சிறுநீரகம்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
விளக்கம்

சிறுநீரகங்கள் மனிதனுக்கு இரண்டு உண்டு. வயிற்றின் உறுப்புகளுக்குப் பின்புறம் மேற்பகுதியில் தண்டுவடத்திற்கு இருபுறமும் ஒன்று வீதம் உள்ளது. அது அவரை விதை வடிவத்தில் காணப்படும். வலது சிறுநீரகம் இடது சிறுநீரகத்தை விட சற்று சிறியதாகவும், கீழேயும் உள்ளது. ஒரு சிறுநீரகம் சுமார் 180 கிராம் எடையும், 10 முதல் 12.5 செ.மீ. நிளமும் 86.5 செ.மீ. அகலமும் கொண்டது. ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் ஒரு மில்லியன் நெப்ரான்களைக் கொண்டது.

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

சிறுநீரகம் இரண்டு செயல்களைச் செய்கிறது. ஒன்று இரத்தத்திலிருக்கும் கழிவுகளைத் தூய்மைப்படுதி நீக்குகிறது. இரண்டாவதாக உடலிலுள்ள நீரையும், உப்பையும் ஒழுங்குப் படுத்துகிறது. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் ஒரு லிட்டருக்கு மேல் இரத்தம் சிறுநீரகங்கள் வழியாக செல்கிறது. இதில் சிறு பகுதி மட்டுமே தூய்மை படுத்தப்படுகிறது.

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிறுநீரகம்&oldid=1634406" இலிருந்து மீள்விக்கப்பட்டது