கன்னியாகுமரி என்பது இந்தியாவின் தென் கோடியில் உள்ள ஒரு கடற்கரை நகரமும், மாவட்டமும் ஆகும்...இது ஒரு சுற்றுலா சார்ந்த நகரம்...கன்னியாகுமரி என்ற பெயர்ச்சொல் 'இளம் பெண்' என்ற பொருள் தரும் வட மொழிச் சொல்லாகும்...இயற்கைப் பேரெழில் கொஞ்சும் மாவட்டம்...இந்தியப்பெருங் கடல், அரேபியக்கடல், வங்காள விரிக்குடா ஆகிய மூன்று கடல்களும் சங்கமிக்கும் ஓர் இடம்...இங்கு சித்திரா பௌர்ணமி நாளில் திரிவேணி சங்கமம் கடற்கரைப் பகுதியில், சூரியன் மறையும், சந்திரன் எழும் அரியக் காட்சியை, ஒரே சமயத்தில் கண்டுக் களிக்கலாம்...இந்தியாவைப் பொறுத்தமட்டில் கன்னியாகுமரியில் மட்டுமே இந்த அபூர்வ காட்சியை காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது...இறைவி துர்க்கையின் ஒரு வடிவமான கன்னியாகுமரி எனும் பெண் தெய்வத்தின் காவலில், மீண்டுமொரு கடற்கோள் வராமல், பாதுகாப்பாக உள்ளதாகக் கருதப்படும் நகரம்/ஊர்...ஏற்கனவே இரு முறை, இந்த ஊருக்குத் தெற்கேப் பரந்து விரிந்திருந்த தமிழகத்தைப் பெருங்கடல் விழுங்கிவிட்டதாகக் கருதப்படுகிறது...