பொருள்

விக்கல்(பெ)

விக்கலை உண்டாக்கும் உதரவிதானம்
  • தொண்டை விக்குகை - மனிதர்களில் திடீரென நுரையீரலுக்குள் காற்று புகும் போது எபிகிளாட்டிஸ் மூடிக் கொள்வதால் உண்டாகும் “ஹக்“ என்ற சத்தம். ஒரு நிமிடத்தில் உதரவிதானம் பலமுறை சுருங்குவதால் உண்டாகிறது.வயிற்றையும், மார்பையும் இணைக்கும் பகுதிக்குதான் உதரவிதானம் என்று பெயர். இந்தப் பகுதியில் ‘ப்ரெனிக் நெர்வ்ஸ்’ (Phernic nerves) என்ற நரம்புகள் உள்ளன. இதேபோல ‘டயாஃப்ரம்’ (Diaphragm) என்ற தோல் போன்ற ஒரு தசையும் நம் மார்பக பகுதியில் உள்ளது. ப்ரெனிக்ஸ் நரம்புகளில் திடீரென்று ஏற்படும் ஒருவித ‘எரிச்சல்’ (irritation) காரணமாக டயாஃப்ரம் திடீரென்று வேகமாகச் சுருங்கும். அப்போது அதிகப்படியான காற்று நுரையீரலுக்குள் செல்கிறது. இதனால் டயாஃப்ரம் தசை இழுத்துக்கொள்கிறது. இதன் காரணமாக ஏற்படுவதே விக்கல்.
  • விக்கலை நிறுத்த தண்ணீரையோ ஒரு பிடி உணவையோ விழுங்கும்போது மேற்சொன்ன செயல்பாட்டில் தடங்கல் (Distraction) ஏற்பட்டு ப்ரெனிக்ஸ் நரம்புகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதால் விக்கல் நின்றுவிடுகிறது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நெஞ்சே விக்கல் வராது கண்டாய் (அருட்பா, vi, நெஞ்சொடுகிள. 10).

ஆதாரங்கள் ---விக்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

 :விக்கு - இருமல் - தும்மல் - கொட்டாவி - ஏப்பம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்கல்&oldid=1636439" இலிருந்து மீள்விக்கப்பட்டது