தட்டம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தட்டம் (பெ)
- மேல்வாய்ப்பல்
- உணவு உண்ணும் தட்டு; உண்கலம்
- தாம்பாளம்
- பரந்த இதழையுடைய பூ
- படுக்கை அறை; துயிலிடம்
- படுக்கை
- கச்சு
- கை தட்டுகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- teeth of the upper jaw
- eating plate, porringer
- salver
- flower, broad-petalled
- bedroom; sleeping room,
- bed, bedding
- broad tape
- clapping of the hands
விளக்கம்
பயன்பாடு
- கையகப்பையால் சுடு சோறு தோண்டி தட்டத்தில் வைத்தாள் பாக்கியம். (உப்புக் கிணறு, நாஞ்சில் நாடன்)
- சின்ன வெள்ளித் தட்டத்தில் உழுந்துவடை வந்தது (விடியும்!, திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்)
- தட்டத்தில் நின்று நடனமாடுவதோடு தலையில் செம்பு வைத்து ஆடும் நடனம் ஒருவகை. ([1])
(இலக்கியப் பயன்பாடு)
- கோங்கின் றட்டமும் (பெருங். உஞ்சைக். 57, 98)
- புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்து (நெடுநல். 126)
- வணங்கித் தட்டமு மிட்டெதிர் நடித்து (விநாயகபு. 29, 7)
- தட்டம் அதட்டம் ஆம் பிளிற்றின் உயிர் பிழிந்து உண்ணும் (சீவக சிந்தாமணி)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +