குணில்
பொருள்
குணில்(பெ)
- குறுந்தடி
- கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க்கும் (ஐங்குறு. 87).
- பறை அடிக்கும் கோல்; கடிப்பு
- குணில்பாய் முரசி னிரங்கு மருவி (புறநா. 143,9).
- கவண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- குச்சி, கம்பு எனும் சொற்கள் நாமறிந்தவை. குணில் பழந்தமிழ்ச் சொல்.
- அணில் தெரியும்; குணிலா என்ன அது? "உருள்கின்ற மணிவட்டைக் குணில் கொண்டு துரந்தது போல்" என்பது சிலப்பதிகாரத் தொடர். உருள்கின்ற சக்கரத்தை ஒரு குச்சி கொண்டு சுற்றினால் மேலும் விரைந்து உருளும் அல்லவா? அதுதான் இது. கண்ணகிக்குச் சிலை வடிப்பதற்கு இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டி வர வேண்டும் என்று நினைத்திருந்த சேரன் செங்குட்டுவனின் எண்ணத்தை உருள்கின்ற சக்கரம் என உருவகப்படுத்தியுள்ளார். வடபுல மன்னர் கனக விசயர் தமிழரசரின் வீரத்தை இகழ்ந்து பேசினர் என்னும் செய்தியைக் கேட்டது, உருள்கின்ற சக்கரத்தை ஒரு கோல் (குச்சி) கொண்டு சுழற்றியது போல் அவனது நினைவை இன்னும் வேகப்படுத்தியது. (பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம் - 73, தினமணிக்கதிர், 08 சன 2012)
- கன்றுக் குணிலா எறிந்தாய் கழல் போற்றி! - ஒரு சமயம், மாடு-கன்றுகளை காட்டுக்கு ஓட்டிச்சென்றபோது, வழியில் ஓர் அசுரன் விளாமரமாகவும், ஓர் அசுரன் கன்றுக்குட்டியாகவும் வர, கன்றைப் பிடித்து விளாமரத்தின் மேலே குணிலாக எறிந்தான். அப்போது கால் வைத்துக்கொண்ட அழகுக்கு "கழல்போற்றி" என்று பல்லாண்டு கூறுகிறாள் ஆண்டாள் (ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 24, தினமணி, 09 சன 2012)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குணில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- குச்சி, கம்பு, தடி, குண்டாந்தடி, கோல்