நுளம்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நுளம்பு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- "கொசு' என்ற சொல் தமிழகம் எங்கும் வழக்கத்தில் உள்ளது. "கொசுகு' என்பது பழஞ்சொல்லாகும். இதைச் சில இடங்களில் "சுள்ளான்' என வழங்குகின்றனர். இன்னும் சில இடங்களில் இரண்டையும் வேறுபடுத்தி உருவில் மிகச் சிறியதாக உள்ளனவற்றைக் "கொசு' என்றும், வலிக்கும் அளவுக்குக் கடிக்கும் அதே இனத்தைச் "சுள்ளான்' என்றும் வழங்குகின்றனர். இந்த இரு வழக்கும் அவ்வளவாக இல்லாமல், இலங்கையில் கொசுவை "நுளம்பு' என்று வழங்குகின்றனர் (நல்ல தமிழ்ச் சொற்கள் அன்றும் இன்றும், முனைவர் ச.சுப்புரெத்தினம், தமிழ்மணி, 27 பிப் 2011)
பயன்பாடு
- அவளுக்கு நுளம்பு கடித்து மலேரியாக் காய்ச்சல் பிடித்தது. மருத்துவ மனைக்கு ஓடினோம். (உடனே திரும்பவேண்டும் அ. முத்துலிங்கம்)
- நான் ஒருநாள் இரவு வெளிவிறாந்தையில் பாய் விரித்து படுத்திருந்தேன். அம்மா அப்படி படுக்க என்னை விடுவதில்லை ஆனால் அன்று எப்படியோ சம்மதம் பெற்றிருந்தேன். காலையில் எழும்பும்போது உடம்பில் ஒட்டியபடி செத்த நுளம்பும் ரத்தமும் இருக்கும். அந்த ரத்தம் என்னுடைய ரத்தமா நுளம்பின் ரத்தமா என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. (எங்கள் வீட்டு நீதிவான், அ. முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நுளம்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +