அகக்காழ்
பொருள்
அகக்காழ்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- அகக்காழ் = அகம் + காழ்
- பல பொருள்களைக் குறிக்கப் பொதுவாக வழங்கப்படும் ஒரு சொல் காலப்போக்கில் ஒரு பொருளையே சிறப்பாகக் குறித்தலும் உண்டு. இதனைச் சிறப்புப் பொருட்பேறு என்பர். சான்றாக, "புல்' என்ற சொல், மூங்கில் உள்ளிட்ட புல்லினங்களுக்குப் பொதுவாக வழங்கியது. அகக்காழ் (அதாவது "வயிரம்') உடையன மரம் என்றும், புறக்காழ் உடையன "புல்' என்றும் தொல்காப்பியர் காலத்தில் வழங்கப்பட்டது. பின்னர், அருகம்புல், கோரைப்புல் என்று சிலவற்றுக்குச் சிறப்புப் பெயராக மாறியது. பிற்காலத்தில் அது "மரம்' என்று வழங்கப்பட்டது. (நல்ல தமிழ்ச் சொற்கள் அன்றும் இன்றும், முனைவர் ச.சுப்புரெத்தினம், தமிழ்மணி, 27 பிப் 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- அகக்கா ழனவே மரம் (தொல்காப்பியம் பொ lt;. 640).
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +