வெளிப்பாடு
பொருள்
வெளிப்பாடு(பெ)
- மறைதலின்றி வெளிப்பட்டுத் தோன்றுகை
- ஒன்றிலிருந்து வெளிப்படுவது; வெளியீடு
- புதிதாய்க் கண்டு பிடிப்பு
- பெரியோர்க்கு அளிக்கும் பரிசு/கையுறை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- revelation, emergence, coming out, appearing in public
- output, manifestation, expression
- discovery
- presents to great persons
விளக்கம்
பயன்பாடு
- அன்பின் வெளிப்பாடு - manifestation/expression of love
- உணர்ச்சி வெளிப்பாடு - expression (of emotions)
- கனவை பிராய்டு ஆழ்மனதின் வெளிப்பாடு என்கிறார். (காட்சிகளின் புதிர்பாதை, இராமகிருஷ்ணன்)
- விழாவில் நல்ல நாடகங்கள் இருந்தன. மகத்தான நாடகங்கள் இருந்தன. ரசிக்கமுடியாத நாடகங்களும் இருந்தன. ஆனால் வசனம்,அசைவுகள், உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றில் துளியேனும் பயிற்சியின்மை எங்கும் இல்லை (திரிச்சூர் நாடக விழா, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
( சொற்பிறப்பியல் )
ஆதாரங்கள் ---வெளிப்பாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +