அணங்கு
பொருள்
அணங்கு, (பெ)
- வருத்தம். (திருமுரு. 289.)
- நோய். (பிங். )
- அச்சம். (சூடாமணி நிகண்டு)
- மையல் நோய். (திவா.)
- கொலை. (பிங். )
- தெய்வம். (தொல். பொ. 256.)
- தெய்வமகள். (திவா.)
- வருத்திக் கொல்லுந் தெய்வ மகள். (குறள்., 918; மணி. 6, 135.)
- தெய்வத்திற் கொப்பான மாதர். (பிங். )
- பேய்
- துணங்கையஞ் செல்விக் கணங்கு நொடித்தாங்கு (பெரும்பாண். 459)
- வெறியாட்டு
- கீழ் சாதிக்காரன். (பிங். )
- அழகு. (பிங். )
- வடிவு
- அருந்திற லணங்கி னாவியர் பெருமகன் (சிறுபாண். 86)
- குட்டி. ஆளியி னணங்கு மரி யின் குருளையும் (சிலப். 25, 48).
(வி)
- வருந்துதல்
- நீயணங்கிய தணங்க (சீவக. 957)
- இறந்துபடுதல்
- நற்போ ரணங்கிய (பு. வெ. 7, 27)
- பின்னிவளர்தல்
- முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோடு (மலைபடு. 223)
- பொருந்துதல்
- உரையணங்குந் தமிழ் வேந்தன் (இறை. 50, உரை)
- ஒலித்தல்
- புகையணங்க (பு. வெ. 10, பொது. 8).
(செயப்படுபொருள் குன்றா வினை )
- வருந்துதல்
- புறத்தோ னணங்கிய பக்கமும் (தொல். பொ. 67)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம், n.
- pain, affliction, suffering
- disease
- fear
- lust
- killing
- deity
- Celestial damsel
- Demoness that takes away one's life by awakening lust or by other means
- Beautiful woman, as resembling a celestial damsel
- devil
- Dancing under religious excitement, esp. possession by Skanda
- Low-caste person
- beauty
- form
- Young offspring
வினைச்சொல்
- To suffer, to be distressed
- To die, to be slain
- To interlace in growing together, as bamboos
- To be joined, united
- To sound, make noise
(செயப்படுபொருள் குன்றா வினை )
- To afflict
விளக்கம்
தொகு- அணங்குதல் என்னும் வினைச்சொல் ஒலித்தல், விரும்புதல், அண்டுதல், அஞ்சுதல், வருந்தல், வருத்துதல், நோயுறுதல் போன்று பல பொருள்களில் இலக்கியத்தில் வழங்கப்படுகிறது.
பயன்பாடு
தொகு- அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு (குறள் 1081) - நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்குஅணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து (குறள் 1082) - பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே (ஐங்குறு. 182)
- அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
( மொழிகள் ) |
சான்றுகள் ---அணங்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற