பவனம்
பொருள்
பவனம்(பெ)
- காற்று
- பாரகந் திருவடியாப் பவனம்மெய்யா (திவ். பெரியதி. 6, 6, 3)
- நெல் முதலியன தூற்றுகை
- வாயுவின் பொருமல்
- பாவனம்
- வீடு
- பாவறி மாக்கடம் பவனம் (திருவாலவா. நகர. 8)
- அரண்மனை
- பருமணிப் பவனத் தெய்தினான்(இரகு. இரகுவு. 30).
- பூமி
- உலகம் என்பதன் பொது
- ஊர்
- இராசி
- நாகலோகம், பவணம்
- பாம்பு
- சுவர்க்கம், தேவலோகம்
- பவனமிச் சடங்கொண் டேகி (உபதேகா. உருத்திராக். 89).
- விமானம்
- சென்றுதன் பவனம் புக்கான் (மேருமந். 204)
- பூனை
ஆங்கிலம் (பெ)
- air, wind
- winnowing, as grain
- flatulence, windiness
- purity, holiness
- house, dwelling, abode
- palace, castle
- earth
- world
- populated country or district
- zodiacal sign
- nether world ofthe Nagas
- serpent;
- Indra's heaven
- chariot; celestial car
- cat
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப் பழநிக் குமரப் பெருமாளே (திருப்பு. 118) - வாயுமண்டலம் வரை நிறைந்திருக்கும் உயர்ந்த மெய்ம்மை விளங்கும் பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பவனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +