கொட்டை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொட்டை (பெ)
- விதை
- விரை; அண்டம்
- தாமரைக்கொட்டை
- பலா பூசணிகளின் பிஞ்சு
- உருண்டை வடிவம். கொட்டையெழுத்து
- மகளிர் தலையணிவகை
- கொட்டையிலந்தை
- ஆமணக்கு
- கொட்டைக்கரந்தை
- பாதக்குறட்டின் குமிழ்
- அலங்காரம் முதலியவற்றிற்காக ஆடைத்தும்பினைத் திரளமுடிந்த முடிச்சு
- ஆடைத்தும்பு
- கிடுகுதாங்கும் கால் முதலியவற்றின் தலைப்பகுதி
- யானையின் அணிவிசேடம்
- நூற்குங் கதிரின் கொட்டை
- பஞ்சுச் சுருள்
- காதுவளர்க்கும் திரி
- மகளிர் காதணி வகை
- சிறு தலையணை
- சும்மாடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- seed of any kind not enclosed in chaff or husk, nut, stone, kernel
- testicles
- pericarp of the lotus flower
- fruit-bud of the jack; very small green pumpkin; Colloq
- large rounded form, as in writing
- a gold ornament for women's hair
- கொட்டையிலந்தை
- castor plant
- கொட்டைக்கரந்தை
- knob of wooden sandals
- knots made of warp threads at the end of a cloth, as ornament, etc.
- warp threads at the [[end] of a cloth hanging loosely and not made into knots
- head of a pole used as a prop
- an ornament for elephant
- base of a hand- spindle
- rolls of cotton prepared for spinning
- plug or tent of cloth to widen the ear-holes for jewels
- a kind of ear-ornament for women
- pad for the head in carrying a load
- small round pillow, cushion
விளக்கம்
பயன்பாடு
- மாங்கொட்டை
- கொட்டைப் பல்
(இலக்கியப் பயன்பாடு)
- தாமரை வள்ளிதழ் பொதிந்த கொட்டை போல (பெருங். உஞ்சைக். 38, 258)
- பவழக் கொட்டைப் பொற்செருப் பேற்றி (பெருங். மகத. 22, 202).
- கொட்டைக்கரைய பட்டுடை நல்கி (பொருந. 155)
- மணிபுனை செம்பொற் கொட்டை (சீவக. 113)
- பட்ட மடுத்த கொட்டையொடு (பெருங். மகத. 27, 75).
- கொட்டைத் தலைப்பால் கொடுத்து (திவ். பெரியாழ். 3, 5, 1)
- பஞ்சின் நெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பி (பதினொ. திருவிடைம. மும். 19)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +