நாசம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நாசம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
சொல்வளம்
தொகு- நாசக்கேடு - நாசம் + கேடு
விளக்கம்
பயன்பாடு
- இந்திய தேசம் நாசம் அடைந்தது சகோதரச் சண்டையினால்தான். (அலை ஓசை, கல்கி)
- யார் வேலை இதெல்லாம்? வைக்கோல் படப்புக்குத் தீவைச்சு நாசம் பண்ணினது போறாதுன்னு இது வேறயா? (துளசி மாடம், தீபம் நா. பார்த்தசாரதி)
- சர்வ நாசம் - utter destruction
- பாண்டியர் சேனை சர்வ நாசம் அடைந்தது. (பொன்னியின் செல்வன், கல்கி)
- அடியோடு நாசம் செய் - destroy completely
- அவன் நம்மையும் நம் நோக்கத்தையும் அடியோடு நாசம் செய்யக் கூடியவன். (பொன்னியின் செல்வன், கல்கி)
- நாசம் செய்வதும் பின்னப்படுத்துவதும் தப்பிதம் என்று போதித்திருந்தேன். (இனி, புதுமைப்பித்தன்)
- "நாசமாகப் போ" என்று சாபம் விடுதல்(Cursing on with "Woe to you", or "Woe to thee")
- ”என்னை இக் கதிக்கு ஆளாக்கினாயே, நீ நாசமாகப் போக” என்று வசைமொழியை வீசியபடி, கைகளைப் பிசைந்து கொண்டு கலங்கினாள் குமரி. (குமரிக்கோட்டம், அண்ணா)
(இலக்கியப் பயன்பாடு)
- நாசமான பாசம்விட்டு (திவ். பெரியதி. 1, 3, 8)
- நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட
- நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே
- ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே (பாரதியார்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நாசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +