தளி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தளி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- drop of water, rain drop
- first shower of rain
- cloud
- coolness
- temple, sacred shrine
- place, room
- oil-vessel of a lamp
- lamp-stand
விளக்கம்
பயன்பாடு
- எதையுமே பிரம்மாண்டமாகச் சிந்தித்துச் செயல்படுத்தும் ராஜராஜன் பெருவுடையாரின் வழிபாட்டுக்காக 407 ஆடல் மகளிரைத் தஞ்சையிலே குடியமர்த்துகிறார். தளிச்சேரிப் பெண்கள் (தளி - கோவில், சேரி- குடியிருப்பு) தளிப்பெண்கள் என்று அழைக்கப்பட்ட இவர்களுக்காக கோயிலுக்கு அருகில் தளிச்சேரியை அமைக்கிறார். (ஆடல் கலை வளர்த்த ராஜராஜன்!, ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 26 செப் 2010)
([தளி என்றால் முதன்முதலாகப் பெய்யும் சிறுதூரல் என்று பொருள். தளிப்பெண்கள் என்றால் கோயில் வளாகத்தில் தண்ணீர் தெளிப்பவர்கள் என்று பொருள். தமிழர் தம்முடைய வீட்டுவாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடும் மரபு உடையோர். இதுபோன்று கோயிலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போடும் பெண்டீரே தளிப் பெண்டீர் ஆவர்])(இலக்கியப் பயன்பாடு)
- தளிபொழி தளிரன்ன (கலித். 13)
- தளிபெருகுந் தண்சினைய பொழில் (பரிபா. 8, 91)
- தளியிற் சிறந்தனை (கலித். 50, 16)
- காமர்சாலை தளிநிறுமின் (சீவக. 306)
- அடிசிற் றளியா னெய்வார்ந்து (சீவக. 2579)
(இலக்கணப் பயன்பாடு)
தளி (வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நுண்மழை தளித்தென (ஐங்குறு. 328).
- ஆரியாக வஞ்சாந்தந் தளித்தபின் (சீவக. 129)
- ஆதிப்பிரானைத் தளிந்தவர்க்கல்லது தாங்கவொண்ணாதே (திருமந். 527)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +