இழுக்கு
இழுக்கு (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- disgrace, reproach
- imperfection, flaw, defect
- inferiority, baseness
- evil, vice, wickedness
- forgetfulness
- slippery ground
விளக்கம்
பயன்பாடு
- தமிழன் தான் தமிழில் பேசுவதை இழுக்கு என எண்ணலாமா?
- தன்குலத்துக்கு இழுக்கு ஏற்படுத்தினான்.
- இழுக்கான பொன் னைப் புடத்தில்வைத்தெடுப்பார்கள்.
- அவள் பொறுமையை இழந்து விட்டாள். என்னைத் திட்டி, அவமதித்து வெளியே போகச் சொல்லி விட்டாள். எனது ஆண்மைக்கே இதனால் இழுக்கு ஏற்பட்டு விட்டதாக அப்பொழுது நினைத்தேன். இந்த அவமானத்தினால் நான் பூமிக்குள் புதைந்துவிட வேண்டும் என்றும் விரும்பினேன். (மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை, தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)
- வீரத்துக்குப் பெயர்போன பாண்டிய குலத்திலே பிறந்து, பல்லவ குலத்திலே வாழ்க்கைப்பட்ட வானமாதேவி தன் அருமைச் சகோதரனைத் தூங்கும்போது கத்தியால் குத்திக் கொல்லுவது அழகாயிராது. பிறந்த குலம், புகுந்த குலம் இரண்டுக்கும் அதனால் இழுக்கு உண்டாகும்! (சிவகாமியின் சபதம், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- இழுக்குடைய பாட்டிற் கிசைநன்று (நல்வ. 31)
- நூழிலு மிழுக்கும் (குறிஞ்சிப். 258).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இழுக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +