அடைமழை
அடைமழை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அன்று முழுதும் அடைமழை பெய்தபடியால் சாலை ரொம்ப மோசமாயிருக்கிறதென்றும், வண்டி போகாதென்றும் அநேகர் சொல்லிவிட்டார்கள். (காரிருளில் ஒரு மின்னல், கல்கி)
- மழைக்காலத்தில் கடுமையான அடைமழை, வெய்யில் காலத்தில் கடுமையான வெப்பம் என்று அமராவதியின் சூழ்நிலை இருந்தது. (ஆத்மாவின் ராகங்கள், தீபம் நா. பார்த்தசாரதி)
- அப்போது கார்த்திகை மாதக் கடைசி, ஒரு மாதம் சேர்ந்தாற்போல் அடைமழை பெய்து விட்டிருந்தது. கழனிகளில் நீர் நிறைந்து தளும்பிக் கொண்டிருந்தது. (பார்த்திபன் கனவு, கல்கி)
- கோடை காலத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும், ஐப்பசி மாதத்தில் அடைமழை பெய்யும். கார்த்திகை மாதம் கனமழை பெய்யும். ஒரு நாள் முழுவதும் தொடந்தது பெய்யும் மழையை அடைமழை அல்லது அடைத்த கதவு திறக்காத மழை என்கிறனர். ([1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அடைமழை--- DDSA பதிப்பு + வின்சுலோ +