விக்சனரி:ஆலமரத்தடி/2010
தமிழ்ச் சொற்கள் வேண்டும்
தொகு- aratha - மூலிகை
- katuvelbatu - மூலிக (சிங்கள் சொல் ?) - முட்கள் கொண்ட ஒரு பட்டை
- pawatta - Adhatoda Vasica
- pathpadaham
- thipily
- batumul
--Natkeeran 01:31, 7 ஜனவரி 2010 (UTC)
6.5 இலட்சம் தமிழ் கலைச்சொற்கள்
தொகு"இதுவரை சுமார் ஆறரை இலட்சம் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவக்கலைச் சொற்களை உருவாக்கி 6,500 பக்கங்களில் எட்டுத் தொகுதிகளை எழுதி வெளியிட்டுள்ளேன் என்றால், அது என் திறமையோ அல்லது என்னோடு இணைந்து உழைக்கும் என் நண்பர்களின் திறமையோ அன்று. இதெல்லாம் தமிழின் ஆற்றலையே வெளிப்படுத்துகிறது."[1] --Natkeeran 01:29, 8 ஜனவரி 2010 (UTC)
- மணவை முசு'தாபாவின் அச்சொற்களை நாம் இங்கு பதிவு செய்யலாமா? ஆம். எனில் என்ன செய்ய வேண்டும்.? த*உழவன் 05:56, 8 ஜனவரி 2010 (UTC)
தீர்வு அவைகளும், பதிவேற உள்ளன. இதனை செல்வா தெரிவித்தார்.த*உழவன் 01:50, 18 மார்ச் 2010 (UTC)
விக்கிப்பீடியாஇ+தினமணி
தொகுவிக்கி பீடியாவின் அண்மைய மாற்றம் நம்பிக்கையளிப்பதாக உள்ளது.22-03-2010 தினமணியில் பிரசுரமான நெல்லையில் நிகழ்ந்த தமிழறிஞர் தி.க.சிவசங்கரன் அவர்களது 85-வது வயது சிறப்பு நிகழ்ச்சி விபரங்கள் 24-03-2010 அன்றே அவரது விக்கிபீடியா பக்கத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது.
விழா ஏற்பாட்டாளர்கள் சித்திரசபையும். புத்தர் பண்பாட்டுக் கழகமும் போற்றத்தக்கவர்கள். தினமணி ஆசிரியர் திரு.கே.வைத்தியநாதன் முயற்சியில் தஞ்சை தமிழ்ப் பல்கலையில் திருநெல்வேலி கணபதியப்பன் சிவசங்கரன் பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்திடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் படைப்பாளரும் இலக்கிய ஆர்வலருமே புரவலராக பொறுப்பேற்றுள்ளனர் என்பதும் சிறப்புக்குரியது.
இலக்கியப் படைப்பாளிக்கு/திறனாய்வாளருக்கு பல்கலையில் அறக்கட்டளை அமைப்பது இதுவே முதல் முறையாக இருக்கக் கூடும்.
சுந்தர் தானியங்கியின் விளைவுகள்
தொகு- இத்தானியங்கியின் செயற்பாடுகள் பற்றிய கருத்தோட்டம், இனிவரப்போகும் விக்சனரியின் மேலாண்மைக்கு மிகவும் பயனாகும்.
பல ஆயிரம் சொற்கள் குறைந்ததற்குக் காரணம் வருமாறு;-
1)ஒவ்வொரு சொல்லும் {{PAGENAME}} என்ற வார்ப்புருவைப் பயன் படுத்தியுள்ளது. இந்த வார்ப்புரு, தனிச்சொல்லுக்கு மிகவும் பயன்படும். கூட்டுச்சொற்களில், இது பிழையான விளைவுகளைத் தந்தது.
2) இவ்வார்ப்புருவால் ஆங்கில விக்சனரிக்கு உருவான பக்க இணைப்பை, விக்சனரி விக்கியிடைத்தானியங்கி நீக்கியது. அவ்வாறு நீக்கியப் பக்கங்கள் பல்லாயிரம் ஆகும்.
3) அப்பக்கங்களில் வேறு எந்த இணப்புகளும் இல்லாததால், பக்க எண்ணிக்கைக் குறைந்தது. அவ்வாறு குறைந்த ஆயிரக்கணக்கான பக்க எண்ணிக்கையைக்கூட்ட, ஏதாவது ஒரு இணைப்பை, வேறு பக்கத்திற்க்கு கொடுத்தால், குறைந்த எண்ணிக்கை அதிகமாகும்.
4)சில முறைகளில் பக்கத்தினை அதிகப் படுத்த முடியும் என்றாலும், பகுப்பின் மூலம் பக்கத்தினை அதிகபடுத்தும் முறையே சிறந்த எளிய வழியாகும். விரைவான வழியாகும்.
5) பகுப்பினை பெயர்சொல், சட்டத்துறை, குறுக்கங்கள் எனக்குறிப்பாக செய்யலாம்.அங்ஙனம் செய்யவதற்குச் சிரமமாக இருப்பின், [[பகுப்பு:ஆங்கில கூட்டுச்சொற்கள்]] என்பதை, ஆங்கிலக்கூட்டுச் சொற்களில் சேர்த்தால், குறைந்த பக்க எண்ணிக்கை, மீண்டும் அதிகமாகும்.
இழந்ததை மீட்டெடுக்க உதவுங்கள்.த*உழவன் 04:56, 16 ஜனவரி 2010 (UTC)
- குறித்துக் கொண்டேன். பகுப்புக்கள் செய்து பக்கங்களை (சொற்களை) கூட்டுவோம்.
- தற்போது, தாங்கள் வேண்டியபடி, --- பகுப்பு:ஆங்கிலம்-பறவைகள் --- என்னும் பகுப்பில் ஈடுபட்டுள்ளேன்.
--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 05:38, 16 ஜனவரி 2010 (UTC)
பகுப்பு:பட இணைப்பு கொடுக்க வேண்டிய சொற்கள்
தொகுஇன்று, பகுப்பு:பட இணைப்பு கொடுக்க வேண்டிய சொற்கள் --- என்ற இந்த பகுப்பை தொடங்கியுள்ளேன்.
காரணம் --- பகுப்பு:ஆங்கிலம்-பறவைகள் --- என்ற பகுப்பை ஆய்ந்து கொண்டிருந்த போது, 50-60 சொற்களைப் பார்த்தேன். அப்போது, பல சொற்களில், படங்கள் இணைக்க முடியும் என்று தோன்றியது. அதை குறித்துக் கொள்ள வசதியாக இந்த பகுப்பை உருவாக்கியுள்ளேன். இப்பகுப்பை தயவுசெய்து உடனே நீக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
காலப்போக்கில் எல்லோரும் பயன் படுத்துவர் என்பது என் நம்பிக்கை.
பகுப்பில் கீழ்கண்ட குறிப்பையும் கொடுத்துள்ளேன்.
குறிப்பிட்ட சொல்லில் பட இணைப்பு கொடுத்த பின் அந்த சொல்லில் உள்ள --- பகுப்பு:பட இணைப்பு கொடுக்க வேண்டிய சொற்கள் --- என்ற பகுப்பை நீக்கி விடவும். *** மேலும் ஒரு சொல்லுக்கு பட இணைப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் --- இந்த பகுப்பின் இணைப்பை கொடுத்தால் --- இதனை பார்க்கும் மற்ற பயனர்கள் படம் இணைக்க முயற்சி செய்வர்.
தங்களின் கருத்துக்களை அறிய ஆவல்.
--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 07:06, 16 ஜனவரி 2010 (UTC)
விக்கி ஊடக நடுவப் பட இணைப்பு
தொகு- விக்கிப்படங்களுக்கு இணைப்பு தரும் போது, அப்படங்களை மறவாமல் தமிழ் சொற்களிலும் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழில் இருப்பது ஆங்கிலத்தில் இல்லாமல் இருக்கலாம். தமிழ் விகசனரியில், தமிழ் சொற்கள் சிறப்பாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.த*உழவன்
- சரியான கருத்து. கவனத்தில் கொள்கிறேன். நன்றி.
- --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 03:55, 19 ஜனவரி 2010 (UTC)
சிகப்பு நல்லதே
தொகுThe following is reproduced from the talk page of TRYPPN --- for reference and notice of all the users. --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 03:49, 19 ஜனவரி 2010 (UTC)
- ---சேவடி--- சிகப்பு நல்லதே---
- மறவாமல் பார்க்கவும். சிவப்பு நிறம் வராமல் பார்த்துக்கொள்ளவும். ஒருசொல்லுக்கு ஒருமுறை வந்தால் கூட பரவாயில்லை. நம் தரம் குறைவ என்று மற்றவர் கூறக்கூடாது அல்லவா? த*உழவன் 00:45, 18 ஜனவரி 2010 (UTC)
- த*உழவன் அவர்களுக்கு, காலை வணக்கம்.
- தங்களது கருத்துக்களை கண்டேன். காலை 9 மணிக்கு மேல் இற்குண்டான விளக்கத்தை தருகிறேன். கொஞ்சம் காத்திருங்கள்.
வணக்கம். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 01:08, 18 ஜனவரி 2010 (UTC)
த*உழவன்,பழ.கந்தசாமி, பரிதிமதி ஆகியோருக்கு வணக்கம்.
பரிதிமதி அவர்கள் என்னை தொடர்பு கொண்டமைக்கு மகிழ்ச்சி. நன்றி.
த.உழவன் அவர்களுக்கு வணக்கம்.
மேலும் --- Stub --- பற்றிய சிறு ஆய்வை கீழே கொடுத்துள்ளேன் (Please See the Table below).
1) --- Stub --- in Wikipedia --- http://en.wikipedia.org/wiki/Stub In Wikipedia, a Wikipedia stub is a short article in need of expansion.
2)--- Stub --- in Wiktionary --- http://en.wiktionary.org/wiki/stub (wikis) A page providing only minimal information and intended for later development
3) --- Table Showing the STUB --- Statistics.
Reference Date: 18-January-2010 *** 19,906 = WORDS Required to go to the NEXT Position.
Position in Wictionary | Language | Local Language | Code | No. of Good Words (GW) | Total No. of Words (TW) | Hidden Words (NOT GOOD Words)(HW = TW-GW) | Stub Ratio (GW/TW) | Stub Ratio as Calculated by Wiki | Total No. of Users | Active Users | % of Users Active |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
13 | Norwegian (Bokmål) | Norsk (Bokmål) | no | 123,165 | 130,773 | 7,608 | 0.9418 | 0.9418 | 1,947 | 20 | 0.974 |
14 | Tamil | தமிழ் | ta | 103,259 | 114,867 | 11,608 | 0.8989 | 0.8989 | 1,803 | 15 | 1.202 |
15 | Italian | Italiano | it | 102,715 | 119,808 | 17,093 | 0.8573 | 0.8573 | 10,699 | 55 | 1.945 |
16 | German | Deutsch | de | 100,850 | 128,138 | 27,288 | 0.7870 | 0.7870 | 27,707 | 228 | 1.215 |
So, it is clear that STUB is calculated as === ( No. of Good Words / Total No. of Words).
--- தாங்கள் கருதியபடி --- சிவப்பு நிறம் உள்ள சொற்களினால் தரம் பாதிக்கப்படும் என்பது சரியானது அல்ல. தங்களுக்கு கூறியவர்கள் எந்த ஆய்வும் செய்யாமல் கூறியுள்ளார்கள் என்பது எனது கருத்தாகும்.
தங்களுக்கு கூறியவர்களிடம் --- எனது மேலே கொடுத்துள்ள சிறு ஆய்வினை தயவுசெய்து காண்பிக்கவும். மறுகருத்து இருப்பின், எனக்குத் தெரிவிக்கவும்.
தற்போது, தொலைக்காட்சியில் --- கறை நல்லது --- என்று --- Surf Excel --- Avertisement --- வருகிறது. பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அதுபோன்று --- சிவப்பு நல்லது --- என்பது எனது கருத்தாகும். காரணம் --- சிவப்பு நிறத்தில் உள்ள சொற்கள் இன்னும் எழுதப்படவில்லை என்று குறிக்கிறது. இந்த சொற்கள் எல்லாம் ஓரிடத்தில் பார்ப்பாரின்றி குவிந்து கிடக்கின்றன.
வேண்டிய பக்கங்கள் --- Wanted Pages --- http://ta.wiktionary.org/wiki/சிறப்பு:WantedPages
இதில் 5000---(ஐயாயிரம்) சொற்கள் --- எல்லையின் கடைசிப்பகுதியாகும். (That is the Maximum Limit in a LIST in Wiki). இதனை கடைசியாக 22-10-2009-ல் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு பிறகு, பல சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவைகள், அடித்தல் கோட்டுடன் காட்டப்பட்டுள்ளன.
மேலும் இதனை, தினமும் கட்டாயமாக, ஒரு முறை, இற்றைபடுத்த வேண்டும். இதற்கான ஏற்பாட்டை, தாங்கள் செய்ய வேண்டுகிறேன்.
பின்பு, எந்த புது வார்த்தைகளை, உருவாக்க வேண்டும் என்று எண்ணும் போது, கவலையே இல்லை, இந்த --- வேண்டிய பக்கங்கள் --- உதவிக்கு வரும்.
என்னுடைய கணக்குப்படி, இதில் குறைந்த பட்ச்சம் 25,000 சொற்கள் இருக்கக்கூடும். கடைசியில் குறிப்பிட்ட சொல்லில், (2 இணைப்புக்கள்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மாதிரி, ( 1 இணைப்புக்கள் ) பக்கங்கள் 20,000-க்கும் அதிகமாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.
நாம் சொற்களின் எண்ணிக்கையை கூட்ட 4 வழிகள் தெரிகின்றன. 1) புதுச்சொற்களை மனதில் தோன்றியபடி செய்யலாம்.
2) ஒளிந்திருக்கும் சொற்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். (அக-இணைப்பு --- Internal-Link மூலம்)
3)DeadEndPages--- தொடராப் பக்கங்கள் --- இதில் உள்ள பக்கங்களில் அக-இணைப்பு கொடுத்தால் சொற்களின் எண்ணிக்கை கூடும். அதே சமயத்தில் வருங்காலத்தில் உருவாக்க வேண்டிய சொற்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
4) புதுச்சொற்களை தேடிக்கண்டு பிடிக்காமல் --- வேண்டிய பக்கங்களில் உள்ள சொற்களை உருவாக்கலாம்.
இப்படி செய்தால் நாம் இன்னும் இரண்டு படிகள் தாண்ட வாய்ப்புள்ளது.
ஆகவே, சிகப்பு நல்லதே.
தொடர்பு கொண்டமைக்கு மகிழ்ச்சி. வணக்கம். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 13:05, 18 ஜனவரி 2010 (UTC)
உங்களது ஆய்வுக்கட்டுரை கண்டேன். அனைவருக்கும் பொதுவானக் கருத்துக்களை நீங்கள் ஆலமரத்தடியில் (முதற்பக்கத்தில் காணமுடியும்.) தெரிவித்தல் நலம். அனவரும் பாரக்க முடியும். விக்கிப்பீடியாவில் இருப்பவர் பெரும்பாலும் அங்கு வந்து சென்று விடுவர். எடுத்துக்காட்டு-நக்கீரன். பரிதிமதி போன்று ஒருசிலரே இங்கு வருவர்.
எனினும், இந்த ஆய்வினால், எனது எண்ணங்களில் நிறைய மாற்றங்கள். அவசியம் நீங்கள் சொன்ன முறைகள் கவனிக்கப் படவேண்டியதே. தமிழ் சொற்கள் மற்றும் அதன் பகுப்புகள் 40% தான் சரியாக உள்ளன. அதை நிச்சயம் கவனிப்போம். அதை விட குறைந்த நேரத்தில், பகுப்பு செய்வதினால் எண்ணிக்கையைக் கூட்ட முடியும்.
ஆனால், இப்பொழுது அல்ல என்பது என்கருத்து. எனெனில், ஒவ்வொரு சொல்லிலும் தொகு என்பதைச் சொடுக்கி, பிறகு தேவையான மாற்றங்களைச் செய்து, பிறகு சேமிக்கிறோம்.
எந்தப்பக்கத்தினையும் தொகுக்க, நாம் திறந்து மூடாமலேயே சேமிக்கும் வழியை பழ.கந்தசாமி அவர்கள் கண்டறிந்துள்ளார். தினமும் ஏறத்தாழ இந்திய நேரம் காலை 6-10 மணிக்குள் அது நம் விக்சனரியில் பதிவேறுகிறது. 10,15 நிமிடங்களிலேயே 100 சொற்களின் எண்ணிக்கைக் கூடி விடும்.
இதற்கு நாம் இருவரும் அவருக்கு ஒத்துழைத்தால் நன்றாக இருக்கும். உங்களின் நேரத்தினை இதற்கு செலவழிக்க, வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு எந்த நேரம் ஒத்துவரும், தினமும் எவ்வளவு நேரம் ஒதுக்க முடியும் என்று தெரிவித்தால், அதுபற்றி நான் கூறுகிறேன்.
இன்று வெறும் 50 சொற்கள் தான் பதிவேறியது. நான் ஆர்வக்கோளாறால் ஒரு தவறு செய்து விட்டேன். அதை உடன் கண்டறிந்து, கந்தசாமி சரி செய்துவிட்டார். ஏற்கனவே, இன்னும் ஓரிரு மாதங்கள் வேலை அதிகம் என்று சொல்லியிருந்தார். எனினும், இந்த அரிய வழியைக் காட்டியுள்ளார். அவரது இணைய வேகம்2mbpsக்கும் மேல். அதனால் நம்மை விட, அவர் எளிதில் முடிக்க முடியும்.
உங்கள் சம்மதத்தை எதிர்பார்த்து முடிக்கும். அப்புறம் ஒரு விசயம். நாம் ஒரு இலக்கு நோக்கி இயங்குபவர்கள். நமக்குள் இடைவெளி கூடாது. த*உழவனே என்று நீங்கள் அழைப்பதையே நான் விரும்புகிறேன்.
உங்களைப் போன்றோர் ஒத்துழைத்தால் இம்மாதமே குறைந்த பட்சம் 3000 சொற்களைக் கூட்டலாம்.
உங்கள் நேரத்தினை எனக்காக செலவிட்டமைக்கு மிக்க நன்றி. (._.)த*உழவன் 17:31, 18 ஜனவரி 2010 (UTC)
தானியங்கி நிறுவலும், இயக்கமும்
தொகு- தானியங்கி பைத்தான் பக்கத்தின்படி தானியங்கியை நிறுவல் - நான் லினக்ஸில் நிறுவி உள்ளேன்
- இத்தானியங்கிக்கு பைத்தான் தேவை.
- நிறுவப்பட்ட பகுதியில் user.config.py இயக்கி நமது விருப்பத்தேர்வுகளைப்பதிவு செய்தல்
- ஆணைகளின் தொகுதி. catall.py, replace.py முதலிய பல பயனுள்ள ஆணைகள் உள்ளன. (நான் அவற்றை இன்னும் இயக்கிப் பார்க்கவில்லை)
- நிறுவப்பட்ட இடத்திலிருந்து pagefromfile.py இயக்குக.
- அதன் முழுக்கட்டளைத் தொகுப்பைப் பார்க்க:
python pagefromfile.py -help
- பகுப்பு சேர்க்க எனது ஆணை:
python pagefromfile.py -start:xxxx -end:yyyy -appendbottom -file:pagelist.txt -notitle -minor
- எனது pagelist.txt ஆவணத்தின் வடிவம்
xxxx '''assay master''' [[பகுப்பு: ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள்]] yyyy xxxx '''asrespects the cases''' [[பகுப்பு: ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள்]] yyyy
- pagelist.txt-ன் வடிவம்:
- 'xxxx' - அடுத்துவருவது பக்கத்தின் பெயர் எனக்குறிக்க
- பக்கத்தின் பெயர்
- ஒரு வரி இடைவெளியும், பகுப்பும்
- 'yyyy'- குறிப்பிட்ட பக்கத்திற்கான மாற்றங்கள் முடிந்தது
- தானியங்கிக்கு ஒரு பெயர்கொடுத்துப் பதிவுசெய்யவேண்டும். (எப்படிச் செய்வது என்று நான் இன்னும் பார்க்கவில்லை) அப்படிப் பதிவுசெய்தால், 'தா' என்று தனியாக பக்கங்கள் குறிக்கப்படும்.
விண்டோஸ் தானியங்கி
தொகுவிண்டோஸ் தானியங்கி. GUI-உடன் என்று த*உழவன் கூறுகிறார். அதை முயற்சி செய்துபார்க்கவேண்டும். TRYPPN?
பழ.கந்தசாமி அவர்களுக்கு, வணக்கம்.
நான் இதைத் தான் நெடுநாட்களாகத் தேடி வந்தேன். கிடைத்து விட்டது. மிக்க மகிழ்ச்சி. என்னால் செய்ய முடியும் என்று எண்ணியமைக்கு நன்றி.
முயற்சி செய்கிறேன். முயற்சி திருவினையாகும்.
தொடர்பு கொண்டமைக்கு மகிழ்ச்சி. வணக்கம்.
--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:58, 20 ஜனவரி 2010 (UTC)
தானியங்கி---AWB---AutoWikiBrowser
தொகுபழ.கந்தசாமி, த.உழவன் ஆகியோருக்கு வணக்கம்.
தானியங்கி---AWB---AutoWikiBrowser--- வேலை செய்ய துவங்கியுள்ளது.
தங்களின் வழிகாட்டலுக்கு நன்றி. வணக்கம்.
--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 05:30, 21 ஜனவரி 2010 (UTC)
தமிழ் விக்சனரியில் இற்றைப்படுத்த வேண்டியவை
தொகு- தமிழ் விக்சனரியில் பல தொகுப்புகள் செய்தபின் தற்போது, ஒரு லட்சம் வார்த்தைகளில் இருந்து, 1,05,250-ஐ நெருங்கிக்கொண்டுள்ளது. ஆனால் ஒரு சில பகுதிகளில், தற்போதய உண்மை நிலை தெரியாத காரணத்தினால், மேலும் செயல்படுவது சிறிது கடினமாக உள்ளது.
- தயவு செய்து கீழ்கண்ட பகுதிகளை இற்றைப்படுத்த (update) வேண்டுகிறேன். அவற்றை குறைந்தது தினமும் ஒரு தடவையாவது இற்றைப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.
- 1. தொடராப் பக்கங்கள்
- 2. வேண்டியப் பக்கங்கள்
- மேற்கூறிய இரண்டு சிறப்புப் பக்கங்களும், அக்டோபர் 22, 2009-ல் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது.
- இவற்றை இற்றைப்படுத்தினால் மேலும் குறைந்த அளவு 1000 (ஆயிரம்) சொற்கள் உப-இணைப்பு கொடுப்பதன் மூலம் கூடுவதற்கு வாய்ப்புண்டாகும்.
- இதனை உடன் செய்ய வேண்டுகிறேன்.
நன்றி. வணக்கம். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 10:53, 12 பெப்ரவரி 2010 (UTC)
ஏற்கனவே இதுபற்றி கூறியிருந்தீர்கள். நான்கவனிக்காமல் விட்டு விட்டேன். பல பக்கங்கள் தானாகவே இற்றைப் படுத்தப்பட்டுவிடுகின்றன. நீங்கள் குறிப்பிட்டப் பக்கங்களில் ஏன் அத்தகைய மாற்றங்கள் ஏற்படுவதில்லை என்று புரியவில்லை. இதுபோன்ற சில பக்கங்கள், கவனிக்காமலேயே உள்ளன. இன்னும் சில தினங்களில் இரவியை நேரில் சந்திப்பேன். இதனைப்பற்றியும் கேட்கிறேன். AWB யில் உள்ள நமக்கு உகந்த வசதிகளைப் பற்றி நீங்கள் ஆராய வேண்டுகிறேன். (குறிப்பாக புதுச்சொற்களை எங்ஙனம் பதிவேற்ற வேண்டுமென்று) நான் பகுப்புகளை பற்றிய ஆய்வினை தற்செயலாகக் கண்டறிந்தேன்.த*உழவன் 15:09, 12 பெப்ரவரி 2010 (UTC)
அட்டவணைப் பயன்பாடு
தொகு- அட்டவணை வார்ப்புருக்கள் பற்றி, இப்பகுதியில் கருத்திட வேண்டுகிறேன்.த*உழவன் 05:56, 9 மே 2010 (UTC)
சொற்றொடர் எடுத்துக்காட்டுகள் + சொற்பிறப்பியல் + கலைச்சொற்கள்
தொகு- சொற்றொடர் எடுத்துக்காட்டுகளுக்கு, ஏதேனும் ஒரு நூலிலோ, நாளிதழிலோ, மாதிகை (மாத இதழ்),
கிழமை இதழிலோ இருந்து எடுத்துக்காட்டுவது நல்லது. இது எல்லா நேரங்களிலும் இயலும் என்று சொல்லவில்லை. கூடியமட்டிலும். மேலும் இந்த மேற்கோள்களை ஒரு வகையான வார்ப்புரு இட்டு (தானியங்கிமுறையாக) தொகுத்து வந்தால் அது ஒரு மிகச்சிறு மொழித் தொகுப்பு (corpus (linguistics)) ஆக வளரவும் கூடும். மூலத்தைக் குறிக்கும்பொழுது சுருக்கமாக தினமணி பக். 6, பிரவரி 8, 2010 என்று மட்டும் குறித்தால் போதும்.
- சொற்பிறப்பியல், நாம் நம் விருப்பப்படி தருதல் கூடாது, ஆனால் தேவநேயப்பாவாணர் தொடங்கிய சொற்பிறப்பியல் அகராதியில் இப்பொழுது 26 தொகுதிகள் வந்துள்ளதாகக் கேள்விப்பட்டேன் (முழுமை பெற மொத்தம் 29). அவற்றில் இருந்த்து எடுத்து எழுதலாம் (இயலும் பொழுது).
- தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உரூவாக்கிய கலைச்சொற்கள் அடங்கிய 6 தொகுதிகளும் விக்சனரியில் ஏற்ற இருக்கின்றார்கள் (இவற்றில் பல ஏற்கனவே விக்சனரியில் உள்ளது).
--செல்வா 13:52, 2 மார்ச் 2010 (UTC)
- சொற்றொடர்-phrase-முற்றுபெறாவாக்கியம்; வாக்கியம் -sentence என்றே பள்ளிகளில் கற்றது நினைவுக்கு வருகிறது. இன்றும் இப்படித்தான், தமிழகப் பள்ளிகளில் சொல்லித்தரப்படுகிறது. இப்படியிருக்க முனைவர்சொ. பரமசிவம் கருத்துகளிலிருந்து எப்படி வேறுபடுவது? பொதுவாக பயன்பாடுகள் என்று தலைப்பிடலாமென்று எண்ணுகிறேன்.
- நாளிதழில்களிலிருந்து மேற்கோள்களை, கந்தசாமியவர்கள் ஏற்கனவே பயன்படுத்துகிறார். நானும் அத்தகைய மேற்கோள்களை, பயன்படுத்த வேண்டும். ஒருசில பத்திரிகைகளே உகந்ததாக உள்ளன. பெரும்பாலான பத்திரிக்கைகள், தமிங்கிலீசைத் தான் வளர்க்கின்றன.
- தேவநேயப்பாவணரின் நூல்களுக்காக தேவநேயம் என்ற இணயத்தளத்தினை ஏறத்தாழ 13 இலட்சம் செலவுச் செய்து பதிவேற்றினர். என்னகாரணத்தினாலோ, அத்தளம் இப்பொழுது இல்லை. இருப்பினும் நூலகம் தளத்தில் கோபி, எனக்கு வழிகாட்டியபடி அந்நூல்களை, 95% பதிவேற்றியுள்ளேன். இத்தொடுப்பில் பாவாணரின் நூல்களைக் காணலாம். இனியொருவர் பாவாணர் அளவு தமிழை ஆராய்வாரா என்பது ஐயமாகத் தான் உள்ளது. மேலோட்டமாக அந்நூல்களைப் படித்தேன். அன்னைத்தமிழின் அருமையுணராமல் அருந்தமிழர் இருக்கின்றனரே! என்று, எனக்குள் புலம்புகிறேன். இத்தொகுப்பில் விட்டுப்போனது 12ம்எண்ணுள்ள மின்னூலே. அதனைக் காண்பவர், எனது மின்னஞ்சலுக்கு அனுப்பினால், அதனையும் இணையதளத்தில் இணைத்து காலத்தினால் அழியாமல் வகை செய்ய முடியும். இதுவரை சொற்பிறப்பியலில் விருப்பப்படி பதிவுகளை செய்யவில்லை. அங்ஙனம் வார்ப்புருக்களாகப் பதிவேற்றுவது சிறந்த யோசனையே. இதற்காகவும் முயலுவேன்.
- மொழித் தொகுப்பு - மதுரைத் தமிழ் வந்துவிட்டது. கொங்கு தமிழ் சொற்கள் தொகுக்கப் பட்டுவருகின்றன. நெய்தல் திணையில் ஏராளமானச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். அதுவும் தொகுக்கப் படவேண்டியதே. பாடு என்ற சொல்லை, பாடு என்று பாவின் ஒலியைக் கூட்டி சென்னைத் தமிழில் அமங்கலச் சொல்லாகப் பயன்படுத்துகின்றனர். நெய்தல் நிலமக்களோ, மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் கடலின்பகுதியை அதே ஒலியினால் அழைக்கின்றனர். அதனைப் பெறலாமா? வேண்டாமா? என்றிருந்தேன். தமிழ்விக்கிப்பீடியாவில் தங்களது கட்டுரைக் கண்டேன். தொகுக்க வேண்டும் என்று என்னுள் எண்ணுகிறேன்.
- தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திலிருந்து, கலைச்சொற்களை(துறைச் சொற்கள்?) விக்சனரியில், பதிவேற்ற இருப்பவரைப் பற்றி அறிய ஆவலாக உள்ளேன். அவர்கள் எத்தகைய வடிவமைப்பை, பதிவேற்றமுறையில் அமைக்க உள்ளனர் என்பதை அறிய ஆவல்.
த*உழவன் 17:25, 2 மார்ச் 2010 (UTC)
- நன்றி, இயன்றவரை சொற்றொடர்கள், ஆதாரங்களைச் சேர்க்க முயற்சி செய்வோம்.
- பல பக்கங்களில் ஆதார இணைப்புகளை, குறிப்பாக த. இ. ப. வின் இணைப்புகளை தகவல்*எந்திரன் மூலம் இற்றைப்படுத்த வேண்டும். பெரும்பாலான பக்கங்களில் அவ்விணைப்புகள் இயங்குவதில்லை பழ.கந்தசாமி 17:56, 2 மார்ச் 2010 (UTC)
ஏறத்தாழ தகவலெந்திரன் அனைத்துச்சொற்களையும் பகுப்புக்காக, ஒரு சுற்று சுற்றி வந்து விட்டது. இன்னும் சிறு பகுப்புப்பிழைகளை நீக்க வேண்டும். அதற்கு முன், இனி நீங்கள் சுட்டியபடி ஆதார இணைப்புகளைச்சீர்படுத்தவேண்டும்.
__ த*உழவன் 18:08, 2 மார்ச் 2010 (UTC)
- தகவல் எந்திரன் தமிழிணையப் பல்கலைக் கழக இணைப்புப் பிழைகளை இப்பொழுது நீக்கிக் கொண்டு உள்ளது.அநேகமாக இப்பணி இன்னும் 15தினங்கள் நடைபெறும்.த*உழவன் 13:52, 24 மார்ச் 2010 (UTC)
தீர்வு கந்தசாமியவர்கள் சுட்டியபடி, தகவல்எந்திரன் தமிழிணையப் பல்கலைக்கழகத்தின் இணைப்புகளைச் சரிசெய்து விட்டான் என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறேன்.த*உழவன் 06:29, 17 ஏப்ரல் 2010 (UTC)
விக்சனரி பற்றிய தினமணிக் கட்டுரை
தொகு- தமிழ் விக்சனரி-மொழிவளம் காட்டும் களம்! மு. இளங்கோவன்
- இதனால் தான் புதுப்பயனர் எண்ணிக்கை, கடந்த இரண்டு நாட்களில் அதிகமானதோ? நல்ல ஆரம்பம். இனி மெல்ல தமிழகத்தில் தமிழ் விக்சனரி வளரும்.த*உழவன் 13:47, 24 மார்ச் 2010 (UTC)
மகிழ்ச்சி+நன்றி+வந்தேறிச்சொற்கள்
தொகுவணக்கம். த. உழவன், திருச்சி பெரியண்ணன், பழ.கந்தசாமி, பரிதிமதி உள்ளிட்டோர் இங்கு மிகவும் முனைப்போடும் பொறுப்போடும் விக்சனரியை வளர்த்து வருவதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய விக்கித் திட்டங்களில் தமிழ் விக்சனரி அளவு விக்கிப்பீடியா அல்லாத திட்டங்கள் வளர்வது குறைவு. அனைவரின் தொடர் பங்களிப்புக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். --ரவி 06:17, 5 ஏப்ரல் 2010 (UTC)
- வழக்கமா நீங்க சொல்றது தான்.. 'நன்றி எதுக்குங்க'. நம் தமிழல்லவா? ஓங்குக தமிழ் வளம்த*உழவன் 06:54, 5 ஏப்ரல் 2010 (UTC)
- நன்றி கூறிய ரவி அவர்களுக்கு வணக்கம். தொடர் பங்களிப்பாளர்களான எங்கள் நால்வரையும், மற்ற பங்களிப்பாளர்களையும் பாராட்டி நன்றி கூறியமை குறித்து மகிழ்ச்சி. தமிழப்பணியைத் தொடர்ந்து செய்வோம். வாழ்க தமிழ். வளர்க தமிழ்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 12:08, 5 ஏப்ரல் 2010 (UTC)
- ஆரம்பத்தில் தமிழ்விக்கிப்பீடியாவில் எழுத ஆரம்பித்தபோது, சரியான தமிழ் சொற்கள் தெரியாமல் எப்படி எழுதுவது என்று தயங்கினேன். ஆனால் தமிழ் விக்சனரி அறிவியல் தொடர்பான கட்டுரைகள் எழுதுவதற்கு மிகவும் உதவியாக இருக்கின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கின்றேன். இங்கே முனைப்புடன் பங்களிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.--கலை 23:32, 5 ஏப்ரல் 2010 (UTC)
- தமிழ் விக்சனரியின் தொடர் பயனாளர் என்ற முறையில் இத்தனை ஆர்வத்துடனும் பொறுப்புடனும் உருவாக்கிவரும் இந்த அகரமுதலி பங்களிப்பாளர்களுக்கு மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடனே மாற்றுச்சொல் கிடைக்காது நான் பலமுறை தமிழில் வழங்கும் வடமொழிச் சொற்களை பயன்படுத்துகிறேன. நடை பயிலும் மணிப்பிரவாளத் தமிழ் சொற்களுக்கு இணையான செந்தமிழ்ச் சொற்களையும் கொடுத்தால் தனித்தமிழில் பேசவும் எழுதவும் விழைவோருக்கு துணையாக இருக்கும்.உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள் !! --Rsmn 05:50, 8 ஏப்ரல் 2010 (UTC)
- ஆரம்பத்தில் தமிழ்விக்கிப்பீடியாவில் எழுத ஆரம்பித்தபோது, சரியான தமிழ் சொற்கள் தெரியாமல் எப்படி எழுதுவது என்று தயங்கினேன். ஆனால் தமிழ் விக்சனரி அறிவியல் தொடர்பான கட்டுரைகள் எழுதுவதற்கு மிகவும் உதவியாக இருக்கின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கின்றேன். இங்கே முனைப்புடன் பங்களிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.--கலை 23:32, 5 ஏப்ரல் 2010 (UTC)
- எச்சொற்களுக்கெல்லாம், தமிழ்ச்சொற்கள் தேவைப்படுகிறது என்ற பட்டியலிட்டால் தகுந்த ஆவணம் உருவாக்கப் படும். ஓரளவு பகுப்பு:வந்தேறிச் சொற்கள் என்பதில் காணலாம். த*உழவன் 04:48, 9 ஏப்ரல் 2010 (UTC)
- ஒன்றைச் சொல்ல விழைகிறேன். நல்ல தமிழில் எழுதவேண்டும் என்பது நம்மில் பலரின் அவா. ஆனால் பிறமொழிச்சொற்களை தேவை இருப்பின், ஆங்காங்கே சிறிதளவு பயன்படுத்துவதால் தவறில்லை. கடன் சொற்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. தேவை இல்லாமலும், தமிழ்ச்சொற்களை வலிந்து விலக்கியும் பிறமொழிச்சொற்களை ஆள்வதைத் தவிர்ப்பது நல்லது. தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உண்டு. கருத்து ஆழப்படும் (ஆழப் பொருள் உணர்த்தும்), பிற சொற்களோடு பல நிலைகளில் இணங்கி நிற்கும், சொற்கள் எளிதாகக் கிளைத்துப் பெருகும். பகுப்பு கடன் சொற்கள் என்று இருப்பது நல்லது. வந்தேறி என்னும் சொல் தவறில்லை என்றாலும், தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய சொல். --செல்வா 02:59, 12 ஏப்ரல் 2010 (UTC)
- ஆம். வந்தேறிச் சொற்கள் என்பது அம்மொழிச் சொற்களைப் பேசும் இனத்தவரோடு தொடர்பு படுத்தி தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். கடன் சொற்கள் என்பதில் கூட எனக்கு உடன்பாடில்லை. பலவும் நாம் இல்லாமல் கடன் வாங்கிய சொற்கள் அல்ல. திணிக்கப்பட்ட சொற்கள். திசைச் சொற்கள் என்பது சரியாக வருமா?--ரவி 15:21, 14 ஏப்ரல் 2010 (UTC)
- 'வந்தேறி' என்பது ஒட்டுண்ணி என்பது போலச் சற்று எதிர்மறையாகத்தான் தோன்றுகிறது. திசைச் சொற்கள் என்றோ, குடியேறிய சொற்கள் என்றோ மாற்றலாம். பழ.கந்தசாமி 00:39, 18 ஏப்ரல் 2010 (UTC)
- இரவி சொல்லும் கருத்து மிகவும் முக்க்கியமானது. பல சொற்கள் திணிப்புச் சொற்கள், அதுவும் வலிந்து திணித்த சொற்கள்.ஆகவே பிறமொழிச் சொற்கள் என்றோ புறமொழிச்சொற்கள் என்றோ புறச்சொற்கள் என்றோ கூறலாம். திசைச் சொற்கள் என்னும் வகைப்பாடு பொருந்தும் என நினைக்கிறேன்.--செல்வா 02:34, 18 ஏப்ரல் 2010 (UTC)
- பகுப்பு பேச்சு:வந்தேறிச் சொற்கள் (தொடர்க..)
தானியங்கிக் கணக்குகள்
தொகுஅண்மைய மாற்றங்களில் தானியங்கித் தொகுப்புகள் ஏதும் நெரிசலை ஏற்படுத்தினால் உடனடியாக நிருவாகிகள் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டுகிறேன். இதன் மூலம் இக்கணக்குகளுக்குத் தானியங்கி உரிமை வழங்க இயலும். நன்றி--ரவி 16:27, 14 ஏப்ரல் 2010 (UTC)
- ரவி அவர்களுக்கு வணக்கம்.
- இரண்டு நாட்களுக்கு முன்பு த.உழவனுக்கு தானியங்கி உரிமை கேட்டு எழுதினேன். பதிலில்லை. தாங்கள் தானியங்கி உரிமை வழங்கியமைக்கு நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 00:21, 15 ஏப்ரல் 2010 (UTC)
- உடன் பதிலுரைக்க இயலவில்லை. வெளியூர் சென்றிருந்தேன். தானியங்கி உரிமையை வழங்கும் அணுக்கம் எனக்கு இல்லை. அதனை இரவிதான் வழங்க வேண்டும்.அவர் வழங்கியமை கண்டு மகிழ்கிறேன். உங்கள் தானியங்கியின் மேலாண்மைச் சிறக்க வாழ்த்துக்கள் பெரியண்ணன்.த*உழவன் 05:46, 15 ஏப்ரல் 2010 (UTC)
பகுப்புகள்
தொகுபல்லாயிரக்கணக்கான சொற்களுக்கு சரியான பகுப்பு இல்லை. இதனை நாம் சரி செய்தல் வேண்டும். (தமிழ்ப்) பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் பகுப்பு கூட ஆயிரக்கணக்கான சொற்களுக்கு இல்லை. தமிழ்ப் பெயர்ச்சொற்கள் 3,300 உக்கும் குறைவாக உள்ளன, தமிழ் வினைச்சொற்கள் வெறும் 184 என்றே காட்டுகின்றது. இத் தரவுகள் நாம் முழுமையாக பகுப்புகளைப் பதிவு செய்யவில்லை என்பதனையே காட்டுகின்றது. முன்னர் தமிழ்ப் பெயர்ச்சொற்களை வெறும் பெயர்ச்சொற்கள் என்று குறித்தால் மட்டுமே போதும் என எண்ணினோம். இவற்றை தமிழ்ப் பெயர்ச்சொற்கள் என மீண்டும் திருத்துவது தேவையோ என நினைக்கின்றேன். இப்பொழுதே சரிவர எண்ணி சீராக எல்லா சொற்களுக்கும் தகுந்த பகுப்புகள் இடுவது நல்லது. மூன்றெழுத்துச் சொற்கள், இரண்டெழுத்துச் சொற்கள் என்பன குறித்திருந்த பொழுதும் அவை பெயர்ச்சொற்களா, வினைச்சொற்களா, உரிச்சொற்களா என குறிப்பிடப்படவில்லை. உரிச்சொற்களையும், பெயரடை (பெயரை ஒட்டிய உரிச்சொற்கள்), வினையடை (வினையை ஒட்டிய உரிச்சொற்கள்) என்று பிரித்தே இடலாமா? இதுபற்றிய செயல்தொடக்கம் முக்கியம்.--செல்வா 15:46, 15 மே 2010 (UTC) (ஓர் ஒப்பீட்டுக்காக, ஆங்கிலத்தில் 120,226 ஆங்கிலப் பெயர்ச்சொற்கள், 17,553 ஆங்கில வினைச்சொற்கள், 45,591ஆங்கிலப் பெயரடைச் சொற்கள் (adjectives), 9,589ஆங்கில வினையடைகள் (adverbs) பதிவாகியுள்ளன. இப்பக்கத்தைப் பார்க்கவும்).--செல்வா 16:02, 15 மே 2010 (UTC)
- உங்களுடைய கருத்தையே பெரியண்ணன் முன்பு தெரிவித்திருந்தார், என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் பெயர்ச்சொற்கள் என்பதனை விட, பெயர்ச்சொற்கள் என்பதே உகந்தது. தமிழல்லாத பெயர்ச்சொற்களுக்கு மட்டும், பகுப்புகளுக்கு முன்னொட்டாக, அம்மொழியினைக் குறிக்கும் முறையே
(பகுப்பு:ஆங்கிலம்-பெயர்ச்சொற்கள்/பகுப்பு:இந்தி-பெயர்ச்சொற்கள்) சிறப்பெனக் கருதுகிறேன்.
தற்பொழுது பகுப்பு:பகுக்காச் சொற்கள் என்பதிலுள்ளவைகளை, பகுத்து வருகிறேன். இம்மாதத்தில் அப்பணியை முடித்துவிடுவேன். அனைத்து சொற்களையும் பகுக்க வேண்டி ஆர்வம் கொண்டு செயல்படுகிறேன். பகுப்பிட வேண்டிய தமிழ் பெயர்/வினை/பெயரடை/வினையடை என்பதற்கான சொற்பட்டியலை நமது பங்களிப்பாளர்கள் தந்தால், அவரின் பெயரினையும் தொகுப்புரையில் இணைத்து, பயனர்:TamilBOT விரைந்து செயல்பட முடியுமென என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.த*உழவன் 00:14, 17 மே 2010 (UTC)
- ஓ அப்படியா. பெரியண்ணன் சேரும் முன்னரே இது பற்றி நாம் இருவரும் பேசியுள்ளோம், ஆனால் அதுவல்ல முக்கியம். பகுப்பில் தமிழ்ப் பெயர்ச்சொற்கள், தமிழ் வினைச்சொற்கள் என்று முன்னொட்டுகளுடன் இருப்பது ஓர் ஒழுக்கம் உடையதாக இருக்கும். இல்லமலும் இருக்கலாம் என்பதை அறிவேன். இருப்பது நல்லது என்று நினைக்கின்றேன்.--செல்வா 16:17, 18 மே 2010 (UTC)
- பகுப்பு:பகுக்காச் சொற்கள் பகுக்கப்பட்டு விட்டன. இருப்பினும்பகுப்பு:ஆங்கில மொழி(1,152 சொற்களை) என்பதனை மேம்படுத்த வேண்டும்.
ஆங்கில மொழி விக்சனரியில் உள்ள சொற்கள்
தொகுகீழ்க்காணும் தரவு, ஆங்கில விக்சனரியில் இருந்து மட்டும் பெற்றது. உலக மொழிகளில் பிரான்சியம் (பிரெஞ்சு) முதலிலும் (1,776,520 சொற்களுடன்), ஏறத்தாழ 40,000 சொற்கள் குறைவாக அடுத்து ஆங்கிலமும் உள்ளது (1,736,279). 3 ஆவது இடத்தில் சிறு மக்கள் தொகை கொண்ட இலித்துவேனியமும், அடுத்து துருக்கியமும் என்று வரிசையில் நிற்கின்றன. இன்றைய நிலையில் தமிழுக்கு அடுத்தாற்போல இடாய்ச்சு 16 ஆவது இடத்தில் உள்ளது (தமிழை விட 6,000 சொற்களே குறைவு, இப்பொழுது). எசுப்பானியம், 27 ஆவது இடத்தில் 46,419 சொற்களுடன் உள்ளது. தமிழ் முதலவதாக வரவோ முதல் 3 மொழிகளில் ஒன்றாக வரவோ வாய்ப்புள்ளது (தமிழில் வளம் உள்ளது, ஆனால் முனைப்பாய், துணை சேர்த்து, சொற்களைச் சேர்த்து இடத்தைப் பிடிப்போமா என்பது தெரியவில்லை). ஒரு பதிவாக இத்தரவுகள் இருக்கட்டும் என இங்கே ஒப்பீட்டுக்காக இடுகின்றேன்.
மொழி | மொத்த சொற்கள் | பெயர்ச் சொற்கள் |
வினைச் சொற்கள் |
பெயர் உரிச்சொற்கள் (பெயரடை) adjectives |
வினை உரிச்சொற்கள் (வினையடை) adverbs |
---|---|---|---|---|---|
ஆங்கிலம் | 195,523 | 121,470 | 17,661 | 46,473 | 9,669 |
பிரான்சியம் | 25,130 | 15,551 | 3,908 | 4,497 | 1,174 |
இடாய்ச்சு | 19,059 | 13,169 | 2,570 | 2,831 | 489 |
எசுப்பானியம் | 22,044 | 13,180 | 3,930 | 4,199 | 735 |
பின்லாந்தியம் | 45,377 | 31,087 | 7,133 | 5,353 | 1,804 |
போர்த்துகீசியம் | 5,600 | 3,866 | 682 | 788 | 264 |
கிசுவாகிலி | 1,670 | 1,310 | 207 | 127 | 26 |
இந்தி | 1,889 | 1,408 | 159 | 262 | 60 |
இடேனீசியம் | 3,780 | 2,600 | 532 | 525 | 123 |
தமிழ் | 261 | 241 | 19 | 8 | 1 |
--செல்வா 01:00, 1 ஜூன் 2010 (UTC)
- அண்மைய சில் மாதங்களில் போர்த்துக்கீசியம் நமக்குக் கீழிருந்து தானியங்கி உதவியுடன் வேகமாக முன்னேறுவதைக் கவனித்துக்கொண்டிருந்தேன். பன்மை வார்த்தைகள், மற்றைய சொற்திரிபுகளை தானியங்கி கொண்டு பதிவேற்றம் செய்தனர். எடுத்துக்காட்டாக நண்பர்கள் என்ற வார்த்தையை அதிகம் விளக்காமல் நண்பர் என்பதன் பன்மை எனச் சேர்த்து அதற்கான உள்ளிணைப்பைத் தந்தனர். நாமும் தானியங்கி மூலம் அவ்வாறு சேர்க்கவேண்டும். த*உழவனும், நானும் அதுபற்றிப் பேசிக்கொண்டுள்ளோம். பணிப்பளு சற்றுக் குறையும்போது செய்யலாம் என்றுள்ளேன். செம்மொழி மாநாட்டுக்கு நீங்கள் வரும்போது நாம் இதுபற்றியெல்லாம் பேசவேண்டும். (செம்மொழி மாநாட்டுப் பதிவு நான் 6-7 வாரங்கள் முன் செய்தபோது இடம் இல்லை என்று நிராகரிக்கப்பட்டுவிட்டேன். இருப்பினும், சூன் 25 அல்லது 26-ல் நான் கோவையில் இருப்பேன். செம்மொழி மாநாட்டுக்கு வரும் சிலரோடு எனக்குப் பேசவேண்டியுள்ளது. அப்போது நாமனைவரும் சந்திப்போமா? சிந்திப்போமா? பழ.கந்தசாமி 01:15, 1 ஜூன் 2010 (UTC)
- கட்டாயம் நாம் சந்திப்போம். நான் நேரடியாக கோவைக்குத்தான் செல்லவுள்ளேன். --செல்வா 01:27, 1 ஜூன் 2010 (UTC)
- இதில் தமிழ் பெயர்ச்சொற்களின் எண்ணிக்கை பிழையாக உள்ளது. இப்பக்கத்திலேயே நீங்கள் கூறிய எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது, இதன் பிழைகள் புரியும். நீங்கள் சுட்டியபிறகு ஏறத்தாழ 1000அதிகரித்துள்ளது. இதுபற்றி அங்கேயே எனது கருத்தினையிட்டுள்ளேன்.
- தமிழ் பீடுநடை போட தொழில்நுட்பமே தேவை. கணினித்துறையில் பலர் இருந்தும் ஏனோ அவர்கள் இதுபற்றி கலந்தாயவில்லை. அது நடக்கும் அன்றே..
- நான் இங்கு வரும் போது ஒன்றுமே தெரியாது. இரவி, தெரன்சு, பெரியண்ணன், பழ.கந்தசாமி ஆகியோர், என்னை ஆக்கினர். மேலும் பல தொழில்நுட்பங்கள் தேவை. அதனைப்பற்றி கலந்தாய்வு செய்தால் தான், முன்னேற்ற பலன் கிட்டும்.
- தற்போது தகவலெந்திரன் செயல்படுவதினை பற்றி அங்கேயே கூறுங்கள். (த*உழவன் 01:43, 1 ஜூன் 2010 (UTC))
- தமிழ்ப் பெயர்ச்சொற்களின் எண்ணிக்கை இப்பக்கத்தில் இருந்து எடுத்தேன். 241 தானே காட்டுகின்றது?! மேலே அட்டவணையில் உள்ளது அனைத்தும் ஆங்கில விக்சனரியில் பதிவான பிறமொழிச்சொற்களின் தொகுப்பில் இருந்து ஒரு பகுதி மட்டுமே. ஆம் தொழில்நுட்பம் தேவைதான். எனினும், 50-100 பேர் என்று முனைந்து நாள்தோறும் உழைத்தாலும் பெரும் வளர்ச்சி பெறலாம். --செல்வா 02:33, 1 ஜூன் 2010 (UTC)
- தமிழ் பெயர்ச்சொற்களின் தற்போதைய 4,392 எண்ணிக்கை ஆகும். இச்சொற்கள்(4,392) பெயர்ச்சொற்களின், துணைப்பகுப்புகளாக மாற்றப்படாதவையே ஆகும். தற்போதுள்ள பெயர்ச்சொற்களோடு(4,392), அதன் துணைப்பகுப்புகளையும் இணைத்தால் இன்னும் அதிகமாகும்.
- இருப்பினும், தமிழின் எண்ணிக்கை, ஆங்கில எண்ணிக்கையை விடக் குறைவே. விரைவில் தமிழின் எண்ணிக்கை அனைத்திலும் அதிகரிக்கப் பாடுபடுவோம்.த*உழவன் 03:46, 28 மே 2010 (UTC).
- தற்போதுள்ள பெயர்ச்சொற்களோடு, பெயர்ச்சொற்களின் துணைப்பகுப்புகளும் மற்ற மொழி விக்சனரிகளையொட்டி இணைக்கப்படுகின்றன. அதனால் பெயர்ச்சொற்களின் எண்ணிக்கையும் கூடும்.(த*உழவன் 05:56, 1 ஜூன் 2010 (UTC))
வணக்கம். விக்சனரிக்கு என்று தனி பங்களிப்பாளர் வட்டம் உருவாகி உழைப்பைத் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொற்கள் எண்ணிக்கை அடிப்படையில் உலக விக்சனரி வரிசை என்பது மாறிக் கொண்டே இருக்கும். எனவே, அதை இலக்கு வைத்து மட்டுமே செயல்படுவது சரியாக இருக்காது. எடுத்துக்காட்டுக்கு, நண்பர்கள் என்பதற்குத் தனிபக்கம் உருவாக்குவது பக்க எண்ணிக்கையைக் கூட்டும். ஆனால், ஒரு பயனராக எனக்கு உதவாது. நண்பன், நண்பர், நண்பர்கள், நண்பனின், நண்பனால், நண்பனோடு என்று எப்படித் தேடினாலும் அவை அனைத்தும் நண்பன் அல்லது நண்பர் என்ற பக்கத்துக்கு வழிமாற்றப்படுவதே சிறப்பாக இருக்கும். மூலச் சொல்லுக்கு மட்டுமே முதன்மைப் பக்கம் இருக்க வேண்டும். அங்கு அச்சொல்லின் அனைத்து வகைப்பயன்பாடுகளும் ஒரு விரிவாகக் குறிப்பிடவேண்டும். இது போலவே நமது அனைத்துச் செயல்பாடுகளும் பயன் கருதி இருக்க வேண்டுமே தவிர தரவுகளைக் குறி வைத்து இருக்கக்கூடாது--ரவி 18:23, 17 ஜூலை 2010 (UTC)
- பயன்பாட்டை அடிப்படையாக க் கொண்டே, எண்ணிக்கையைக் கூட்டுவேன்.த*உழவன் 00:52, 18 ஜூலை 2010 (UTC)
கோவை சந்திப்பு
தொகு- தமிழ் விக்சனரி பற்றி கோவை செம்மொழி மாநாட்டுச் சமயத்தில் நாம் சந்தித்து உரையாட முயலவேண்டும். தாமதப் பதிவால் எனக்கு செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள இயலவில்லை எனினும் தனியாக நாம் சந்திக்க முயல்வோம். சூன் 25 அல்லது 26 மாலை எனக்கு முடியும் (சூன் 15 வாக்கில் இதில் சரியான நாளைத் தெரிவிக்கிறேன்). இந்தியாவில் எனக்கு அலைபேசி இப்போது இல்லை எனினும் த*உழவன் அலைபேசி எண் என்னிடம் உள்ளது. அதன்மூலம் நாமனைவரும் சந்திப்பது பற்றி ஒருங்கிணைத்துக்கொள்வோம். எனது மின்னஞ்சல்: kandyடாட்palஅட்gmail அல்லது kandyஅடிக்கோடுpalஅட்yahoo என்பதாகும். பழ.கந்தசாமி 01:44, 1 ஜூன் 2010 (UTC)
- இரவி இரண்டு தினம் முன் இதுபற்றி பேசினார். அதன்படி செல்வா அதிக நாட்கள் இருப்பாரெனத் தெரிகிறது. இரவியின் அலைப்பேசி எண் உங்களுக்கு தேவையெனின் தருகிறேன். அவரிடம் நீங்கள் கேட்டால் அவ்வெண்ணைத் ! தருவதற்கு அனுமதி வாங்கியுள்ளேன். எனது தொழில்நிலை காரணமாக, ஓரிரு தினங்கள் மட்டுமே என்னால் உடனிருக்க இயலும். அதுவும் முன்பு பதிவு இல்லாததால், தனியாகதான். மாநாட்டில் விக்கிப்பீடியாவுக்கென தனியிடம் ஒதுக்குவார்களென நினைக்கிறேன். தகுந்த நாளைச் சொல்லுமாறு, இரவியிடம் கேட்டுள்ளேன்.த*உழவன் 02:09, 1 ஜூன் 2010 (UTC)
- த*உழவனே! எனக்கும் ஓரிரு நாட்கள் தான் (சூன் 25-26 தான்) முடியும். அந்த நாட்களில் ஒரு நாள நீங்களும் கோவைக்கு ஒதுக்க முடிந்தால் செம்மையாக இருக்கும். இரவியின் எண்ணை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறேன். பழ.கந்தசாமி 02:14, 1 ஜூன் 2010 (UTC)
- நான் கோவைக்கு வர, எனது இடத்திலிருந்து (பேருந்து+தொடருந்து) ஏறத்தாழ7மணிநேரங்கள். மதியம் 1-2மணிக்கே வர இயலும். முடிந்தவரை அனைவரையும் காணும் ஆவல் என்னுள் மேலோங்குகிறது. அன்றாடப் பணிகளை எப்படி ஓரம்கட்டுவதென்று இப்பொழுதே சிந்திக்கிறேன். அனைவரையும் சந்திக்கும் நாளை எதிர் நோக்குகிறேன். வணக்கம்(த*உழவன் 05:16, 1 ஜூன் 2010 (UTC))
செம்மீன் கவர்ச்சி வலை
தொகு- செல்வா! சொல்லியல் வல்லுனர்களை இழுக்க நம்மிடம் 'கவர்ச்சி வலை' :) ஏதேனும் உள்ளதா? செம்மொழி மாநாட்டில் தமிழ்ச் செம்மீன்களுக்கு வலைவீசினால் சிக்குமா? நீங்கள் செம்மொழி மாநாட்டுக்குச் செல்கிறீர்களா? (நான் ஓரிரு நாட்கள் வர வாய்ப்புண்டு). பழ.கந்தசாமி 23:02, 6 மே 2010 (UTC)
- நான் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றேன். தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்சனரி, விக்கிச் செய்திகள் பற்றியும் உறவுத்திட்டங்களைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயலுவேன். சொல்லியல் வல்லுனர்களைக் கட்டாயம் ஈர்க்க முற்பட வேண்டும். என்னால் இயன்றதைச் செய்வேன். நாம் அங்கு நேரில் சந்திக்கவும் இயலும் எனில் மகிழ்வேன். --செல்வா 00:57, 7 மே 2010 (UTC)
- விக்கித்தமிழ் தழைத்திட, நீங்கள் செய்யும் முயற்சிகள் ஓங்கிட, எல்லாம் வல்ல இயற்கையன்னையை வேண்டுகிறேன்.த*உழவன் 04:04, 7 மே 2010 (UTC)
- நன்றி, த*உழவன். உங்களைப் போலவும், நம் விக்கி நண்பர்களைப் போலவும் இன்னும் பலர் முன்வந்துழைத்தால், நாம் எல்லோரும் கூட்டாக நிறைய செய்ய இயலும். பா'ல்ட்டிக் மொழிகளில் ஒன்றாகிய இலித்துவேனிய மொழி பேசும் 3.4 மில்லியன் மக்கள், தங்கள் மொழி விக்கியை உலக மொழி விக்சனரிகளில் 3 ஆவதாக நிற்குமாறு செய்து உள்ளனர் (539,402 சொற்கள்). சராசரியாக 6-7 இலித்துவேனியருக்கு ஒரு சொல்!! இக்கணக்கில் 70-80 மில்லியன் தமிழர்கள் 10 மில்லியன் சொற்கள் ஆக்க வேண்டும் :) தமிழ் விக்சனரி இடாய்ச்சு மொழி, இடச்சு மொழி, அரபி, இத்தாலிய, கொரிய மொழிகள் ஆகியவற்றைக் காட்டிலும் இன்று முன்னணியில் உள்ளது என்பது பெருமைதான். ஆனால் தமிழ்ச் சொற்களின் அடிப்படையில் மட்டுமே நாம் உலக மொழிகளில் முதல் 3-5 மொழிகளில் ஒன்றாக இருக்க இயலும் (முதலாவதாகக்கூட இருக்க இயலும்!!). மொத்தமாகப் பார்க்கும் பொழுது ஆங்கிலத்தில் உள்ளதைவிடத் தமிழில் கூடுதலான சொற்கள் உள்ளன (ஆங்கிலத்தில் வழங்கும் பல ஆயிரம் சொற்களுக்குத் தமிழில் சரியான ஈடான சொற்கள் இல்லை என்பது மேலே சொன்னதோடு முரண்படாத வேறு செய்தி). ஆங்கிலத்தில் ஏறத்தாழ 171,476 சொற்கள் உள்ளனவாம் (பார்க்க: http://www.askoxford.com/asktheexperts/faq/aboutenglish/numberwords?view=uk) தமிழில் 300,000 சொற்களுக்கு மேல் இருக்கும் (தமிழ் இணையப் பல்கலைக்கழக அகராதியில், இப்பொழுதுள்ள 6 தொகுதிகளில் மட்டும், 250,000 சொற்கள் உள்ளனவாம்). வெறும் சொற்களால் மட்டும் பயன் இல்லை. அவற்றைப் பயன்படுத்தும் விரிவான பல்துறை பின் புல இலக்கியம் வேண்டும். தமிழர்களில் ஒரு சிறு தொகையினர் விழித்தெழுந்தாலும் வியப்புறும் அடிப்படை பல்துறை சான்றுநூல்கள் தமிழில் படைக்க இயலும். இவையெல்லாம் கருத்துப் பகிர்வு மட்டுமே. யாரும் பிறழ எண்ணவேண்டாம். --செல்வா 04:37, 7 மே 2010 (UTC)
ஆலமரத்தடியை Site Notice அல்லது அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் சேக்கவும்
தொகுநன்றி. --Natkeeran 02:50, 28 ஜூலை 2010 (UTC)
வழு
தொகுimportScript('MediaWiki:JavascriptHeadings.js'); } ==URL Fixes==
இங்கு ஜாவாஸ்கிரிப்டில் /* == முன்பாக வரவேண்டும். இல்லாததால் எனது உலாவியில் வழு காண்பிக்கிறது. --10:37, 26 ஜூலை 2010 (UTC)
நன்றி
தொகுத*உழவனின் உதவியால் விக்சனரியில் இருந்த வழு நீக்கப்பட்டுள்ளது. உதவியதற்கு நன்றி.
ஆங்கில விக்சனரியில் இருப்பது போன்று Translation section ல் உள்ள மொழிமாற்றி முன்தோற்றம் பெட்டி, பொத்தான் ஆங்கில விக்சனரியின் conrad.Irwin/Editor.js நிரலை நகலெடுத்திருக்கிறேன். அது விக்சனரி மணல்தொட்டியில் சோதித்த வகையில் வேலை செய்கிறது. அதில் iso code பெட்டியில் ta தவிர்த்து ஏனைய குறிகள் கொடுத்து தொடர்புடைய மொழிகள் கொடுக்கலாம். இங்கு உதாரணமாக fr என்றும் blood க்கு இணையான பொருளை அடுத்த பெட்டியில் கொடுத்தால் அதன் தொடுப்புகள் தானியக்கமாக உருவாகிவிடும். ஆனால் fr என்பது ஒரு வார்ப்புரு. (பிரான்சியம் என்று வந்தால் fr என்பது வார்ப்புரு) இது போன்று பல்வேறு மொழிக்கு ஏராளமான வார்ப்புருக்கள் உண்டு. அவற்றை அப்படியே import/Export from en:Category:Language Templates பக்கத்திலிருந்து வெட்டி ஒட்டிவிடலாம். இதுபோன்ற வேலைகளை சுலபமாக செய்துவிடலாம். முதலில் வார்ப்புருக்களில் உள்ள பகுப்பு பெயரை மொழி மாற்றி என்று மாற்றிவிடவும்.
மேலும் தற்போதைக்கு மொழி மாற்றம் செய்யமலே இந்த மொழி வார்ப்புருக்களை (import option மூலம்) பதிவேற்றிவிடலாம். பின்னர் ஒவ்வொன்றாக தேவைப்படும் போது மாற்றிக்கொள்ளலாம். அல்லது கூகுள் மொழிமாற்றி உதவி கிடைத்தாலும் செய்து கொள்ளலாம். அவர்களிடம் ஏற்கெனவே எளிய வழி இருக்கலாம்.
இதனை நீங்கள் சோதிக்க importScript("User:Mahir78/Monobook.js"); என்பதை உங்களது [[User:YourUserName/monobook.js]] பக்கத்தில் கொடுக்கவும். {{trans-top}} {{trans-middle}} {{trans-bottom}} அவசியம்
-- Mahir78 18:16, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
- ஆங்கில விக்சனரியின் வசதிகள் இங்கில்லையே என்று ஓரிரு வருடங்களாக ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறேன். அவ்வசதிகளை, ஒவ்வொன்றாக நீங்கள் இங்கு கொண்டுவருவது கண்டு, என்னுள் பேரானந்தம். எனவே, நாங்கள் தான் உங்களுக்கு நன்றி கூற விரும்புகிறோம். எனக்குள்ளது, வெறும் அனுபவ அறிவே. உங்களிடமிருந்து எனக்கு கிடைக்கும் மெட்டாவிக்கி அனுபவங்கள் மதிப்புமிக்கது. நன்றி. நீங்கள் கூறிய மாற்றங்களை செய்ய முயலுகிறேன். உங்களுக்கு அணுக்கத்தின் மூலம் கிடைக்கும் வசதிகள் நேரிடையாக வேண்டுமென்று, இரவியிடம் கூறி உள்ளேன்.விரைவில் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வார்.நினைத்தவுடன் மாற்றங்களைச் செய்து பார்க்கும் போது, கிடைக்கும் மகிழ்ச்சி விரைவில் உங்களுக்கு கிடைக்குமென நம்புகிறேன்..--த*உழவன் 01:37, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
தற்காலிக நிறுத்தம் தேவையா?
தொகு- புதிய பக்கவடிவமைப்பு உரையாடல்கள் தொடர்ந்துகொண்டுள்ளன. அது விரைவில் முடிவாகலாம். இருப்பினும் அதற்காக, சில புதிய பக்கங்களைச் சேர்த்துவதை நிறுத்தத்தான் வேண்டுமா? ஆயிரக்கணக்கான பக்கங்கள் மிக வேறுவடிவம் கொண்டுள்ளன. அவற்றோடு ஒப்பிடுகையில், பக்கவடிவம் முடிவுறும்வரை உருவாக்கப்படும் சில பக்கங்களை மாற்றுவது பெரிய கடினமாக இருக்காது, மேலும், இப்பக்கங்கள் ஓரளவுக்கு முழுமையான வடிவுடனும் இருக்கின்றன. கருத்துகள்? பழ.கந்தசாமி 16:46, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
- நாம் தொடர்ந்து பக்கங்கள் ஆக்குவதே நல்லது. சில நாட்களில் அதிக பக்கங்கள் சேர்ந்துவிடாது. நீங்கள் சொல்லுவது போல பல்வேறு வடிவங்களில் இருபனவற்றை மாற்றும்பொழுது இவற்றையும் மாற்றுவது கடினமாக இராது. --செல்வா 17:05, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
வாழ்த்துகள்
தொகுநிருவாகியாகத் தேர்வுபெற்ற பழ.கந்தசாமி, பரிதிமதி ஆகியோருக்கு வாழ்த்துகள். உங்களோடு நானும் தேர்வுபெற்றதற்கு மகிழ்ச்சி.வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி.--செல்வா 20:40, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
- நானும் எனது வாழ்த்துக்களை பழ.கந்தசாமி,பரிதிமதி,செல்வா ஆகியோருக்கு தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். --Inbamkumar86 20:52, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
- வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். அனைவரும் சிறந்த தெரிவுகள். --Natkeeran 00:01, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.ஓங்குக தமிழ் வளம்--த*உழவன் 00:51, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
- புதிய நிருவாக அணுக்கம் பெற்றவர் கவனத்திற்கு..
- மீடியாவிக்கி_பேச்சு:Common.js#.E0.AE.B5.E0.AE.B4.E0.AF.81 என்பதனைப் பாருங்கள்.மாகீருக்கு உதவ கேட்டுக்கொள்கிறேன்.
- மேலும்,மீடியாவிக்கி:Common.css என்பதிலுள்ளவைகளை முழுமையாக நீக்கி,மாற்றவும்/common.css அப்படியே ஒட்ட வேண்டுமா? அல்லது அங்கு இருப்பவற்றின் ஒரு பகுதியை மட்டும், மாற்றவேண்டுமா? அல்லது ஒட்டவேண்டியதை, எழுதிக்கொண்டு உள்ளாரா?
- அதைப்போலவே,மீடியாவிக்கி:Common.js என்பதில், இதனையும் (மாற்றவும்/Common.js)கவனிக்கவேண்டுகிறேன்.
அவரது செயல்கள் நம் பக்கவடிவ மாற்றத்திற்கு அடித்தளமிடும் என்றே எண்ணுகிறேன்.{{சிறியது|--த*உழவன் 01:15, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
- புதிய பொறுப்பாளர்களை (செல்வா, பரிதிமதி, பழ.கந்தசாமி) மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். அவர்கள்தம் பங்களிப்பு பன்மடங்காகப் பெருகுக என வாழ்த்துகிறேன்!--பவுல்-Paul 03
- 57, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
- தமிழை வீழ்வடையாமால் வைக்கும், இன்னமும் உயர்த்திவிடப் பாடுபடும் சிறந்ததொரு தளமாகத் திகழும் இங்கே, நிர்வாகிகளாகத் தோற்றம் பெற்றிருக்கும் (செல்வா, பரிதிமதி, பழ.கந்தசாமி) அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்! --சி. செந்தி 13:12, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
- மிக்க நன்றி பவுல், செந்தி!--செல்வா 14:29, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
- வாழ்த்திய அனைத்து நல்லிதயங்களுக்கும் நன்றி. பழ.கந்தசாமி 02:38, 6 ஆகஸ்ட் 2010 (UTC)
தமிழ் சொற்கள் தேவை
தொகுபுரோகாரியோட்டு(Prokaryote), இயூகாரியோட்டு (Eukaryote) என்பவற்றை தமிழில் எப்படிக் குறிப்பிடலாம்? --கலை 09:16, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
- கலை, புரோகார்யோட்டு என்பது நிலைக்கருவற்ற உயிரி, யூக்கார்யோட்டு என்பது நிலைக்கருவுயிரி அல்லவா (இதில் கரு மற்றும் நுட்பசெறிவான பகுதியைச் சுற்றி உறை இருக்கும் அல்லவா?)? இது பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் எங்கோ உரையாடிய நினைவு இருக்கின்றது. புரோகார்யோட்டு என்பதைக் கருவிலி நுண்ணுயிரி (அல்லது கருவிலி) என்றும், யூக்கார்யோட்டு என்பதௌக் கருவுயிரி அல்லது பல்லணுக்கருவுயிரி (பல்லணு என்பது பல்லுயிரணு) என்றும் கூறலாம். இவை இப்போதைக்குக் கருதுவோம். இவற்றை மேலும் செப்பப் படுத்தலாம், திருத்தலாம்.--செல்வா 14:11, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
- இதனைப்பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் ஆராய்ந்த பக்கம்: பேச்சு:புரோகாரியோட்டு , இதனையும் பார்க்கவும்: தமிழ் விக்கிபீடியா : ஆலமரத்தடி--சி. செந்தி 18:05, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
- நன்றி, செந்தி. சரியான பரிந்துரைகள். அப்படியே ஏற்கலாம். தமிழ் சொற்கள் தேவை என்னும் பகுதியைப் பார்க்கவும் --செல்வா 20:35, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
- பொருத்தமான அழகான தமிழ்ச் சொற்கள். நன்றி செல்வா, செந்தி. முதன் முதலாக இந்த இரு சொற்களையும் (Prokaryote, Eukaryote)இங்கே இணைத்துள்ளேன். இணைத்துள்ள முறை சரியா எனத் தெரியவில்லை. --கலை 21:13, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
- நன்றி, செந்தி. சரியான பரிந்துரைகள். அப்படியே ஏற்கலாம். தமிழ் சொற்கள் தேவை என்னும் பகுதியைப் பார்க்கவும் --செல்வா 20:35, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
- இதனைப்பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் ஆராய்ந்த பக்கம்: பேச்சு:புரோகாரியோட்டு , இதனையும் பார்க்கவும்: தமிழ் விக்கிபீடியா : ஆலமரத்தடி--சி. செந்தி 18:05, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
தன்னிச்சையாக பட்டைகளின் நிறத்தை மாற்றவேண்டாம்
தொகுத.உழவன், அருள்கூர்ந்து தன்னிச்சையாக பட்டைகளின் நிறங்களையும், எழுத்தின் நிறத்தையும் மாற்ற வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன். எல்லோரும் கலந்துரையாடி எது தேர்வு பெறுகின்றதோ அதனைப் பின்பற்றுவோம். ஒரு குறிப்பிட்ட பக்கத்தை எடுத்து அதன் வெவ்வேறு வடிவங்களை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் எனில், பால்-1, பால்-2 என்று தற்காலிகமாக பக்கங்களை உருவாக்கி அங்கு சில மாதிரி வடிவங்களை செயற்படுத்திக் காட்டலாம். இதே போல பிற இடர்கள், இருக்கும் என்றாலும் அவற்றையும் இப்படியான செய்முயற்சிப் பக்கங்களில் செய்து காட்டலாம். --செல்வா 15:28, 14 ஆகஸ்ட் 2010 (UTC)
- இங்கு இல்லாதவைகளை பலவற்றை முன்பு விட சிறப்பாக இருக்க வேண்டி, தட்டுத்தடுமாறி உருவாக்குகிறேன். அங்ஙனம் உருவாக்கும் வார்ப்புருகளைப் பற்றியே குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். அனைவருக்கும் சம உரிமை உண்டு.பட்டைகள் உள்ள வார்ப்புருக்களின் வரலாற்று பகுதியை, ஒப்பிடுங்கள். அதில் பங்கெடுத்துள்ளவர்களைக் காணுங்கள். ஒவ்வொரு வார்ப்புருவும் பலரால் அலசப்படுகிறது. மாற்றப்படுகிறது. (எ. கா.) வார்ப்புரு_பேச்சு:பயன்பாடு உங்களுக்கு தேவைப்படும் மாற்றங்களை அங்கேயே குறிப்பிடலாம்.பின்பு, தன்னிச்சை என்பது பற்றி முடிவு எடுங்கள். இல்லாதவைகள் முதன்முதலாக உருவாக்கப்படும் போது, 100சதவீதம் சரியாக வராது. ஏனெனில், அது தோற்றம். வளர்ச்சி என்பதில் தான், பலநிலை மாற்றங்கள் உருவாகின்றன. அந்நிலை மாற்றங்களை நான் ஏற்கிறேன்.
- அருள்கூர்ந்து, வேண்டிக் என்ற சொற்களைப் பயன்படுத்துவது என்னை நெளிய வைக்கிறது. தயவுசெய்து அதுபோல கூறாதீர்கள். பலவரிகள் எழுதத் தேவையில்லை. உங்களுக்கும், பலருக்கும் நேரம் வீணாகிறது. மீளமை, முன்னைலையாக்கு வசதிகளைப் பயன்படுத்தி, எதனையும் முன்பு இருந்த நிலைக்கு, ஒரு சில நொடிகளில் கொண்டு வந்துவிட முடியும்.
- த*உழவன், செல்வா! நீங்கள் இருவரும் விக்சனரியின் வளர்ச்சிக்காக அயராது உழைப்பவர்கள். அனைவருமே பொதுவான மாற்றங்களை மணல்தொட்டியில், சோதனைப் பக்கங்களில் (கருத்தொருமிப்பு ஏற்படும் வரை மற்ற பக்கங்கள் மாறாதவாறு) மாற்றங்கள் செய்து பரிசீலித்தால் இனி இத்தகைய குழப்பங்களைத் தவிர்க்கலாம். அதை நோக்கிச் சென்றுகொண்டுள்ளதில் மகிழ்ச்சி. பழ.கந்தசாமி 06:36, 15 ஆகஸ்ட் 2010 (UTC)
- பக்கவடிவ அழகினை விட, பொருள் தேடி வரும் பயனருக்கு தேடி வந்ததை உடன் தர வேண்டும் என்பதே என் இலக்கு. இன்று படிப்பவர் எண்ணிக்கையே குறைவு. அப்படி இருக்கும் நிலையில், ஒரு சில சொற்களின் ஐயத்தைத் தீர்த்துக்கொள்ள இங்கு வருவோரின் நேரத்தைக் காப்பதும் நமது கடமையன்றோ.--த*உழவன் 01:39, 15 ஆகஸ்ட் 2010 (UTC)
- அதேசமயம், பொருளோடு கொஞ்சம் அழகும் சேர்த்தால் மக்களை ஈர்க்கும் வாய்ப்புப் பெருகும்தானே! 06:36, 15 ஆகஸ்ட் 2010 (UTC)
த*உழவனே, பக்கவடிவ சோதனைகளை (பட்டை, வார்ப்புரு மாற்றங்கள்) முதலியவற்றை மேற்கூறியவாறு தனிப்பட்ட சோதனைப்பக்கங்களிலோ அல்லது மணல்தொட்டியிலோ செய்து பொதுக்கருத்தைப் பெற்றபின் எல்லாப்பக்கங்களுக்கும் வருமாறு செய்வதே சிறந்தது. பழ.கந்தசாமி 17:38, 14 ஆகஸ்ட் 2010 (UTC)
- எனக்கு முன் பலர் மாற்றங்கள் செய்த இடத்தில், நானும் சில மாற்றங்களை உருவாக்கினேன். அவற்றை அதே நிலைக்கு கொண்டு செல்கிறேன். இனி மணற்தொட்டியில் செய்யும் மாற்றங்கள் கூட பிற பக்கங்களை பாதிக்கிறது. வேறு வழியைத் தவறாது கையாளுகிறேன்.--த*உழவன் 01:39, 15 ஆகஸ்ட் 2010 (UTC)
- நன்றி!பழ.கந்தசாமி. நல்ல அனுபவம். வார்ப்புருக்களையும், சில பக்கங்களையும் அணுக்க வசதி பெற்றவர் மட்டும் மாற்றும் படி, எப்பக்கத்தை பூட்ட முடியும். மேலும், உறுதி செய்யப்பட்ட பக்கத்தினை நிரந்தரமாக யாரும் மாற்றா முறையினையும், அனுமதி பெற்று மாற்றும் முறையினையும் செய்ய முடியும். அந்நோக்கத்தை பிறகு பார்ப்போம். த.இ.ப பற்றி நமது எண்ணங்கள் குவியட்டும். செல்வா முன்மொழிந்த thou சொல்லிலும் நிகழ்ந்த மாற்றங்களை மீட்டெடுக்க, வேறுவடிவம் கொண்டு செய்வேன். --த*உழவன் 07:18, 15 ஆகஸ்ட் 2010 (UTC)
- நன்றி தகவலுழவன், பழ. கந்தசாமி. --செல்வா 14:51, 17 ஆகஸ்ட் 2010 (UTC)
தேவையற்ற படம் அநேக பக்கங்களில்
தொகு{[[ஆதாரம்]]} --->[[படிமம்:Spinning wheel throbber.gif|19px]] [http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%86&table=mcalpin David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - '''{{PAGENAME}}'''] இதில் Spinning wheel throbber.gif என்கிற படம் தேவையற்றது. அநேக பக்கங்களில் வருகிறது. தானியங்கி உதவி கொண்டு நீக்கினால் என்ன? - Mahir78 16:05, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
- இதையேதான், நானும் பலமுறை கூறியுள்ளேன். தேவை இல்லை, நீக்கலாம் என்பது என் கருத்தும்.--செல்வா 16:14, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
- நீக்கலாம் என்றே நானும் கருதுகிறேன். புதிய பக்கவடிவத்தில் எப்படியும் அதைச் செய்ய யாருக்கும் உத்தேசமும் இல்லை என்பதால். பழ.கந்தசாமி 16:27, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
மாகிர், அனைவருக்கும்: தயவு செய்து இது போன்ற தேவைப்படும் மாற்றங்களை ஒரு பக்கத்தில் குறித்து வைத்தால் ஒட்டு மொத்தமாக ஒரே ஓட்டத்தில் சீர் செய்யலாம். ஒவ்வொரு திருத்தத்துக்கும் தானியங்கி பயன்படுத்துவது தேவையின்றி தொகுப்பு எண்ணிக்கையைக் கூட்டும்--ரவி 12:35, 26 ஆகஸ்ட் 2010 (UTC)
- அப்படம் என்னால் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஏறத்தாழ 3500 சொற்களில் பக்கவடிவச் சீரமைப்பு செய்யப்படும் போது சரிசெய்யலாம் என்று குறித்து வைத்திருந்தேன். எனினும், மறந்து போய் விடுகிறது என்பதால், அதனை நீக்கத்துவங்கி விட்டேன். ஏதேனும் விடுபட்டிருந்தால், அது முழுமையாக பின்னர் நீக்கப்படும்.--த*உழவன் 01:22, 27 ஆகஸ்ட் 2010 (UTC)