பாணன்
ஒலிப்பு
|
---|
பொருள்
பாணன், (பெ).
- பாடல் வல்ல ஒரு சாதி
- தையற்காரன், பாணான்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- பாண் என்ற மூலத்திலிருந்து.
- பன்மை' பாணர்கள்
பயன்பாடு
- சங்க இலக்கியத்தில் பாணர்கள் பற்றி வரும் குறிப்புகளைக் கொண்டு இவ்வாறு அடையாளப்படுத்தலாம். இவர்கள் ஒரு தனி சாதி. தொழில் ஊர்கள் தோறும் சென்று வீரர்களையும் மன்னர்களையும் புகழ்ந்து பாடுவது. இவர்களின் துணைவி விறலி அல்லது பாடினி அவள் நடனமும் ஆடக்கூடியவள். நாடு என்ற எல்லைகள் இல்லாத சுதந்திரமான கலைஞர்களாக இவர்கள் இருந்தார்கள். (இலியட்டும் நாமும்-1, ஜெயமோகன்)
- அபிதானசிந்தாமணியில் பாணர்களைப்பற்றிய தகவல் இவ்வாறு உள்ளது. இவர்கள் இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என மூன்றுவகை [ அதாவது பாடகர், யாழ் வாசிப்பவர், பறை வாசிப்பவர் என மூன்றும் மூன்று உபசாதிகளாக ஆகிவிட்டிருக்கின்றன!] திருநெல்வேலி முதலிய பகுதிகளில் இவர்கள் தையல் தைத்து வாழ்கிறார்கள். பழங்காலத்தில் இவர்கள் அரசர்களைப் பாடிப் பரிசில்பெற்று வாழ்ந்தார்கள். தற்காலத்திலும்கூட இவர்களில் சிலர் கூத்து ஆடி வாழ்கிறார்கள். இவர்களில் சிறந்த சிவனடியார்களும் இருந்தார்கள். அவர்கள் பாணபத்திரர், நீலகண்டயாழ்ப்பாணர். (இலியட்டும் நாமும்-1, ஜெயமோகன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- தென்னிசைபாடும் பாணன் (திருவாலவா. 56, 7)
- கூத்தரும் பாணரும் (தொல். பொ. 91)
- (இலக்கணப் பயன்பாடு)
'
ஒலிப்பு
|
---|
பொருள்
பாணன், (பெ).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- பாழ் என்ற மூலத்திலிருந்து.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- இங்கோர் பார்ப்பெனப் பாணனேன் படிற்றாக்கையை விட்டு (திருவாச. 5, 44)
- (இலக்கணப் பயன்பாடு)
- பண்ணவன் - பாடகன் - பாடினி - தையற்காரன் - வீணன் - பாணபத்திரன் - #
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +