அமீனா
அமீனா (பெ)
- உரிமையியல் நீதிமன்றத்தின் கட்டளைகளை உரியவரிடம் வழங்குவது போன்ற பணிகளை நிறைவேற்றுகிற ஒர் அலுவலர்
- நிலுவை, வராக்கடனாக நிற்கும் பணத்தை ஏலம் முதலியன செய்து வசூல் செய்யும் அலுவலர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- subordinate officer employed by civil courts for various purposes such as to sell or deliver up possession of immovable property, carry out legal processes as a bailiff
- subordinate officer employed to collect arrears of revenue under a coercive process
விளக்கம்
பயன்பாடு
- ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் விளங்கவே விளங்காது என்பது பழமொழி. அமீனா என்பவர் நீதிமன்றத்தில் பணிபுரியும் சிப்பந்தி. (டவாலி என்பார்கள் ). நீதி மன்ற அறிக்கைகளை நம்மிடம் சேர்ப்பிப்பவர். வீடு ஏலம், நகை ஏலம் மற்றும் ஏதேனும் வில்லங்க விவரங்களை வீட்டுக்கு அது தொடர்பான அதிகாரிகளுடன் கொண்டு வந்து அறிவிப்பவர்.எனவே அவர் வீட்டுக்கு வந்தாலும் ஏதோ கெட்ட செய்திதான் கொண்டு வருவார் என்பதற்காக மேற்சொன்ன பழமொழி விளக்கம் தருகிறது., ([1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அமீனா--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:அமீன் - நீதிமன்றம் - அலுவலர் - ஏலம் - வில்லங்கம்