இரண்டகம்
இரண்டகம் (பெ)
- நம்பிக்கைத் துரோகம்; துரோகம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினையாதே
- இவரோ, உண்ட வீட்டுக்கே இரண்டகம் நினைக்கிறாரே! இவரையே நம்பியிருக்கும் மகாராணியாருக்கு இவர் செய்து கொண்டிருக்கிற துரோகம் எவ்வளவு பெரியது? இது தெரிந்தால் மகாராணியின் மனம் என்ன பாடுபடும்? எவ்வளவு வேதனை ஏற்படும்? (பாண்டிமாதேவி, தீபம் நா. பார்த்தசாரதி )
- முழு உலகமும் அவனைக் குற்றவாளி என்று நம்பியது. 'துரோகி உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவன், நாட்டைக் காட்டிக் கொடுத்த நாசகாலன்' என்று பொது மக்கள் அவனை ஏசினர். ஆனால் 'தான் குற்றமற்றவன், நிரபராதி!' என்று அபலை டிரைபஸ் ஓலமிட்டான் (ஸோலா)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இரண்டகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +