நார்மடி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நார்மடி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- cloth made of fibre, resembling silk
விளக்கம்
பயன்பாடு
- கூப்பிட்டது அவர் பெண்தான். நார்மடியும் முக்காடுமாக நின்ற பெண். முண்டனம் செய்த தலை. முப்பத்தோரு வயது. கன்னத்திலும் கண்ணிலும் இருபது வயது பாலாக வடிகிறது...( பாயசம். தி. ஜானகிராமன்)
- நான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு எதிரே இருந்த சீட்டில் நார்மடி புடவையும், நெற்றியில் வீபூதி கீற்றும் அணிந்திருந்த பாட்டி ஒருத்தி உட்கார்ந்திருந்தாள். ( முள்பாதை, தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்)
- தி.ஜானகிராமன் எழுதிய அனைத்து சிறுகதைகளிலும் அவருடைய பாயசம் சிறுகதை பிரபலமானது. அதில் மணமக்களை ஊஞ்சலில் வைத்து தள்ளும் காட்சி வரும். திருமணத்தின்போது முன்னுக்கு நிற்கமுடியாத ஊர் விதவைகள் அனைவரும் நெருக்கியடித்துக்கொண்டு ஊஞ்சல் காட்சியை பார்க்க காத்திருப்பார்கள். முக்காடு போட்டு நார்மடி கட்டிய பெண்கள் ஊஞ்சல் வைபவத்தின்போது சூழ்ந்துகொள்வார்கள். (பற்கள் , அ.முத்துலிங்கம்)
- சாமநாதுவின் மகள் வருகிறாள். அவள் விதவை. மொட்டைத்தலை. முக்காடு, பழுப்பு நார்மடி. 31 வயதுதான் ஆகிறது (பற்கள் , அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நார்மடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +