அங்கணம்
அங்கணம் (பெ)
- முற்றம்
- சலதாரை
- சேறு
- இடம்
- கட்டடப் பிரிவு
- இரண்டு தூண்களுக் கிடைப்பட்ட இடம்[
- நாலு தூண்களுக் கிடைப்பட்ட இடம்
- மனைக்குரிய 72 சதுர அடி அளவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- courtyard in a house
- drain, sewer
- mud
- place
- chamber, room, division of a house
- space between two pillars
- space enclosed by four pillars
- superficial measure for house sites, about 12 ft. long by 6 ft. broad
விளக்கம்
பயன்பாடு
- அகலமான கல் வேய்ந்த திண்ணைக்கு அப்பால் அங்கணத்தில் முன்மதிய வெயில் வெண்ணிற திரைச்சீலை தொங்கிக்கிடப்பது போல தெரிந்தது. பக்கவாட்டில் நீளமான திண்ணை போன்ற அறையில் தாழ்வான தூளிநாற்காலியில் பெரியவர் அமர்ந்திருந்தார். (அறம், ஜெயமோகன்)
- பெரியவர் இன்னொரு முறை வெற்றிலை போட ஆரம்பித்தார். கைகள் நடுங்கியதில் பாக்கை சீவ முடியவில்லை. கொட்டைப்பாக்கு கைநழுவி உருண்டு அங்கணத்தில் விழுந்தது. அவர் சீவல் பொட்டலத்தை பிரித்தார். (அறம், ஜெயமோகன்)
- அடுப்பங்கரைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள். அடுப்பங்கரையில்தான் அங்கணம் இருக்கிறது. அங்கணத்தில் அவள் கழுவிக்கொள்கிற சப்தம் கேட்டது ([1])
(இலக்கியப் பயன்பாடு)
- அங்கணத்து ளுக்க வமிழ்து (குறள், 720)
- ஊரங் கணநீர் (நாலடி. 175)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அங்கணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +