வாசம்
வாசம் (பெ)
- மணம்
- வாசனைப் பண்டம்
- வசிக்கை
- இருப்பிடம்
- இருப்பு
- ஊர்
- இலாமிச்சை
- ஆடை; வஸ்திரம்
- இறகு
- அம்பு
- நெய்
- உணவு
- அரிசி
- நீர்
- ஒருவகை மந்திரம்
- வேகம்
- கைமரம்
- பேச்சு
- வாக்கியம்
- சரசுவதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- smell, scent, odour, perfume
- aromatic substance
- dwelling
- dwelling place, abode, habitation
- village; town
- cuscuss grass
- garment, dress, clothes
- feather, wing
- arrow
- ghee
- food
- rice
- water
- a mantra
- speed
- rafter
- speech; word
- sentence
- sarasvati, the goddess of speech
விளக்கம்
பயன்பாடு
- வெட்டி வேரு வாசம் வெடலை புள்ளை நேசம் (திரைப்பாடல்)
- இந்தப்பூக்களின் வாசமெல்லாம் ஓர் மாலைக்குள் வாடிவிடும். நம் காதலின் வாசம் மட்டும் எந்த நாளிலும் நிலைத்திருக்கும் (திரைப்பாடல்)
- சின்னஞ்சிறிய ஒரு திண்ணை. கிட்டத்தட்ட பாழடைந்தது. அதில்தான் அவரது வாசம் (பவாவும் யோகியும் நானும், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- மலர்வாசங் கூடாமல் (பிரபுலிங். அக்கமா துற. 12)
- நெய்வளங் கனிந்து வாசநிறைந்து (சீவக. 2735)
- பஞ்சவாசம் (சிலப். 5, 26).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வாசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:மணம் - வசிப்பு - இருப்பிடம் - # - #