தண்டி
ஒலிப்பு
|
---|
பொருள்
தண்டி (வி)
- தண்டனை கொடு; ஒறு
- வெட்டு
- கட்டளையிடு. அவனை அவ்விதஞ் செய்யத் தண்டித்தேன்
- வருந்தி முயலு. இதிலே நன்றாய்த் தண்டிக்கிறான்.
- பரு ஆள் தண்டித்துவிட்டான்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- chastise, scourge, punish .
- cut off, sever, mutilate, hack
- order, direct
- take pains, try hard
- become fat, plump; swell in size
விளக்கம்
பயன்பாடு
- யாரையும் தண்டிக்க வேண்டாம்! யார் பேரிலும் குற்றம் இல்லை (பொன்னியின் செல்வன், கல்கி)
- ”தவறு செய்தவர்களை அல்லவா உங்கள் சட்டம் தயங்காமல் தண்டிக்க வேண்டும்? அப்பாவிப் பெண் ஒருத்தியைக் காப்பாற்றப் போனதைத் தவிர நான் வேறு எந்தத் தவறும் செய்யவில்லையே?" (புகழ்த்துறவு, தீபம் நா. பார்த்தசாரதி)
(இலக்கியப் பயன்பாடு)
- நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால் (திருவாச. 12, 4)
- தாளறத் தண்டித்த தண்டி (சிவரக. பாயி. 7)
(இலக்கணப் பயன்பாடு)
தண்டி (பெ)
- தண்டற்காரன்
- பருமன் எத்தனை தண்டி
- மிகுதி மழை தண்டியாய்ப் பெய்தது
- தரம் அவன் தண்டிக்கு இவனில்லை
- யமன்
- கருவமுள்ளவ-ன்-ள்
- நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர்
- தண்டியலங்காரம் என்ற நூலின் ஆசிரியர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- collector of dues, tax-collector
- thickness, bigness
- abundance, plenty
- degree of competence, quality, etc., of persons or things compared with each other
- Yama
- proud person
- a canonised Saiva saint, one of 63
- author of Tandialangaram, a work on rhetoric, translated from Sanskrit into Tamil
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +