இரலை (பெ)

  1. கலைமான்
  2. புல்வாய்
    இரலையுங் கலையும் புல் வாய்க் குரிய (தொல்காப்பியம் பொ. 600)
    இரலை... யுகள (குறுந்தொகை. 65)
  3. ஆண் மான், கொம்புகளை உதிர்க்கா மானினம் (எ. கா.) duiker
  4. துத்தரி யென்னும் ஊதுகொம்பு
  5. அசுவினி நட்சத்திரம்; அச்சுவினி
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. stag
  2. a kind of deer
  3. male antelope
  4. horn; a wind instrument
  5. The first nakṣatra

(இலக்கியப் பயன்பாடு)

  • வரகின்
கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை
அரலை அங்காட்டு இரலையொடு (நற்றிணை 121) - வரகின் கவைத்த கதிர்களைத் தின்ற, கண்டார் விரும்பும் இளைய பிணை மான் மரல் வித்துக்கள் உதிர்ந்து கிடக்கும் அழகிய காட்டின் கண்ணே கலையொடு மகிழ்ந்து விளையாடாது நிற்கும் இப் புறவத்தின்கணுள்ளது (உன் ஊர்).


( மொழிகள் )

சான்றுகள் ---இரலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=இரலை&oldid=1100807" இலிருந்து மீள்விக்கப்பட்டது