விக்சனரி:ஆலமரத்தடி/2007
இது பழைய ஆலமரத்தடி உரையாடல்களின் தொகுப்பாகும். வராலாற்றுத் தொடர்ச்சிக்காக இங்கே பேணப்படுகின்றன. புதிய தலைப்புகளை ஆலமரத்தடியில் தொடங்கவும். இப்பக்கம் கவனிக்கப்படுவதில்லை. |
2006 | 2007 | 2008-2009 |
2010/1 | 2010/2 | 2011 |
2012 | 2012/2 | 2013/1 |
2014/1 | 2015/1 | 2016/1 |
2017 - 2018 - 2019 | 2020 - 2021 - 2022 |
2023 - 2024 - 2025 |
விக்சனரி விளக்க நிகழ்படம்
தொகுவிக்சனரி விளக்க நிகழ்படம் --ரவி 19:13, 26 ஜூலை 2007 (UTC)
நிகண்டுகளும் சொல் வரிசையும்
தொகுவிக்சனரியில் முதலெழுத்தின் வரிசையிலேயே சொற்கள் வரிசைப் படுத்தப் படுகின்றன, ஆனால், நிகண்டுகளில் எதுகை வரிசையில் அமைந்த சொற்தொகுப்புகளைப் பார்த்தேன், இது போன்ற வரிசையில் சொற்களை அமைக்கவோ தொகுக்கவோ தமிழ் விக்சனரியில் இயலுமா? இயைபு வரிசையையும் கருத்தில் கொள்ளலாம். V4vijayakumar 20:45, 1 அக்டோபர் 2007 (UTC)
- நீங்கள் தந்துள்ளது நல்ல ஆலோசனை. இதைச் செய்வதற்கு மீடியா விக்கி மென்பொருளில் வழி இருக்கிறதா என்று தேடிப் பார்ப்போம். இல்லாவிட்டால், அவ்வசதியை உருவாக்க முடியுமா என்றும் பார்ப்போம். இது போன்ற உரையாடல்களை இனி விக்சனரி:ஆலமரத்தடி பகுதியில் செய்யலாம். இந்தப் பேச்சுப் பக்கத்தில் முதற்பக்கம் குறித்த உரையாடல்களை மட்டும் மேற்கொள்வோம். நன்றி--ரவி 03:54, 2 அக்டோபர் 2007 (UTC)
- இவ்வாறான தொகுப்புக்கள் தற்காலத்தில் அவ்வளவு பயன்படாது. நிகண்டுகளில் காணப்படும் முறைகள் மனப்பாடம் செய்வதற்கானவை. நூல்கள் பரவலாகக் கிடைத்தற்கு அரிதாக இருந்த காலத்தில் இது பயன்பட்டது. இத்தகைய தொகுப்புக்களில் நேரத்தை வீணாக்கக்கூடாது என்பதே எனது கருத்து. Mayooranathan 20:23, 2 அக்டோபர் 2007 (UTC)
நிகண்டுகள் ,தமிழின் வேர்ச்சொற்களைக் காணப் பயன்படுத்தலாம்.'நேரம் வீணாகும்' என்பதில் எனக்கு உடன்பாடில்லை.தமிழின் நுண்ணறிவு (nano knowledge !?!), இவற்றினைக் காணும் போது எனக்கு வியப்பும்,வெட்கமும் ஏற்படுகிறது.உதாரணமாக, இலை(leaf),பூ(flower),காய்(???),கனி(fruit).காய்கறி (vegetable).ஆங்கிலத்தில் இல்லாதவை, தமிழில் ஏராளம்.அதனால் தான் போப் ,தமிழ் மாணவன் என்று தனது கல்லறையில் எழுதச் சொன்னார்.
தகவலுழவன் 04:24, 7 டிசம்பர் 2007 (UTC)
தானியியங்கி முறையில் சொற்களைச் சேர்ப்பது
தொகுநான் சில சொற்களை விக்சனரியில் சேர்த்தேன். ஒவ்வொரு சொல்லாக சேர்ப்பது கடினமாகத் தெரிகிறது. மேலும் நான் சேர்க்கும் சொல்லிற்கு நானே உறுதி கூற முடியாத நிலை. யாரேனும் தமிழ் அகரமுதலியின் உள்ளடக்கத்தை இலவசமாகவோ, அல்லது, ஏதேனும் ஒரு விலையிலோ விக்சனரிக்குத் தர முன்வந்தால், அதைக் கொண்டு விக்சனரியை ஓரளவேனும் நிறந்த சொற்கள் கொண்டதாக மாற்ற முடியும்.
விக்கி எந்திரங்களை வைத்து சில சோதனைகள் செய்து வருகிறேன். தானியங்கி (automated) முறையில் சொற்களை விக்சனரியில் சேர்க்க முடியுமா எனத் தெரிவிக்கவும். மேலும் இது போன்ற சோதனைகள் பிறமொழி விக்சனரிகளில் ஏதும் செய்யப் பட்டுள்ளதா? அதன் விளைவு, அணுபவங்கள் இவற்றைத் தெரிவிக்கவும்.
சோதனைப்பக்கம்1 என்றவாறு பயன்படுத்துவது ஆங்கில விக்சனரியில் வழக்கம். --V4vijayakumar 05:29, 3 அக்டோபர் 2007 (UTC)
- முதலில் நீங்கள் குறிப்பிட்டபடி உள்ள சோதனைப்பக்கங்களில் சில தானியக்கத் தொகுப்புகளை செய்து பார்த்து விட்டு, அது குறித்த பிற பயனர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ப, பிறகு தாராளமாக தானியக்கத் தொகுப்புகளைச் செய்யலாம். user:Sundar, user:Natkeeran ஆகியோர் விக்கியில் தானியக்கத் தொகுப்பு குறித்து அறிந்தும் சிந்தித்தும் வருகிறார்கள். அவர்களுடன் ஒருங்கிணைந்தும் செயல்படலாம். தமிழ் விக்சனரியில் நீங்கள் காட்டும் ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து உங்கள் பங்களிப்பை எதிர்ப்பார்க்கிறேன். நன்றி--ரவி 19:10, 9 அக்டோபர் 2007 (UTC)
- நான் ஆங்கில விக்கிபீடியாவை பார்த்துக் கொண்டிருந்த போது, அதிலுள்ள "en"க்குப் பதிலாக "ta" என்று மாற்றி முயற்சி செய்தேன். தமிழ் விக்கிபீடியாவில் இருந்து இங்கு வந்து விட்டேன். --V4vijayakumar 20:14, 9 அக்டோபர் 2007 (UTC)
எது சரி
தொகுபிற மொழிச் சொற்களை அந்தந்த மொழிகளின் விக்சனரிக்கு திருப்பி (redirect) விட வேண்டுமா? இல்லை, தமிழ் விக்சனரியிலேயே பொருள் கூற வேண்டுமா? --V4vijayakumar 05:29, 3 அக்டோபர் 2007 (UTC)
- நம் விக்சனரி ஒரு பன்மொழி - தமிழ் அகராதி. அதாவது எம்மொழிச்சொல்லுக்கும் தமிழில் விளக்கம் அளிப்பதே நம் நோக்கம். ஆகவே, பிற மொழிச் சொற்களை வழி மாற்றுவது இல்லை.--ரவி 19:10, 9 அக்டோபர் 2007 (UTC)
என்ன கொடும சார் இது?!
தொகுஇதைக் கேக்க யாருமில்லையா?
உதாரணமாக, சித்திரைக்கு இணை பின்வருமாறு இருக்கிறது.
பின்வருமாறு இருந்தால் நலம்.
தவறு எங்கே? உலவியிலா?
- இது குறித்த தற்காலிகத் தீர்வு தமிழ் விக்சனரி குழுமத்தில் உரையாடப்பட்டது.--ரவி 19:10, 9 அக்டோபர் 2007 (UTC)
முதலில் கட்டம் போடுங்க
தொகுநீங்கள் பயன்படுத்தும் புதிய சொற்களைச் சுற்றி கட்டம் போடுங்க, பிறகு தொகுத்துக் கொள்ளாலாம். சரியா?
அதாவது இப்படி, [ [ ] ]
--V4vijayakumar 21:14, 8 அக்டோபர் 2007 (UTC)
- நீங்கள் சொல்ல வருவதை புரிந்து கொள்ள இயலவில்லை. தகுந்த முழுச் சொற்களுக்கு அடுத்து நீங்கள் குறிப்பிட்டுள்ள குறிகளை இடுவது விக்கி உள் இணைப்புகளை உருவாக்க உள்ள குறுக்கு வழி. இவற்றைப் பொருதமான இடங்களில் பயன்படுத்துவது நன்று. எல்லா சொற்கள், முழு சொற்றொடருக்கும் பயன்படுத்துவது பொருந்தாது. நன்றி--ரவி 19:10, 9 அக்டோபர் 2007 (UTC)
- அதன் பொருள் எல்லா வார்த்தைகளைச் சுற்றிலும் கட்டம் போடுங்கள் என்பதல்ல, கட்டம் போடுவதை வலியுறுத்தும் ஒரு பதிவு என்பதால் தான் அந்த மாதிரி. :) --V4vijayakumar 19:54, 9 அக்டோபர் 2007 (UTC)
நிர்வாகத்தினருக்கொரு வேண்டுகோள்
தொகுபுதியச் சொற்களை உருவாக்கும் போது,இதனை,
(-- விக்சனரி ஒரு பன்மொழி-தமிழ் அகரமுதலி என்பதால், தமிழ் சொற்களுக்கு இணையான பிற மொழி சொற்களை மொழிபெயர்ப்புகள் பகுதியில் தருவதோடு மட்டுமல்லாமல், அத்தமிழ் சொற்களுக்கான விளக்கத்தையும் இக்குறிப்புக்கு கீழ் தமிழில் தருவது அவசியமாகும். தமிழ் விளக்கம் தந்து இப்பக்கத்தை தொகுக்கும்போது இக்குறிப்பை நீக்கி விடுங்கள் -->) நீக்குவதே கிடையாது.(காண்க - குறை,துயில்,திவலை மற்றும் பல..)
- அதனால் கருத்துச் செறிவு இல்லாமலே, புதியப்பக்கம் தோன்றி விடுகிறது.மேற்கண்டக் குறிப்பினைப் புதியச்சொற்களுக்கானப் படிவப்பக்கத்திலேயே[1]சிவப்பு வண்ணத்தில் இட்டால் நலம்.
- நீங்கள் பரிந்துரைத்துள்ள மாற்றத்தைச் செயல்படுத்தியுள்ளேன். நன்றி--ரவி 19:23, 10 டிசம்பர் 2007 (UTC)
- நமது இலச்சினையில்(logo),'TAMIZ'என்றுள்ளதே.இதிலுள்ள 'z'என்பது ரோமனைஸ்ட் (அஞ்சல்)
விசைப்பலகைப் பயன்பாட்டின் விளைவே.'ழ'விற்கு 'zh'-த்தான் பலர் ஆதாரமாகக் கூறுகின்றனர்.உதாரணங்கள் பின் வருமாறு;-
- அழகி - azhagi [2]
- தமிழா - thamizha[3]
- http://en.wikibooks.org/wiki/Tamil/Introduction
- http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D
- புது விசைப்பலகையை நோக்கி..[4]
- தகவலுழவன் 03:57, 7 டிசம்பர் 2007 (UTC)
- அது அஞ்சல் விசைப்பலகையை ஒத்து எழுதியது அல்ல. அனைத்துல ஒலிப்பு விதிமுறைகள் ஒன்றைப் பின்பற்றியே மயூரனாதன் அவ்வாறு எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன். wiktionary என்று எழுதாமல் vikcanari என்று இருப்பதையும் கவனிக்கலாம். இன்னும் தெளிவான விளக்கத்தை மயூரனாதன் தருவார் என்று எதிர்ப்பார்க்கிறேன். --ரவி 19:23, 10 டிசம்பர் 2007 (UTC)