துலாபாரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
துலாபாரம்(பெ)
- காணிக்கை வழங்கும்பொருட்டு ஒருவர் ஒரு தட்டில் மதிப்புடைய பொருட்களையும் ஒரு தட்டில் தாமுமாக இருந்து நிறுக்கும் சடங்கு;
- அப்படி எடைக்கு எடை வழங்கிய கொடை/தானம்/காணிக்கை; எடைக்கு எடை காணிக்கை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ceremony of weighing a person against valuable articles, which is then offered as a gift
- such an offering
விளக்கம்
பயன்பாடு
- பட்டுப்புடைவை, தங்கமாலை, துலாபாரம், எடைக்கு எடை ஏதாவது ஒன்று என எத்தனை விதமாக நீங்கள் கடவுளுக்கு காணிக்கை செலுத்துவீர்களோ, அதேபோல உங்கள் கோபத்தை ஒரு கற்பனைத் தட்டில் வைத்து கடவுளின் காலடியில் கொட்டி விடுங்கள் ([1])
- அப்பெண்ணின் நிறைக்கு நிறை (துலாபாரம்) தங்கம் தருவதாகவும், 81 யானைகள் தருவதாகவும் பெண்ணின் தந்தை கெஞ்சிப் பார்த்தார். ஆனால் ஈவு இரக்கமற்ற நன்னன் அப்பெண்ணின் மரண தண்டனையை நிறைவேற்றினான். ([2])
(இலக்கியப் பயன்பாடு)
- துலாபுருஷமண்டபங் கட்டித் துலாபாரந் தூக்கி(கோயிலொ. 12)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---துலாபாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +