பொருந்துதல்

தமிழ்

தொகு
(கோப்பு)
  • பொருந்து-தல் +

பொருள்

தொகு
  1. மனம் இசை வாதல்
    (எ. கா.) கொணர்குவாயெனப் பொருந்தினன் (கம்பரா. மருத்து. 85).
  2. தகுதியாதல்
  3. அமைதல்
    (எ. கா.) அறநெறி பொருந்த (கம்பரா. விபீடண. 43).
  4. உடன்படுதல்.
  5. நெருங்குதல்
    (எ. கா.) பொருந்தவந் துற்ற போரில் (கம்பரா. கும்பகருண. 13).
  6. சம்பவித்தல்
    (எ. கா.) புண்ணியம் பொருந்திற்று (கம்பரா. கும்ப கருண. 131).
  7. பலித்தல் (W.)
  8. இயலுதல்
    (எ. கா.) பூதமைந்தினும் பொருந்திய வுருவினாற் புரளான் (கம்பரா. இரணிய. 18).
  1. கலத்தல்
    (எ. கா.) 'பண் பொருந்த விசைபாடும் (தேவா. 268, 5).
  2. அடைதல்
    (எ. கா.) 'வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் (புறநா.10).
  3. அளவளாவுதல் (பிங். )
  4. புணர்தல்
    (எ. கா.) 'மணிமேகலை . . . பொருந்தின ளென்னும் பான்மைக் கட்டுரை (மணி. 23, 46).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  1. To agree, consent
  2. To be suitable, proper, agreeable, appropriate
  3. To abide
  4. To make a contract, an agreement
  5. To come into close contact
  6. To occur, happen
  7. To succeed, to come to a prosperous issue
  8. To be constituted, made

transitive verb

  1. To combine with
  2. To reach, approach
  3. To associate cordially
  4. To cohabit with


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொருந்துதல்&oldid=1440435" இலிருந்து மீள்விக்கப்பட்டது