உண்டக்கட்டி
பொருள்
உண்டக்கட்டி(பெ)
- கோயில்களில் வழங்கப்படும் (இலவச) உணவுப் பொட்டலம்
- பயனற்ற, உழைக்காது திரியும் ஆண்மகன்; தண்டச்சோறு; ஊர்சுற்றி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- free food offered to devotees at temple
- useless, good-for-nothing fellow
விளக்கம்
- பயன்பெறாது, உழைக்காது திரியும் ஆண்மகனை "உண்டக்கட்டி"என்று இழிந்த பொருளில் சாடுவது தமிழர் வழக்கு. இப்பெயர் மருவியது சுவையான மாற்றமாகும். முற்காலத்து அரண்மனைகளில் ஒவ்வொரு வேளையும் அரசர் சாப்பிடுமுன் அவருக்காகச் சமைக்கப்பட்ட உணவு வகைகள் நச்சுத்தன்மை இன்றி உள்ளதா என்பதைச் சோதித்துப் பார்ப்பதுண்டு. அச்சோதனை, அவ்வரண்மனையில் நியமிக்கப்பட்ட இரு (சாப்பாட்டு ராமர்) ஆடவர்களை உண்ண வைத்து மேற்கொள்ளப்படும். சாப்பிட்டபின் அவர்களுக்கு விபரீதம் ஏதும் நேரவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே, அவ்வுணவு வகைகள் அரசருக்குப் பரிமாறப்படும். அவ்வாறு சோதனைக்காகச் சாப்பிட்டுக் காட்டுபவர்களுக்கு "உண்டு காட்டிகள்" என்று பெயர். இத்தகைய "உண்டு காட்டி" என்ற பெயரே பிற்காலத்தில் "தண்டச்சோறு" என்றும் வழங்கலாயிற்று. கோயில்களில் வழங்கப்படும் கோயில் பணியாளர்களுக்கான உணவுத் தொகுதியும் "உண்டக்கட்டி" எனப்பட்டது. (நல்ல தமிழ்ச் சொற்கள் அன்றும் இன்றும், முனைவர் ச.சுப்புரெத்தினம், தமிழ்மணி, 27 பிப் 2011)
பயன்பாடு
- "கோயில் கோயிலா சுத்தி உண்டக்கட்டி, அன்னதானம் சாப்பிட்டு பழகினதால.." ([1])
- "அந்தக்காலத்திலே யானைய பட்டத்துயானையா வச்சிருந்தாங்க. இன்னைக்கு உண்டக்கட்டி குடுத்து யானைய வளக்கலாம்னு நெனைக்கறானுங்க. பத்து பைசாவ யானை கையிலே குடுக்கறானுங்க அற்ப பதர்கள்". (யானைடாக்டர், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உண்டக்கட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:அன்னதானம் - பிரசாதம் - தண்டச்சோறு - உண் - கட்டி - ஊர்சுற்றி