உண்ணாவிரதம்
பொருள்
உண்ணாவிரதம் ,
- நோன்பு காரணமாக உணவு அருந்தாமல் விரதம் மேற்கொள்ளுதல்
- கோரிக்கையை வலியுறுத்த அல்லது எதிர்ப்புத் தெரிவிக்க அகிம்சை வழியில் உண்ணாமல் இருந்து போராட்டம் நடத்துதல்; விரும்பிய காரியத்தைச் சாதிக்கப் பட்டினி கிடக்கை; பட்டினிப் போராட்டம்;
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- fasting as a religious observance
- hunger strike
விளக்கம்
பயன்பாடு
- சுதந்திரப் போராட்டக் காலத்தில் சர்வ வல்லமை படைத்த ஆங்கில அரசாங்கத்தையே கதிகலங்க வைத்தது காந்தியின் உண்ணாவிரத அறப்போராட்டங்கள்தான். அவர் ஒருநாள், இருநாள் அல்ல, கோரிக்கை நிறைவேறும் நாள் வரை அஹிம்சை வழியில் தன் உடலை வருத்தி, உண்ணாநோன்பு இருந்து பலமுறை வெற்றி கண்டுள்ளார். (இதுவா உண்ணாவிரதம்?, தினமணி, 27 நவ 2010)
- (இப்போது) பொதுவாக உண்ணாவிரதம் என்பது, காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணிவரை உண்ணாநோன்பிருந்து போராடுவது வழக்கம். ஆனால், இங்கு நடந்த உண்ணாவிரதம் தொடங்கியதே காலை 11 மணிக்குத்தான் (இதுவா உண்ணாவிரதம்?, தினமணி, 27 நவ 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உண்ணாவிரதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +