குடியிருப்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குடியிருப்பு (பெ)
- மக்கள் வசிப்பதற்காக ஒரே மாதிரியாகக் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு, குடிவெளி, வீட்டுவெளி
- வசிக்கும் வீடுகள் கொண்ட பகுதி/பரப்பு
- குடியிருக்கை
- வாழ்வு, இருப்பு
- கிராமம்
- சில இனத்தவர், நாட்டவர் தமக்கென்று இருப்பிடங்கள் அமைத்து வாழ்ந்துவரும் இடம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- residential flats; colony, housing
- settlement, quarters occupied by a special class, as ryots or military people
- living, residing
- life, existence
- village
விளக்கம்
பயன்பாடு
- பரந்து விரிந்திருந்த ஊர். குன்றின் மேற்குப்புறம் சிறிய ரயில்வே நிலையம். அதையடுத்து ஒழுங்காய், வரிசையாய் ஒரே மாதிரியாகத் தோன்றும் மில் தொழிலாளர்கள் குடியிருப்பு வீடுகள்.
(குறிஞ்சி மலர், தீபம் நா. பார்த்தசாரதி)
- கடையின் பின்பகுதி விசாலமான வீடு போல அமைந்திருந்தது. பிரமநாயகம் அங்கேதான் குடியிருப்பு வைத்துக் கொண்டிருந்தார். (பிறந்த மண், தீபம் நா. பார்த்தசாரதி)
- கோப்பையிலே என் குடியிருப்பு (திரைப்பாடல்)
- வாடகைக் குடியிருப்பு மாதிரித் தேகம் நமக்குச் சொந்தமில்லாதது. (குறிஞ்சி மலர், தீபம் நா. பார்த்தசாரதி)
(இலக்கியப் பயன்பாடு)
- அதன் பகுதியாகிய குடியிருப்பும் (தொல். பொ. 114, உரை)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குடியிருப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:வசிப்பிடம் - சேரி - இருப்பிடம் - # - #