பொருள்

அந்தாதி(பெ)

  1. ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல் அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக] அமையும் பாடல்களால் ஆன செய்யுள்/பிரபந்தம்
  2. அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் அந்தாதித் தொடை
  3. முதலும் முடிவும்
  4. தலை முதல் பாதம் வரையுள்ள உறுப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. poem in which the last letter, syllable or foot of the last line of one stanza is identical with the first letter, syllable or foot of the succeeding stanza, the sequence being kept on between the last and the first stanza of the poem as well
  2. a metrical sequence
  3. beginning and end
  4. the limbs from head to foot
விளக்கம்
பயன்பாடு
  • வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள் (திரைப்பாடல்')

(இலக்கியப் பயன்பாடு)

  • அந்தாதிமேலிட் டறிவித்தேன் (திவ். இயற். நான். 1)
  • அடிமடக்கா யந்தாதித்து (மாறனலங். 267, உரை)
  • உருக்கோதை மேனிக்கந்தாதியைத்தீட்டில் (குலோத். கோ. 131)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அந்தாதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

 :அந்தம் - ஆதி - செய்யுள் - பிரபந்தம் - தொடை

"https://ta.wiktionary.org/w/index.php?title=அந்தாதி&oldid=896688" இலிருந்து மீள்விக்கப்பட்டது