கொன்னக்கோல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொன்னக்கோல்(பெ)
- இசைக் கச்சேரியில் மத்தளச் சொற்கட்டுகளை வாயால் சொல்லும் தாளம்; வாய்த்தாளம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- vocal rhythmic beat as an accompaniment in a music concert; vocal drumming; art of vocal percussion
விளக்கம்
பயன்பாடு
- கொன்னக்கோல் இசைக்கருவி அல்ல. இது மத்தளச் சொற்கட்டுகளை வாயால் சொல்லுதல் ஆகும். (த.இ.க.க.)
- அந்த நாள் கச்சேரியில் மதுரை சோமு போன்ற பாடகர்கள் பக்கவாத்தியமாக கொன்னக்கோலை வைத்துக் கொள்வார்கள் வாத்தியங்களோடு! கொன்னக்கோல் வாசிப்பவரும் தனி ஆவர்த்தனத்தின் போது சொற்கட்டுகளை வாயினால் மிருதங்கம், கடம் கஞ்சிரா போன்ற தோல்/மண் வாத்தியத்திற்கு இணையாக வாசிப்பார். நடன நிகழ்ச்சிகளிலும் கூட பாடுபவரைத் தவிர நட்டுவனாரும் அவ்வப்போது ஜதிகளை சொற்கட்டுகளாக கூறி அதற்கேற்ப நடனம் செய்பவரும் ஆடுவார். இதுவும் ஒருவகை கொன்னக்கோல்தான். (பாகவதர் வாயில் கொன்னக்கோல், திருடன் கையில் கன்னக்கோல்!, இசையின்பம்)
- அன்றைக்கும் இன்றைக்கும் மறக்கமுடியாத ஆச்சரியத்தை தந்தது (ஜகதலப்ரதாபன் படத்தில்) பி.யு சின்னப்பா பல வேடங்களில் ஒரு காட்சியில் தோன்றியது. அவரே மிருதங்கம், அவரே கடம், அவரே வயலின், அவரே வாய்ப்பாட்டு, அவரே கொன்னக்கோல். (22 வயது, அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொன்னக்கோல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:தாளம் - சொற்கட்டு - இசை - கச்சேரி - நட்டுவனார் - கன்னக்கோல்