சம்பிரமம்
பொருள்
சம்பிரமம்(பெ)
- பரபரப்பு
- களிப்பு
- தீரசம்பிரம வீரா (திருப்பு. 94).
- சிறப்பு, இடம்பம், ஜம்பம்
- கல்யாண சம்பிரமம் சொல்லத் தரமன்று.
- நிறைவு
- பறங்கிப்பாஷாணம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- confusion, agitation, flurry
- elation, high spirit
- splendour, pomp, excellence
- fulness, plenty, sumptuousness, gorgeousness
- mercurius sublimatus - a mineral poison
விளக்கம்
பயன்பாடு
- சம்பிரமமாய்க் கொடு - give ostentatiously
- சம்பிரமமாய்ச் செய், நடப்பி - do a thing pompously or splendidly
- சம்பிரமமான சாப்பாடு - sumptuous food
- சம்பிரம லோலன் - pompous person
- சம்பிரமம் பண்ணு - make a display
- அலங்கார சம்பிரமங்களை பத்மினி ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தார். பொற்சரிகை வைத்த இரண்டு நிறமான பட்டுச் சேலைகளில் எதை உடுப்பது என்று தடுமாறினார். கழுத்து மணியாரத்தை எடுத்து அணிந்தார். நீலக்கல் பதித்த அட்டிகையை கட்டுவதா விடுவதா என்று முடிவெடுக்க முடியவில்லை (பத்மினியின் முத்தம், அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சம்பிரமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +