வெளிறு
பொருள்
வெளிறு(வி)
- வெண்மையாகு
- நிறங்கெடு
- அவன் முகம் வெளிறிப்போயிற்று
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வெளிறிப் போ - வெண்மையாகு
(இலக்கியப் பயன்பாடு)
பொருள்
வெளிறு(பெ)
- வெண்மை
- வெளிறு சேர்நிணம் (கம்பரா.கரன். 155).
- நிறக்கேடு
- வெளிச்சம்
- கதிர்வே றுணையா வெளிறுவிரவவருதிகண்டாய் (பதினொ. திருவாரூர்மும். 9)
- வெளிப்படுகை.
- வெளிறுற்ற வான்பழியாம் (திருக்கோ. 254).
- பயனின்மை.
- வெளிற்றுரை (சீவக.1431)
- அறியாமை
- ஆசற்றார் கண்ணும் . . . இன்மை யரிதே வெளிறு(குறள், 503).
- இளமை
- வெளிற்றுப் பனந்துணியின் (புறநா. 35)
- திண்மையற்றது.
- வெளிறானஇருளன்றிக்கே (ஈடு, 2, 1, 8).
- குற்றம்
- வெளிறில் வாள் (சீவக. 3074).
- வயிரமின்மை
- வெளிறி னோன்காழ்(புறநா. 23).
- வெளிற்றுமரம், அலிமரம்
- வெளிறுமுன் வித்திப் பின்னை வச்சிரம் விளைத்த லாமோ (சீவக.2613). (திவா. MSS.)
- நறுவல்லி, நறுவிலிமரம்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- whiteness
- paleness; pallor
- light
- becoming clear or manifest
- uselessness
- stupidity, ignorance
- tenderness, youth
- that which is not dense
- fault, defect
- having no hard core
- soft, pithy tree without core
- common sebesten
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வெளுப்பு - வெள்ளை - வெண்மை - வெளில் - வெளிது - வெளி - வெளிற்றுரை - வெளிற்றுமரம் - வெளிறர் - நறுவல்லி - நறுவிலிமரம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெளிறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி