துவரைக்கோமான்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- துவரைக்கோமான், பெயர்ச்சொல்.
- (துவரை+கோமான்)
- இடைச்சங்கப் புலவருள் ஒருவர் (இறை. 1, பக். 5.)
விளக்கம்
தொகு- கடல் கொண்ட கபாடபுரத்தைத் நகராகக்கொண்டு பாண்டியர்கள் ஆட்சிசெய்தபோது இருந்த இரண்டாம் தமிழ்ச்சங்கத்தில் துவரைக்கோமான் என்பவர் இருந்தார் என இறையனார் அகப்பொருள் உரை சொல்லுகிறது...இந்தக்கூற்றை ஆராய்ந்த அறிஞர்கள் அவர் இறைவன் கண்ணபிரான்தான் என்பர்...துவரை என்றால் இன்றைய குசராத் மாநிலத்தை ஒட்டிய கட்சு வளைகுடாக் கடலினுள் ஏறக்குறைய கி.மு.1000-ம் ஆண்டு வாக்கில் முழுகிய ஒரு நகரம் என்றும் கோமான் என்றால் அந்த நகரை நிர்மாணித்து ஆட்சி புரிந்த கண்ணபிரான் என்பதும் அவர்களுடைய முடிவு...பிறிதொரு வாதமும் உள்ளது...அது கபாடபுரம் துவரையம்பதி என்றும் அழைக்கப்பட்டதால் அந்நகரை ஆண்ட பாண்டியமன்னன் துவரைக்கோமான் என்று அழைக்கப்பட்டார் என்றும் அவர்தான் இரண்டாம் தமிழ்ச்சங்கத்தில் வீற்றிருந்தார் என்பதாகும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +