கூத்தாடு
கூத்தாடு (வி)
- நடனம் ஆடு; நடி
- மகிழ்ச்சிமிகுதல்
- செழித்திரு. அவ்வீட்டில் செல்வம் கூத்தாடுகிறது.
- பிடிவாதமாய் வேண்டு. தனக்கு அது வேண்டுமென்று கூத்தாடுகிறான்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- dance, act on the stage
- be elated with success, etc.
- prosper, thrive
- importune, persistently request
விளக்கம்
பயன்பாடு
- “அப்பா அப்பா இன்னும் ஒரே ஒரு ஐஸ்கிரீம்”என்று கொஞ்சி கெஞ்சி கூத்தாடினாள் அவன் மகள். ([1])
- என்ன வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று கெஞ்சிக் கூத்தாடினேன். நான் ஒன்றும் படித்த பட்டதாரியல்லவே, படிப்புக்கேற்ற வேலை தேட! (ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல்!, மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)
- நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
- நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
- கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதை
- கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி (பாடல்)
- காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே! (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கூத்தாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +