எங்ஙனம்
பொருள்
எங்ஙனம்
- எவ்வாறு
- எங்ஙன மறந்துவாழ்கேன் (திவ். திருமாலை, 23).
- எவ்விடம், எத்தன்மை
- சிறுவர்க ளெங்ஙனம் போயினார் (கந்தபு. தக்கன்மக. 52).
- எப்படி?
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உயிர்மெய் எழுத்துகளில் க,ச,த,ந,ப,ம,வ,ய,ஞ,ங எனும் பத்து மட்டுமே சொல்லின் முதல் எழுத்தாக வரக் கூடியவை. இவற்றுள் "ங" மொழி முதலில் எப்படி வரும் என்று ஐயம் தோன்றலாம். அ,இ,உ, எ, யா என்பனவற்றோடு இணைந்து அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம் என வரும் என இலக்கணம் இயம்புகிறது. ஞ எனும் எழுத்து ஞாயிறு, ஞாலம், ஞான்று, ஞிமிறு (வண்டு) ஞமலி (நாய்) எனப் பல சொற்களில் வருதல் காணலாம். .(பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, தினமணிக்கதிர், 12 டிச 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---எங்ஙனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +