ஆவாகனம்
வார்ப்புரு:பொருள ஆவாகனம் ,
- கோயிலில் சிலையில் எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைக்கை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- invocation to a deity, by mantras, to be present in an object; consecration/deifying of an image in a temple, making God enter into the image
விளக்கம்
பயன்பாடு
- அடுத்தநாள் விடியும் முன்பே பேச்சி பசி தீர்த்தாள். ஆயிரம் குடிசைகளும் அடிவயிற்றில் அடங்கின. அன்றுமுதல் பத்துநாள் ஆடி ஆர்ப்பாட்டம் செய்து வெறி தீர்த்தாள். பத்தாம்நாள் வாக்குத் தந்தபடி வந்து துரை முன் நின்றாள். துரை அவளை இரும்பாணியில் ஆவாகனம் பண்ணி, வேங்கை மரத்தடியில் அறைந்து நிறுத்தினான். வருஷம் தோறும் கொடையும், பவுர்ணமி தோறும் பூசையும் ஏற்பாடு செய்தான். மூடோடே மஞ்சளும், மூத்த கருங்கிடாயும், வெட்டி பூசித்து வேலையைத் தொடங்கினான். (படுகை, ஜெயமோகன்)
- பெரியவர் ஒருவர் வாழ்க்கையை முழுவதுமாக கலையில் அர்ப்பணித்துக் கொண்டு மனதில் தான் ஆடப் போகும் பாத்திரத்தை முழுவதுமாக ஆவாகனம் செய்து வேறெந்த சிந்தனையும் இன்றி வாழும் ஆட்டக்காரன் வெகு அபூர்வமாக பூரணத்தை அடைந்து விட சாத்தியமுண்டு என கூறுகிறார் (லங்காதகனம், வாசிப்பனுபவம், ஜெயமோகன்)
- பெரியவர் சொன்னது போல லட்சாதி லட்சம் மக்களுள் ஒருவனுக்கு கிடைக்கும் உன்னத நிலையில் தான் எதை மனதில் ஆவாகனம் செய்தானோ அதாகவே மாறிவிட்டானா? (லங்காதகனம், வாசிப்பனுபவம், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆவாகனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +