பின்னிரவு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பின்னிரவு(பெ)
- இரவில் நள்ளிரவுக்குப் பிந்திய காலகட்டம்; இரவின் பிற்பாதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அதிகாலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பார்களோ தெரியாது.அவர்கள் படுக்கும் நேரம் அநேகமாக பின்னிரவு 1.00 மணிக்கு மேல்தான். (தமிழ்ப்பெண்களின் ரத்தத்தை உறிஞ்சும்.., கோ.புண்ணியவான், உயிர்மை)
- நேற்று முன்னிரவில் உன் நித்திலப்பூ மடியில்
- காற்று நுழைவது போல் உயிர் கலந்து களித்திருந்தேன்
- இன்று பின்னிரவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பது போல்
- மனம் கலங்கி புலம்புகிறேன் (திரைப்பாடல்)
- முன்னிரவு நேரம் உன் பொன்னிதழின் ஓரம்
- என் முன்னுரையை சொல்ல வரவா ஆ..ஆ
- இன்னொருவன் காண என் பொன்னுடலும் நாண
- நான் பின்னிரவில் மெல்ல வரவா ஆஹா...ஆஹா (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
-
- காகங்களின் கரைதலில்
- விழித்தெழும் காலை (இரவின் மடி, எல்லைத்தமிழன், கீற்று)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பின்னிரவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +