வேண்டி நான் கூட இருக்கிறேன் :-)) --சோடாபாட்டில்உரையாடுக 19:56, 16 நவம்பர் 2011 (UTC)
- w:படிமம்:OnePageContestGuideEnglish.jpg - ஆங்கிலத் துணடறிக்கை தயாராகி விட்டது.--சோடாபாட்டில்உரையாடுக 04:58, 17 நவம்பர் 2011 (UTC)
- சோபா. நன்றி. பதிவேற்றப்படும் பங்களிப்புகள் பதிப்புரிமை மீறாத சொந்தப் பங்களிப்பாக இருக்கவேண்டும் இல்லையா? அதுகுறித்துத் துண்டறிக்கையில் குறிப்பிடவேண்டியதில்லையா? பழ.கந்தசாமி 05:53, 17 நவம்பர் 2011 (UTC)
- தங்கள் மின்னஞ்சலுக்கு சில படங்களை அனுப்பியுள்ளேன்.காணவும். வணக்கம்--02:29, 28 நவம்பர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
கடவுள்=
தொகுகடவுளையே குறிப்பிடும்போது ஆங்கில சொற்களான God, Almighty முதலியனவை ஆங்கில CAPITAL எழுத்துக்களையே முதலெழுத்துக்களாக கொண்டிருக்கவேண்டும் என்பதே விதி என்று நினைக்கிறேன்.--Jambolik 21:49, 16 திசம்பர் 2011 (UTC)
- ஒத்துக்கொள்கிறேன், எனினும் God, god எப்படித்தேடினாலும், god பக்கத்துக்கே செல்லுமென்பதால் அவ்வாறு அக இணைப்புக் கொடுத்தேன். மிக அருமையாக விளக்கங்களை நீங்கள் அளித்துவருதல் மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறுது. உங்களைப் பற்றிய தகவலை உங்கள் பக்கத்தில் தந்தால் உங்களைப்பற்றி அறிந்துகொள்ள உதவும். நன்றி. பழ.கந்தசாமி 22:51, 16 திசம்பர் 2011 (UTC)
- மொழியியல் விதி கிடையாது. நம்பிக்கையாளர்களின் பழக்கம் மட்டுமே. நாமும் பின்பற்ற வேண்டுமென்ற தேவையில்லை. சிறிய எழுத்துகளைப் பயன்படுத்துவோர் பயன்படுத்தலாஅம்.--சோடாபாட்டில்உரையாடுக 04:45, 17 திசம்பர் 2011 (UTC)
மேற்கண்ட கருத்தினை அறிந்தபிறகு தேடியதில் கிடைத்த விடையை " A practical English grammar: for the use of schools and private students By Albert Newton" என்ற ஆங்கில இலக்கண புத்தகத்தில் பக்கம் 19-ல் பார்க்கவும், இலக்கண புத்தகங்களில் கூட நம்பிக்கையாளர்களின் பழக்கங்களை புகுத்துவார்களென்பதை கேட்க வியப்பாகயிருக்கிறது. http://books.google.com/books?id=HJMAAAAAYAAJ&pg=PA19&dq=Grammar+God+Almighty+capital+letters&hl=en&sa=X&ei=mLrsTq2RA-nL0QHQmYzfCQ&ved=0CG4Q6AEwBg#v=onepage&q&f=false --Jambolik 16:06, 17 திசம்பர் 2011 (UTC)
உபவாசம் பக்கத்தில்-லங்க்கணமா அல்லது லங்கணமா/
தொகுவடமொழி உச்சரிப்போடு முடிந்த அளவு நெருங்கி இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் 'க்' என்ற மெய்யெழுத்தை இடையில் சேர்த்தேன். வடமொழி உச்சரிப்பு 'LANKHANAM" என்பதற்கு நெருங்கிய தமிழ் எழுத்துக்கள் "லங்க்கணம்'. சொல்லை மாற்றிய பிறகு உச்சரிப்பு "LANGANAM" லங்கணம் என்றாகிவிட்டது. தமிழில் சொல்லின் நடுவே ஒரே வர்கத்தைச் சேர்ந்த இரட்டித்த க்+க, ப்+ப என்ற எழுத்துக்கள் வல்லொலியையே தரும். அதாவது க/ப போன்று. இவையெல்லாம் தேவையில்லை என்றால் பரவாயில்லை. அதிக கவனம் செலுத்தவேண்டாம்.--Jambolik 22:11, 17 திசம்பர் 2011 (UTC)
- உங்கள் பதிவுக்குப் பிறகு, சென்னைப்பேரகரமுதலியைப் பார்த்தேன். அதில் லங்கணம் என்றிருப்பதால் அவ்வாறு மாற்றினேன். நன்றி.பழ.கந்தசாமி 22:29, 17 திசம்பர் 2011 (UTC)