மருகன்
பொருள்
மருகன்(பெ)
- ஒருவனுடைய சகோதரி மகன் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகன்
- வானவரைப் பணிகொண்ட மருகாவோ (கம்பரா. சூர்ப்பண. 111).
- மருமகன்; மகள் கணவன்
- மலைக்கு மருகனைப் பாடிப்பாடி (திருவாச. 9, 6).
- வழித்தோன்றல்
- சேரலர் மருக (பதிற்றுப். 63,16).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a nephew who man's sister's son or a woman's brother's son
- son-in-law
- descendant, scion, member of a clan
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +